கறிக்குழம்பு சுவையில் இப்படி காளான் குழம்பை செய்து வைத்தால், சட்டி நிறைய சாதம் செய்தாலும் சுத்தமாக தீர்ந்துவிடும்

mashroom
- Advertisement -

அசைவம் என்றாலே அனைவருக்கும் அலாதி பிரியம் தான். ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்களின் சுவை ஒருவித நறுமணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வாசனை வந்து விட்டாலே வீட்டில் உள்ள குழந்தைகள் அம்மா இன்று என்ன சிக்கன் குழம்பா? மட்டன் குழம்பா? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட இன்று என்ன கறி குழம்பா? என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு இவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்கள் மிகவும் அருமையான நறுமணத்தை கொடுக்கின்றன. அவ்வாறு மசாலா சுவையில் இப்படி காளான் சேர்த்து ஒருமுறை குழம்பு செய்து பாருங்கள், வாசனை மட்டுமல்ல சாப்பிடவும் அசைவம் சாப்பிடுவது போல் தான் இருக்கும். எனவே குழந்தைகள் இதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த காளான் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
காளான் – கால் கிலோ, தக்காளி – ஒன்று, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், வர மிளகாய் – 2, கொத்தமல்லி தழை – இரண்டு கொத்து, தனியா – 3 ஸ்பூன், பூண்டுப்பல் – 3, இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, மிளகு – அரை ஸ்பூன், தேங்காய் – 4 சில்லு, சின்ன வெங்காயம் – 6, எண்ணெய் – 5 ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – ஒன்று, கிராம்பு – 4, சோம்பு – அரை ஸ்பூன், பெரிய வெங்காயம் – பாதி அளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் கால் கிலோ காளானை தண்ணீரில் சுத்தமாக கழுவி, அவற்றை நீளவாக்கில் அறிந்து வைக்க வேண்டும். பிறகு தக்காளி மற்றும் வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்க வேண்டும். அதன் பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும்.

கடாயில் நன்றாக சூடானதும் அதில் தனியா, மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து, இவற்றுடன் ஒரு கொத்து கொத்தமல்லி தழையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் இவற்றை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு மிக்ஸி ஜாரில் 4 செய்து தேங்காயைத் துருவி சேர்க்க வேண்டும். பிறகு இவற்றுடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு இவற்றுடன் வெங்காயம், தக்காளி, காளான் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை நன்றாக வதங்கியதும், இவற்றுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து, ஐந்து நிமிடம் வதக்கி விட்டு, தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். சிறிது நேரத்தில் அனைத்தும் நன்றாக கொதித்து மசாலா வாசனை சென்றதும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்து விட வேண்டும்.

- Advertisement -