ஊறுகாய், நெய், எண்ணெய் போன்ற பிசுக்கு உள்ள பாட்டில்களை கை வைக்காமல் ரொம்ப சுலபமாக சுத்தம் செய்வது எப்படி?

oil-baking-soda
- Advertisement -

சமையல் கட்டில் சில பொருட்களை சுத்தம் செய்வது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். அந்த வகையில் ஊறுகாய் பாட்டில்கள், நெய் வைத்திருக்கும் கோப்பைகள், எண்ணெய் பாட்டில்கள் போன்றவற்றில் விடாப்பிடியான எண்ணெய் பிசுக்குகள் ஒட்டிக் கொண்டிருக்கும். இதை அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால் அவ்வளவு தான் ரொம்பவே கஷ்டப்பட வேண்டி இருக்கும். இப்படியான பாட்டில்களை எப்படி சுலபமாக சுத்தம் செய்வது? என்பது போன்ற வீட்டு குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மணக்க மணக்க விதவிதமான ஊறுகாய்கள் வீட்டில் இருந்தால் குபேர அருள் இருப்பதாக சில சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. குபேரனுக்கு ஊறுகாய் என்றால் அவ்வளவு விருப்பமாம்! ஊறுகாய் இல்லாத இல்லங்களில் குபேரன் வாசம் செய்வதே இல்லை எனவே நீங்கள் செல்வந்தராக வேண்டுமென்றால் ஊறுகாயை வீட்டில் அடுக்கி வையுங்கள். அதே போல நல்ல ஆரோக்கியத்திற்கு ஊறுகாயை தொட்டு தொட்டு தான் சாப்பிட வேண்டும், அள்ளி திங்க கூடாது.

- Advertisement -

அதே போல நெய்யும் அப்படித்தான், நெய் வீட்டில் அதிகமாக இருந்தால் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அதனால் நெய்யை வீட்டில் எப்பொழுதும் குறையாமல் வைத்திருக்க வேண்டும். விஷேங்கள், விழாக்கள் மட்டும் அல்லாமல் சாதாரணமாக ஒரு நாளுக்கு தேவையான நெய்யை சமையலில் பயன்படுத்தலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு நெய் அதிகம் கொடுத்து வந்தால், குழந்தை புஷ்டியாக வளரும்.

சமையல் எண்ணெயை பொறுத்தவரை ஒரே மாதிரியான எண்ணெயை பயன்படுத்தக் கூடாது என்று கூறுவார்கள். ஒரு முறை ஒரு எண்ணெய் வாங்கினால் அடுத்த முறை வேறொரு எண்ணெயை பயன்படுத்த வேண்டும். சன் பிளவர் ஆயில், ரைஸ் பிராண்ட் ஆயில், ஜின்ஜர்லி ஆயில், கடலெண்ணெய், பாமாயில் என்று விதவிதமான எண்ணெய்கள் இருக்கின்றன. இதில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முறை பயன்படுத்த வேண்டும். இதனால் ஒரே எண்ணெயில் இருக்கக்கூடிய கொழுப்புகள் உடலில் படியாமல் பாதுகாக்கலாம்.

- Advertisement -

இந்த எண்ணெய், நெய், ஊறுகாய் போன்றவற்றை பயன்படுத்திவிட்டு கடைசியில் அதை சுத்தம் செய்யும் பொழுது தான் சிரமப்பட வேண்டி இருக்கும். இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்கள். கொதிக்க வைத்த நீரை பாட்டிலுக்குள் ஊற்றி ஒரு முறை குலுக்கி கொள்ளுங்கள். பிறகு தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள். இது போல ரெண்டு மூன்று முறை செய்து வந்தால் 70% எண்ணெய் பிசுக்குகள் சுடு தண்ணீரிலேயே கீழே போய்விடும்.

இதையும் படிக்கலாமே:
ஊற வைக்காமல், கெமிக்கல்ஸ் இல்லாமல் பாத்ரூமில் இருக்கும் உப்பு கறையை நொடியில் கிளீன் செய்வது எப்படி? 3 ரூபாய் போதும் மொத்த வேலையும் முடிச்சிடலாம்!

அதன் பிறகு மீண்டும் சுடு தண்ணீர் ஊற்றி ஒரு டீஸ்பூன் அளவிற்கு சமையல் சோடாவை உள்ளே போடுங்கள். பிறகு பாட்டில் மூடியை இறுக்கமாக மூடி குலுக்குங்கள். ஒரு ரெண்டு நிமிடம் நன்றி குலுக்கியப் பிறகு தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள். ஆச்சரியப்படும் அளவிற்கு கொஞ்சம் கூட எண்ணெய் பிசுக்குகள் இல்லாமல் பாட்டில் சுத்தமாக இருக்கும். அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் போல ஸ்கிரப்பர் வைத்து சோப்பு கொண்டு தேய்த்தால் போதும், பாட்டில்கள் பளபளவென்று மின்னும். கண்ணாடி பாட்டில்கள் மட்டும் அல்லாமல் பிளாஸ்டிக், பீங்கான் போன்றவற்றிலும் இதை பயன்படுத்தலாம். ஆனால் அதன் சூடு பொறுக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றுங்கள் போதும்.

- Advertisement -