- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்குழந்தைகளுக்கான ஆரோக்கியம் நிறைந்த சூப்பரான நட்ஸ் பர்ஃபி எப்படி செய்வது?

குழந்தைகளுக்கான ஆரோக்கியம் நிறைந்த சூப்பரான நட்ஸ் பர்ஃபி எப்படி செய்வது?

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கியம் என்பது எவருக்குமே முழுமையாக கிடைப்பதில்லை. இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவு முறையே ஆகும். நமது முன்னோர்கள் சாப்பிட்டு வந்த உணவுகளில் எப்போதும் சத்துக்கள் அதிகமாக நிறைந்திருந்தன. ஆனால் இப்பொழுது நாம் சமைத்துக் கொடுக்கும் உணவுகளில் நமக்கு பிடித்த சுவை இருக்கிறதே தவிர, அதில் உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் எதுவும் இருப்பதில்லை. எனவே பல வீடுகளிலும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இதனை சரி செய்யும் ஒரு நட்ஸ் பர்ஃபி எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

nuts

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – அரை கப், விதை எடுத்த பேரிட்சம்பழம் – அரை கப், முந்திரி – அரை கப், பாதாம் – அரை கப், பிஸ்தா – அரை கப், உலர் திராட்சை – அரை கப், வால்நட் – அரை கப், வேர்க்கடலை – அரை கப், வெள்ளை எள் – அரை கப், தேன் – அரை கப், ஏலக்காய்த்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரைக்க பேரிச்சம்பழத்தை ஒரு கப் சுடு தண்ணீர் சேர்த்து நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேர்க்கடலை மற்றும் பிஸ்தாவில் உள்ள தோலை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் பாதாம், முந்திரி, வால்நட் போன்றவற்றை சற்று பொடியாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

dry-dates

அதன் பின்னர் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து கடாய் சூடானதும் எடுத்து வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாகப் பொடி செய்து கொள்ளவேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பினை சிறிய தீயில் வைத்துக் கொண்டு, அதே கடாயில் பாதாம், முந்திரி, வால்நட், திராட்சை அனைத்தையும் சேர்த்து ஒரு முறை லேசாக வறுத்து விட வேண்டும். பின்னர் அவற்றுடன் வெள்ளை எள் சேர்த்து நன்றாக பொரிந்து வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். எள் நன்றாக பொரிந்து வந்தவுடன் அனைத்தையும் ஒரு தட்டிற்கு மாற்றி வைத்து விட வேண்டும்.

Mixi

ஊறவைத்த பேரீச்சம்பழத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொண்டு, கடாயை அடுப்பில் வைத்து அரைத்து வைத்த பேரீச்சம்பழத்தை சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். பேரிச்சம்பழம் சற்று கெட்டியானதும் இதனுடன் வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கிளற வேண்டும். பிறகு இதனுடன் ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு முக்கால் கப்பு தேன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

தேன் சேர்த்ததும் சிறிது நேரம் கழித்து பொடித்து வைத்துள்ள ஓட்ஸை இவற்றுடன் சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும். இவை சிறிது நேரத்தில் நன்றாக இறுகி கெட்டியாக மாறும். அப்பொழுது கையில் எடுத்து உருண்டைகளாக பிடித்து பார்க்க வேண்டும். அவ்வாறு உருண்டையாக பிடிக்கும் பதத்தில் இருந்தால் உடனே அடுப்பை அனைத்து அவற்றை ஒரு தட்டில் பரப்பி வைத்து சிறிது நேரம் ஆறவைத்து உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.

nuts

இவற்றில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உலர்ந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு இதனை சாப்பிட கொடுத்து வர அனைத்து விதமான ஊட்டச்சத்து குறைபாடுகளும் நீங்கி குழந்தைகள் மிகவும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

சற்று முன்