தீராத நோயையும் சுலபமாக தீர்த்து வைக்கும் மந்திரம்! உங்களால் மருந்து மாத்திரை சாப்பிடாமல் ஒரு நாள் கூட வாழ முடியாதா? அதற்கான விமோசனம் கிடைக்க நீங்கள் நிச்சயம் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.

murugan

நம்முடைய முன்னோர்கள் அன்றே சொல்லி வைத்துள்ளார்கள். இந்த கிழமைகளில், இந்தந்த வேலைகளை செய்யக் கூடாது. அப்படி செய்தால் அந்த பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்காது என்று! காலப்போக்கில் நாம் அதை எல்லாம் மாற்றி, தவறாக புரிந்து கொண்டு எல்லாவற்றையும் மூடப்பழக்கம் என்று நம்பி ஒதுக்கி வைத்து விட்டோம்‌. அந்த வரிசையில் நம்முடைய உடல்நலம் இந்தக் கிழமையில், இந்த திதியில் இந்த நட்சத்திரத்துக்கு, சரியில்லாமல் போய் விட்டால் அந்த பாதிப்பில் இருந்து நாம் வெளியில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும். எந்தெந்த கிழமைகளில் நம்முடைய உடல் நோய்வாய்ப்பட்டால், அது சீக்கிரமே குணமாகாமல் மருத்துவ செலவை இழுத்துக் கொண்டே செல்லும் என்பதை பற்றியும், அந்த நோய் விரைவாக தீர்வதற்கு என்ன பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் சற்று விரிவாக தெரிந்து கொள்ளலாமா?

docter

அவசரமாக நோய் வந்துவிட்டது, சிகிச்சைக்குச் செல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால் உயிர் இழக்க நேரிடும் என்று நமக்கு எத்தனையோ சூழ்நிலை இருக்கலாம். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உடல்நிலை கோளாறு என்று வந்தவுடன் நாம் எதையுமே சிந்திக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். இதுதான் முதல் வழி.

மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, அதன்பின்பு சற்று நிதானமாக இருக்கும் சூழ்நிலையில், யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு உடல்நலக் கோளாறு வந்த, அந்த கிழமை எது? அந்த கிழமைக்கான நட்சத்திரம் திதி என்னவென்று கொஞ்சம் பின்னோக்கி சென்று பாருங்கள். பொதுவாகவே ஞாயிற்றுக் கிழமை, செவ்வாய் கிழமை, சனிக்கிழமை இந்த மூன்று கிழமைகளில் உடல்நிலை பாதிப்புகள் தொடங்கினால், அதாவது காய்ச்சல் சளி இருமல் இப்படிப்பட்ட சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் சரி, இதற்கும் மேலே பெரிய அளவிலான உடல்நலக் கோளாறுகள் வந்தாலும் சரி, அந்தப் பிரச்சனை நம் உடம்பை விட்டு சீக்கிரம் வெளியே செல்லாது.

sunday

அடுத்தபடியாக நவமி, துவாதசி, சஷ்டி இந்த 3 திதியை கொண்ட நாளில், உடல் சரியில்லாமல் போனாலும் அதற்கான தீர்வு நமக்கு சுலபத்தில் கிடைத்து விடாது. மீண்டும் மீண்டும் மருத்துவ விரயச் செலவு ஏற்பட்டு கொண்டே இருக்கும். அடுத்தபடியாக சதயம், சுவாதி, பூரம், பரணி, ஆயில்யம், திருவாதிரை, இந்த நட்சத்திரங்களில் உடல்நிலை சரியில்லாமல் போனாலும் அதற்கான தீர்வு நமக்கு விரைவாக கிடைத்துவிடாது. அதாவது நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானம் செய்வதாக இருந்தால், மேல் சொல்லப்பட்டுள்ள இந்த திதிகளில் எந்த கிழமைகளில் இந்த நட்சத்திரத்தில் செல்லக்கூடாது என்பதே இதற்கு அர்த்தம்.

- Advertisement -

இதையெல்லாம் எத்தனைபேர் நம்புவீர்கள் என்பது தெரியவில்லை. உங்களுக்கோ அல்லது உங்களது உறவினர்களுக்கோ உடல்நிலை சரியில்லாமல் போனால், அந்த நாள் நட்சத்திரங்களை நீங்களே குறித்து வைத்து சோதித்துப் பாருங்கள். இந்த மூன்றில் இருந்து ஏதாவது ஒன்றில், அந்த கணக்கு சரியாகிவிடும்.

stars

சரி, இப்படிப்பட்ட நாட்களில் உடல்நிலை கோளாறு வந்து விட்டது. அதன் மூலம் நமக்கு உடல் உபாதைகளும், வீண் விரயச் செலவுகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆனால், நோய்க்கு மட்டும் தீர்வு கிடைக்கவில்லை என்ன செய்வது. அதற்கான பரிகாரத்தையும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

money

எப்படிப்பட்ட பிரச்சினையையும் தீர்த்து வைக்கக் கூடிய சக்தி எம்பெருமான் முருகப் பெருமானுக்கு உண்டு. அவனுடைய இந்த மந்திரத்தை உடல்நிலை சரியில்லாதவர்கள் உச்சரிக்கும் சூழ்நிலையில் இருந்தால், அவர்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். அல்லது அவருடைய உறவினர்களோ தாய்தந்தை யாரோ, உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நபரின் மீதோ அல்லது தலையின் மீது கை வைத்து பின் வரும் மந்திரத்தை உச்சரிக்கலாம். தவறு ஒன்றும் கிடையாது. உங்களுக்கான பிணிதீர்க்கும் அந்த மந்திரம் இதோ!

ஓம் பாலசுப்பிரமணிய
மஹா தேவி புத்ரா
சுவாமி வா வர சுவாஹா!

mantra-thiyanam

இவ்வளவு தாங்க. இந்த மந்திரத்தை இத்தனை முறைதான் உச்சரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்தக் கிழமையில், இந்த திதியில், இந்த நட்சத்திரத்தில், நோய் வந்தவர்கள் தான் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. தீராத நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் இந்த மந்திரத்தை பயன்படுத்தி பயன் அடையலாம். நோய் தீரும்வரை உச்சரித்து வாருங்கள். உங்களுக்கான தீர்வு விரைவில் உங்கள் கண்களுக்குப் புலப்படும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
விதி! உங்களை வாழ்க்கையில் முன்னேற விடாமல், அதல பாதாளத்தில் தள்ளிக்கொண்டே இருக்கின்றதா? அந்த விதியையும் வென்று முன்னேற, சக்திவாய்ந்த ‘ஒரு வரி, ஒரு வழி’ உங்களுக்காக!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.