பூரி செய்ய இட்லி பாத்திரம் போதுமா? இது என்ன புது கதையா இருக்கே? இந்த ஐடியா தெரிஞ்சா, இனி பூரி பொரிக்க லிட்டர் லிட்டரா எண்ணெயே ஊத்த வேண்டாம்.

poori3
- Advertisement -

அடிக்கடி நம்முடைய வீட்டில் செய்யக்கூடிய பூரி தான். ஆனால் பூரியை பற்றி இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று நாம் ஆச்சரியப்படும் அளவிற்கு சில பயனுள்ள தகவல்களைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். குறிப்பை படித்து பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் ஒருமுறை முயற்சி செய்தும் பாருங்கள். நிச்சயமாக நேரம் மிச்சமாகும். எண்ணெய் மிச்சமாகும். பூரி மாவை சுலபமாக பிசைவது எப்படி, எண்ணெய் குடிக்காமல் சுலபமாக பூரி செய்ய டிப்ஸ், ரெடிமேட் பூரி மாவை ஒரு மாதத்திற்கு பிரிட்ஜில் ஸ்டோர் செய்வது எப்படி என்று பயனுள்ளபடியான வீட்டு குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

எண்ணெய் குடிக்காத பூரி செய்முறை:
முதலில் ஒரு அகலமான பேஷன் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கப் அளவு தண்ணீர், 1 ஸ்பூன் அளவு சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய், பூரி மாவுக்கு தேவையான அளவு உப்பு, இந்த மூன்று பொருட்களையும் போட்டு கலந்து விட்டு, பிறகு 2 கப் அளவு கோதுமை மாவு, 1/4 கப் அளவு ரவை சேர்த்து உங்கள் கையை கொண்டு நன்றாக வட்ட வடிவில் மாவை கலந்து கலந்து பிசைந்தால் இரண்டே நிமிடத்தில் சூப்பரான பூரி மாவு கையில் ஒட்டாமல், பாத்திரத்தில் ஒட்டாமல் தயாராக கிடைத்திருக்கும்.

- Advertisement -

இந்தப் பூரி மாவை ஒரு மூடி போட்டு மூடி அரை மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து, எப்போதும் போல பூரி திரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் இட்லி வேக வைக்கப் போறீங்க என்றால், இட்லி பாத்திரத்திற்கு மேலே தட்டு மூடி இருப்போம் அல்லவா. அந்த தட்டிற்கு மேலே திரட்டிய மூன்று அல்லது நான்கு பூரியை வைத்து விடுங்கள். இட்லி வேகும் போது தட்டு சூடாகும். அந்த தட்டு சூடாகும் போது நாம் மேலே வைத்திருக்கும் இந்த பூரி மாவு 30 சதவிகிதம் நன்றாக வேக வேண்டும். அதாவது, சூடாக இருக்கும், இட்லி தட்டின் மேல் நாம் திரட்டி வைத்த பூரி மாவு டிரையாகி, லேசாக மேலே புள்ளி புள்ளியாக வெந்து நமக்கு கிடைக்கும்.

எல்லா பூரி மாவையும் இட்லி வேகும் போது, சூடாக இருக்கும் இட்லி தட்டுக்கு மேலே போட்டு 30 செகண்ட் வரை வேக வைத்து, மீண்டும் அந்தப் பூரியை திருப்பிப் போட்டு, பின்பக்கமும் 30 செகண்ட் வரை வேக வைத்து எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கால் பாகம் வெந்த பூரி மாவும் நம் கையில் இருக்கிறது அல்லவா. அது நன்றாக ஆறிய பின்பு ஒரு டப்பாவில் போட்டு மூடி பிரிட்ஜில் ஸ்டொர் செய்தால் 30 நாட்கள் வரை கெட்டுப் போகாது.

- Advertisement -

உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி சூடு செய்து பாதி வெந்திருக்கும் இந்த பூரி மாவை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து போட்டு, பொறித்து எடுத்தால் பூரி தயார். இப்படி லேசாக சூட்டில் வேகவைத்த பூரியை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் எண்ணெய் குடிக்கவே குடிக்காது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இட்லி பானையின் மேலே மூடி இருக்கும் தட்டில் தான் இந்த பூரியை போட்டு வேக வைக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. பிரஷர் குக்கர் வைக்கும் போது, அந்த குக்கர் மூடியின் மேல் திரட்டிய பூரிகளை போட்டு வேக வைத்து எடுக்கலாம். அப்படி இல்லை என்றால் தோசை கல்லை அடுப்பில் வைத்து, பூரி மாவை போட்டு இரண்டு பக்கமும் பபுள்ஸ் வரும் வரை லேசாக வேகவைத்து, எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தேய்த்த பூரி மாவு முழுமையாக வெந்து விடக் கூடாது. மாவுக்கு மேலே லேசாக வெள்ளை வெள்ளையாக, முட்டை முட்டையாக பபுல்ஸ் எழும்பி வரும். அதுவரைக்கும் வேக வைத்தால் போதும். கடையில் ரெடிமேட் சப்பாத்தி எல்லாம் கிடைக்கும் பாருங்கள். அதெல்லாம் இப்படித்தான் பாதி அளவு வேக வைத்து பேக் பண்ணி இருப்பாங்க.

இதையும் படிக்கலாமே: வீட்ல சமைக்க எதுவுமே இல்லையா கவலையை விடுங்கள். ரெண்டே நிமிஷத்துல இந்த தக்காளி மோர் குழம்பு செஞ்சு பாருங்க. சுட சுட சாதத்தோடு இந்த குழம்பு இருந்தா வெறும் ஊறுகாய் இருந்தா கூட தட்டு சோறு காலியாயிடும்.

வேலைக்கு போகக் கூடிய பெண்கள், சிறிய குழந்தைகளை வீட்டில் வைத்திருக்கக்கூடிய பெண்களுக்கு அடிக்கடி பூரி மாவை பிசைந்து பூரி சுட முடியாதல்லவா. அவர்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். ஹாஸ்டலில் தங்கி இருப்பவர்கள், பேச்சிலர்கள் எல்லோருக்கும் இந்த குறிப்பு பயனுள்ளதாக இருக்கும். தேவைப்படும்போது தினமும் காலையில் இரண்டு பூரி எடுத்து பொரித்து எடுத்தால் வேலை முடிந்தது. எளிமையான இந்த வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -