உங்கள் வீட்டில் பூஜை அறை இப்படி மட்டும் இருந்தால் நிச்சயமாக இறை சக்தி குறையும் தெரிந்து கொள்ளுங்கள்!

pooja-room

ஒரு வீட்டில் பூஜை அறை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பூஜை செய்வதற்கு என்றே தனியாக அறை வைத்திருப்பவர்கள் மிகவும் பயபக்தியுடன் அதனை பராமரிப்பதும் வேண்டும். பூஜை அறையில் இருக்க வேண்டிய பொருட்கள் மட்டும் தான் இருக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களை சேர்த்து வைத்தால் அங்கு இறை சக்தி குறைந்து விடும். இறை ஆற்றலை வெளிப்படுத்த அதிர்வலைகள் அந்த அறையை சுற்றிலும் எப்போதும் இருக்கும். அதனை தடை செய்யும் விதமாக சில பொருட்கள் அங்கிருப்பது நல்லதல்ல. அப்படியான பொருட்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

pooja-room

ஒரு வீட்டின் அமைதிக்கும், செல்வ வளத்திற்கும் மிக முக்கியமான காரணமாக இருப்பது அங்கிருக்கும் இறைசக்தி தான். ஒவ்வொரு முறை நீங்கள் பூஜைகள் செய்யும் பொழுது சுத்தமான மனதுடனும், வீட்டை தூய்மைப்படுத்தியும் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். தூய்மை இல்லாமல் நீங்கள் செய்யும் பூஜைகள் பலன் அளிப்பதில்லை. அதற்கு அன்றைய நாளில் நீங்கள் பூஜை செய்யாமலேயே இருந்து விடலாம்.

அது போல பூஜை அறையில் என்ன பொருட்கள் இருக்க வேண்டுமோ! அந்த பொருட்கள் மட்டும் இருந்தால் போதும். வேறு சில பொருட்களை எல்லாம், இடம் இருக்கிறது என்பதற்காக அந்த அறையில் வைக்கக் கூடாது. குறிப்பாக ஆயுதங்கள் பூஜை அறையில் வைக்கக் கூடாது. பூஜைக்கு தேவையான பொருட்களையும் மொத்தமாக வாங்கி குவித்து வைக்கக் கூடாது. உங்களுக்கு எவ்வளவு தேவையோ, அதை மட்டும் வாங்கி வைத்தால் போதுமானது.

ayuthangal-ayutham

நீங்கள் பணம் இருக்கிறது என்பதற்காக ஏகப்பட்ட பொருட்களை அடுக்கி வைப்பதன் மூலம் இறை சக்தி குறையும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. உதாரணத்திற்கு ஒரு குங்குமம் வைத்தால் கூட மொத்தமாக வாங்கி வைக்க கூடாது. பூஜைப் பொருட்களை பொறுத்தவரை எப்பொழுதும் புதிதாக இருப்பது மிகவும் நல்லது. நாளடைவில் அவைகளின் சக்தியை அது இழக்கும் என்பதால் மொத்தமாக வாங்கி வைப்பதை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

அது போல் உடைந்த பொருட்கள் கட்டாயம் இடம் பெற்றிருக்க கூடாது. பூஜை அறையில் ஒரு சிறு உடைந்த பொருள் கூட நிச்சயமாக இருக்கக்கூடாது. இது ஆன்மீக ஆற்றலை தடை செய்துவிடும். அதிலும் குறிப்பாக உடைந்த கண்ணாடி பூஜை அறையில் வைக்கவே கூடாது. உங்களுடைய சுவாமி படத்தில் விரிசல்கள் விழுந்து இருந்தாலோ, உடைந்து போய் இருந்தாலும் அதனை அருகில் இருக்கும் கோவில்களில் கொண்டு சென்று வைத்து விடுங்கள். அதனை கட்டாயம் உங்கள் வீட்டில் வைத்திருந்தால் இறையாற்றல் தடை செய்யப்படும். அது நல்ல அதிர்வலைகள் உருவாக்காது.

broken-glass

அது போல் நீங்கள் பூஜை செய்யும் பொழுது விக்கிரகங்களுக்கும், சுவாமி படங்களுக்கும் மலர்களால் அலங்காரம் செய்வீர்கள் அல்லவா? அப்படி பூக்கள் கொண்டு அலங்கரிக்கும் பொழுது சாமியின் முகமும், பாதமும் மறைக்கும் படி அலங்காரம் செய்யக்கூடாது. முகம் மற்றும் பாதம் வெளியில் தெரியும் படியாக பூக்களை சாற்ற வேண்டும். அப்படி மறைக்கும் பொழுது அந்த இடத்தில் இறையாற்றல் தடை செய்யப்படுகிறது. எனவே இந்த தவறுகளை எல்லாம் ஒருபோதும் செய்துவிடாதீர்கள். உண்மையான பக்திக்கு என்றுமே இறைவன் உங்களுடன் துணை இருப்பார்.

இதையும் படிக்கலாமே
தவறியும் இந்த நாட்களில் எல்லாம் நகையை அடகு வைத்து விடாதீர்கள்? மீண்டும் திரும்ப வராமலேயே போய்விடும். நகை அடமானம் வைக்க சிறந்த நாள் எது தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.