வீட்டின் இந்த திசையில் இதை மட்டும் வைத்தால் செல்வ வளம் பெருகுமாம் தெரியுமா?

vastu-kuberan

வாஸ்துப்படி வீட்டிற்கு ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு யோகத்தை கொடுக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். அந்த வகையில் வீட்டில் எந்த திசையில் செல்வ வளம் அதிகரிக்கக் கூடிய யோகம் உண்டாகும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது? செல்வ வளத்தை அதிகரிக்க கூடிய இந்த திசையில் நாம் எந்த பொருளை வைக்க வேண்டும்? எதை எல்லாம் வைக்கக் கூடாது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

vastu 1

வாஸ்து பகவான் தலை அமைந்திருக்கும் திசை தான் வடகிழக்கு. இந்தத் திசையில் தான் செல்வ வளத்தை அதிகரிக்க கூடிய ஆற்றல்கள் உண்டு. நம்முடைய தலையில் எப்படி பாரத்தை வைத்தால் தாங்க முடியாதோ! அதே போல் வாஸ்து பகவானின் தலையில் அதாவது வடகிழக்கு பகுதியில் பாரமான பொருட்களை வைத்தால் செல்வ நிலையும் குறையும்.

ஒருவருடைய ஜாதகத்தில் குரு சந்திரன் சேர்க்கை சிறப்பாக அமைந்து விட்டால்! அந்த ஜாதகருக்கு ஜாக்பாட் அடித்தது போல் தான் பொருள்படும். அது போல் வீட்டின் வாஸ்து படி குருவாகிய மனையில் சந்திரன் ஆகிய தண்ணீரை வைப்பதால் குரு சந்திர சேர்க்கை ஏற்பட்டு செல்வ வளம் அதிகரிக்கக் கூடிய ஆற்றல் வீட்டில் பெருகும்.

chandran

வடகிழக்கு மூலையில் நீர்வீழ்ச்சி, தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் அல்லது படங்கள் மாட்டி வைத்தால்! வீட்டில் செல்வ நிலை தானாகவே உயரும் என்பார்கள். செல்வத்திற்கு அதிபதியாக இருப்பவர் மகாலட்சுமி. மகாலட்சுமி வாசம் செய்யும் கூடிய பொருள் ஏலக்காய். வடகிழக்கு மூலையில் பெரும்பாலானோர் உருளி வைப்பது வழக்கம். அது போல் உருளி அமைத்து தண்ணீர் வைத்து அதில் 11 ஏலக்காய்களை எண்ணி எடுத்து நசுக்கி போட்டு, மகாலட்சுமியுடன் ஸ்ரீமன் நாராயணனை ஆவாகனம் செய்ய துளசி இலைகளை சேர்த்து வைத்து விட்டால் போதும்! வீடு முழுவதும் மணம் பரவி செல்வ நிலை உயரும். அதன் ஆற்றல் இறுதியாக தென்மேற்கை திசையை அடையும்.

- Advertisement -

நீங்கள் எந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலும் உங்கள் வீட்டில் இப்படி செய்தால் உங்களுடைய வாழ்க்கை நிலை நிச்சயம் மாறும். தொழில், வியாபாரம், சுய தொழில், உத்தியோகம் போன்ற அனைத்திலும் உங்களுக்கு சாதகமாக பலன்கள் கிடைக்கும். இதனால் வருமானம் உயர்ந்து வீட்டில் செல்வ நிலையும் வேகமாக உயர்ந்து விடும்.

Elakkai

இவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது அதற்கு எதிரே இருக்கும் தென்மேற்கு மூலையில் வடக்கு பார்த்த படி பணம் வைக்கக் கூடிய லாக்கர் அல்லது பீரோவை வைத்திருந்தால் நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அது உங்களிடம் நிரந்தரமாக தங்கும். வீண் விரயங்கள் ஏற்படாமல் பணத்தை சேமித்து வைக்க முடியும். அங்கு பீரோவை அமைக்க முடியவில்லை என்றாலும் பணம் வைக்க கூடிய இடமாக மாற்றிக் கொள்வது மிகவும் நல்லது. அந்த இடத்தில் பணம் இருந்தால் பணம் நிலையாகத் தங்கும் என்பது வாஸ்து சாஸ்திர விதி.

Navagragham

கோவில்களில் வடகிழக்கு பகுதியில் தான் நவகிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஒருவருடைய வாழ்க்கையில் அவர் எப்படி இருக்க வேண்டும்? என்பதை தீர்மானிப்பது நவகிரகங்கள். அது போல தான் வீட்டின் வடகிழக்கில் நீங்கள் எப்படி காற்றோட்டமாக, வெளிச்சமாக, நீர் சார்ந்த பொருட்களை வைத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்தே வீட்டில் செல்வ நிலை அமையும். அந்த இடத்தில் அமரும் படியான நாற்காலி, சோபா போன்றவற்றையும் பாரமாக போட்டு வைக்கக்கூடாது. உங்கள் வீட்டின் வடகிழக்கு பகுதியை இப்படியாக பார்த்துக் கொண்டால் உங்களுடைய ஜாதகத்தில் கிரக நிலை சரியில்லை என்றாலும் இந்த வாஸ்து அதனை முறியடிக்கும் விதமாக அமையும். நீங்களும் இதை செய்து பயனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்ல எப்படிப்பட்ட வாஸ்து குறைபாடாக இருந்தாலும், அதை சுலபமாக சரி செய்துவிட முடியும். அதற்கான பரிகாரம் தான் இது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.