அக்டோபர் மாத ராசி பலன் 2020

october-month-rasi-palan-new

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்கள் இந்த மாதம் சற்று பெருமையாக இருக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரமாக முடிவு எடுத்துவிட்டு, பின்பு வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை. முடிவு எடுப்பதற்கு முன்பாகவே நின்று நிதானமாக யோசிப்பது நல்லது. நிதானத்தைக் கடைப்பிடித்தால் இந்த மாதம் முழுவதும் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். மற்றபடி வீட்டில் தடைப்பட்டிருந்த, திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்க தொடங்கும். அலுவலகப் பணியில் அவ்வபோது, உடன் பணிபுரிபவர்களால், சின்ன சின்ன பிரச்சனைகள் வரத்தான் செய்யும். கண்டும் காணாமல் இருக்க வேண்டும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. எவ்வளவு உழைப்பு போடுகிறீர்களோ, அவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பூஜை அறையில் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் விநாயகரை நினைத்து தீபமேற்றுவது நன்மை தரும்.

ரிஷபம்
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதம் சுறுசுறுப்பாக செயல்பட்டு எல்லா காரியத்திலும் வெற்றி அடையப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு வந்ததற்கு இந்த மாதம் நல்ல பலன் உண்டு. வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற ஆரம்பிக்கும். சுப விரயங்களும் ஏற்படும். அதற்கேற்ற, வருமானமும் உங்கள் கைகளை வந்து சேரும். அலுவலக பணியில் நீங்கள் எதிர்பாராத சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் பங்குதாரர்களுடன் சேர்ந்து, தொழில் செய்வதாக இருந்தால், அவர்களிடம் மட்டும் சற்று ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மற்றபடி பிரச்சனைகள் எதுவும் பெரியதாக வராது. தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

மிதுனம்
midhunam
மிதுன ராசிக்காரர்கள், இதுநாள் வரை இல்லாத அளவிற்கு மிகவும் பொலிவோடு காணப்பட போகிறீர்கள். மன தைரியம் அதிகரிக்கும். பேச்சாற்றல், புத்தி கூர்மை இவை அனைத்தும், உங்களை அடுத்தவர்கள் கண்களுக்கு அதிமேதாவியாக காட்டப் போகிறது. நீங்கள் செய்யாத வேலைக்கு கூட, உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். அலுவலகத்தில் புகழ்ச்சியோ புகழ்ச்சி தான்‌. உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் அனைத்தையும், இந்த மாதத்தில் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். கிரகங்கள் அதற்கேற்றவாறு சாதகமாக உள்ளது. முடிந்தவரை திருமண பேச்சு வார்த்தைகளை மட்டும் அடுத்த மாதம் தள்ளிப் போடுங்கள். குலதெய்வ வழிபாட்டை மறக்காதீர்கள்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அமோகமான மாதமாக தான் இருக்கப் போகின்றது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே வரும். புதியதாக சொத்து வாங்கும் யோகம் கூட தேடி வரப்போகின்றது. கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் இந்த மாதத்தின் இறுதிக்குள் நல்ல முடிவுக்கு வந்துவிடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். அலுவலகத்திலிருந்து வந்த, பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். சொந்த தொழிலில் முதலீடு மட்டும் செய்ய வேண்டாம். மற்றபடி லாபத்திற்கு எந்த குறைவும் இருக்காது. நிதி நிலைமை எப்போதும் போல சீராக தான் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி நினைத்து வீட்டில் பூஜை செய்வது நன்மை தரும்.

சிம்மம்
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று சுமாரான மாதமாகத் தான் இருக்கப்போகின்றது. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். சட்டென்று வரும் முன்கோபத்தை, சட்டென்று குறைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் பிரச்சனையில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். கணவன் மனைவிக்குள் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான், வாழ்க்கை சுமுகமாக செல்லும். இல்லை என்றால் அடிதடி, கைகலப்பு தான். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை பயணங்களை தவிர்த்து கொள்ளலாம். அவசியம் பயணம் செய்ய வேண்டுமென்றால் பாதுகாப்பு கவசம் அவசியம். வெளியிடங்களில் சாப்பிடாதீர்கள். வாரம்தோறும் வரும் சனிக்கிழமைகளில் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

கன்னி
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். நீண்ட நாட்களாக தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும், எந்த ஒரு காரியத்தையும் இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கினால், நிச்சயம் நல்ல வெற்றி உண்டு. சொந்தத் தொழிலை விரிவுபடுத்த புதிய முதலீட்டைப் போடலாம். கடன் கேட்டாலும் நிச்சயம் உடனடியாக கிடைக்கும். வங்கி கடனை மட்டும் வாங்குவது நல்லது. அலுவலகப் பணி எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. நேரம் தவறாமல் சாப்பிட்டுவிட வேண்டும். வெளியிடங்களில் அதிகமாக சாப்பிட வேண்டாம். மற்றபடி இந்த மாதத்தில் அசவுகரியங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. தினம்தோறும் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதமாக தான் இருக்கப்போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக நடந்து முடியும். அவசரப்பட்டு எந்த ஒரு செயலையும் செய்து முடிக்க வேண்டாம். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அலசி ஆராய்ந்து அதன் பின்பு ஒரு முடிவெடுப்பது நன்மை தரும். முடிந்தவரை எளிமையான வாழ்க்கையை வாழ்வது நல்லது. பகட்டான வாழ்விற்கு இடம் தரவேண்டாம். பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஹெல்மெட் அணியாமல் மாஸ்க் அணியாமல் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம். கடனாக யாருக்கும் பணம் கொடுக்காதீர்கள். கடனாக நீங்களும் யாரிடமிருந்தும் பணம் வாங்காதீர்கள். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்க.

விருச்சிகம்
Virichigam Rasi
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பணத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. உங்களுடைய முன்னேற்றமும் படிப்படியாக உயர்ந்து கொண்டே தான் செல்லும். ஆனால், அடிக்கடி எங்கிருந்துதான் பிரச்சனை வருமோ தெரியாது, அப்பப்போ சின்ன சின்ன பிரச்சினைகள் தலை தூக்கி, உங்களை டென்ஷன் ஆக்கி விட்டு செல்லும். பொறுமை அவசியம் தேவை. அவசரப்பட்டு யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சில சமயங்களில் உங்கள் மேல் தப்பு இருக்காது. ஆனால், பழி உங்கள் மேல் விழும். கொஞ்ச நேரத்திலேயே அந்த தவறுக்கு நீங்கள் காரணமில்லை என்று நிரூபணமாகி விடும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மற்றபடி சுபமான மாதம் தான் இது. ஓம் முருகா! ஓம் முருகா! என்ற மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிவிரைவான முன்னேற்றமான மாதமாக இருக்கப்போகின்றது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றிதான். உங்களுடைய சொந்த தொழிலில் எதிர்பாராத அளவிற்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடு செலுத்தலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். எந்த பிரச்சனையும் வராது. பிரச்சனைகள் வந்தாலும், நீங்கள் சமாளித்துக் கொள்வீர்கள். திறமையாக செயல்படப் போகிறீர்கள். ஆனால் யாரை நம்பியும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். வாக்குக் கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். எந்த விஷயத்திலும் பொறுமையோடு பொறுப்போடு செயல்படுவீர்கள் பேச்சில் கவனம் தேவை தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்கள் இந்த மாதம் உஷாராக செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கட்டாயம் பிரச்சனை இருக்கும். இந்த வேலையை விட்டுவிட்டு, அடுத்த வேலை தேடிக்கொள்ளலாம் என்று மட்டும் நினைக்கவே நினைக்காதீங்க! வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. அனுசரித்து தான் செல்ல வேண்டும். அடுத்த மாதம் சம்பளம் வரவில்லை என்றால், அப்போது தான் ‘ஏன் வேலையை விட்டோம் என்று சிந்திப்பீர்கள்’. வேலை முக்கியம் என்பதை மனதில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் பணக்கஷ்டம் வரத்தான் செய்யும். அடுத்த மாதம் சரியாகிவிடும். தேவையில்லாத மனக் குழப்பங்களை தள்ளிவைத்துவிட்டு, சிவபெருமானை நினைத்து காலையில் பத்து நிமிடங்கள் தியானத்தில் ஈடுபடவேண்டும். மன அமைதி கிடைக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்கள் கடந்த சில நாட்களாகவே பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். பணக்கஷ்டம் மனக் கஷ்டம், வேலையில் பிரச்சனை, தொழிலில் பிரச்சனை, இப்படியே தான் உங்களுடைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதம் சற்று சுமாரான மாதமாக தான் இருக்கப் போகின்றது. இருப்பினும் தேவையற்ற செலவுகள் உங்களை வந்து தொடர தான் போகிறது. முடிந்தவரை எல்லா இடத்திலும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். யாரையும் நம்பாதீர்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய ஒரே நிம்மதி, உங்களுடைய வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். கடன் வாங்கி சொத்து வாங்கும் யோகம் உள்ளது. எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையாக இருப்பது உங்களுக்கு நல்லது.

மீனம்
Meenam Rasi
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாகவே இருக்கும். இருப்பினும் எல்லோரிடத்திலும் தைரியத்தை காட்டி விடக்கூடாது. எங்கே காட்ட வேண்டுமோ அங்கே காட்டுங்கள். எங்கே பணிந்து நடக்க வேண்டுமோ அங்கே பணிந்து தான் நடக்க வேண்டும். உங்களது தற்பெருமைகளை வெளியில் காட்டிக் கொள்ள வேண்டாம். அது என்றைக்கும் ஆபத்துதான். தேவையில்லாமல் உங்களுடைய முன்னேற்றம், அடுத்தவர்களது கண்ணை உறுத்தும். அது உங்களை பாதிக்கும். மற்றபடி எல்லா விஷயத்திலும் இந்த மாதம் நன்மை தான் நடக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் குடும்ப விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது. உங்களுக்கு நடக்கக்கூடிய நல்லதை அனாவசியமாக அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. முருகன் வழிபாடு நன்மை தரும்.