தீராத நோய் தீர, மருத்துவ செலவு குறைய, ஞாயிற்றுக்கிழமை வாராகி அம்மனுக்கு இந்த ஒரு விளக்கு போட்டால் போதும்.

varahi-vilakku
- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லுவார்கள். இன்றைய சூழ்நிலையில் ஒரு மனிதன் மருந்து மாத்திரை இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது என்பதே சிரமமான விஷயம் ஆகிவிட்டது. வரக்கூடிய வருமானத்தில் பாதி மருத்துவ செலவு ஆகிறது. தீராத நோயை தீர்க்கவும் ஆரோக்கியமாக வாழவும், மருத்துவ செலவை குறைக்கவும், வராகி அம்மன் வழிபாட்டை சுலபமான முறையில் வீட்டிலிருந்தபடியே எப்படி மேற்கொள்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்ள போகின்றோம்.

கட்டாயம் ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணியில் இருந்து 7.00 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம். அப்படி இல்லை என்றால் ஞாயிற்றுக்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம். அப்படியும் முடியவில்லை என்றால் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு மேல் இரவு 9.00 மணிக்குள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு வாராகி அம்மன் சிலை கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. வாராஹி அம்மன் சிலை, திருவுருவப்படம் சில வீடுகளில் வைக்க கூடாது என்பார்கள். பரவாயில்லை, பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். சுவாமி படங்களுக்கெல்லாம் பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள்.

ஒரு தாம்பூல தட்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பள தட்டில் ஒரு கைப்பிடி பச்சரிசி நெல் போட்டு பரப்பிக் கொள்ள வேண்டும். அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் ஐந்து திரி போட வேண்டும். இப்போதெல்லாம் ஐந்து முகங்கள் வைத்த மண் அகல் விளக்குகள் கூட அழகாக கிடைக்கின்றது. அதை வாங்கி கூட இந்த வழிபாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பஞ்சமுக தேவி, பஞ்சமி தேவி, வாராஹித் தாய் என்பதால் இந்த 5 திரி தீபம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நீங்கள் ஏற்றிய இந்த தீப சுடரை வாராகி தேவியாக நினைத்துக் கொள்ளுங்கள். வாராஹி தேவியை உண்மையான பக்தியோடு அழைத்தால், நீங்கள் ஏற்றிய தீபத்தில் வாராகித் தாய் வந்து அமர்ந்து கொள்வாள். வாராஹி திருவுருவப்படம் இல்லையே என்ற மனக்கவலை வேண்டாம்.

- Advertisement -

நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் இந்த விளக்கிற்கு முன்பு அமர்ந்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இந்த விளக்கிற்கு மாதுளை பழங்களால் அர்ச்சனை செய்யலாம். அப்படி இல்லை என்றால் குங்கும அர்ச்சனை செய்யலாம். 108 முறை ‘ஓம் வாராஹி தேவையே போற்றி!’ என்ற மந்திரத்தை உச்சரித்து அர்ச்சனையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அர்ச்சனை செய்த பழங்களை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிடலாம். கூடவே இந்த பூஜையில் ஒரே ஒரு நெல்லிக்காயை நிவேதனமாக வைத்துவிட்டு அந்த நெல்லிக்காயை நோய்வாய்ப்பட்டவர்கள் யாரோ அவர்களிடம் கொடுத்து சாப்பிட சொல்லுங்கள்.

மனம் உருகி உண்மையான அன்போடு வாராகி தாயிடம் நோய்நொடி தீர வேண்டும். மருத்துவ செலவு குறைய வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தால் ஒரு சில வாரங்களிலேயே உங்களுடைய வேண்டுதலை அந்த தாய் நிறைவேற்றி வைப்பாள். வாரம் தோறும் விடாமல் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பூஜையை செய்து வாருங்கள். வாராஹித் தாயின் பாதங்களை பற்றிக்கொள்ளுங்கள்.

பூஜை நிறைவடைந்த பின்பு ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டும் அந்த தட்டில் இருக்கும் நெல் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். தீபத்தில் எண்ணெய் தீர்ந்து விட்டால் விளக்கை குளிர வைத்து விடலாம். மறுநாள் காலை அதாவது திங்கட்கிழமை காலை தட்டில் இருக்கும் நெல்லை எடுத்து காக்கை குருவிகளுக்கு இரையாக போட்டு விடுங்கள். மேல் சொன்னபடி நம்பிக்கையுடன் வாராஹி வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்று செய்பவர்கள் நோயில்லாத வளமான வாழ்க்கையை, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். இந்த பரிகாரத்தை செய்யும் போது கட்டாயமாக ஞாயிற்றுக்கிழமை அசைவம் சாப்பிடக்கூடாது. வாராகி அம்மன் வழிபாட்டிற்கு மன சுத்தம், உடல் சுத்தம், நம் வீடும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -