முகம் பளபளப்பாக அதிக பலன் தரக்கூடிய ஒரு பொருள் க்ளிசரின். க்ளிசரின் வைத்து 5 விதமான முறையில் முக அழகை அதிகரிக்க முடியும்

face
- Advertisement -

ஒரு சிலரின் முகம் எப்பொழுதும் வறட்சியாக காணப்படும். இதனால் அவர்களின் முகம் பொலிவுடன் இருக்காது. இதற்கு காரணம் அவர்களின் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது தான். வறண்ட சருமத்தை சரி செய்வதற்கு பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கிளிசரின். உடலில் Ph அளவை சரியான அளவில் இருக்குமாறு சமன் செய்வதற்கும், சருமத்தில் வறட்சி தன்மையை நீக்குவதற்கும் இந்த கிளிசரின் பயன்படுகிறது. இந்த க்ளிசரின் விலங்கின் கொழுப்பிலிருந்தும், காய்கறியின் கொழுப்பில் இருந்தும் தான் தயாரிக்கப்படுகிறது. இவற்றை பல்வேறு முறைகளில் அழகுசாதன பொருட்களிலும், மருத்துவப் பொருட்களிலும் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த க்ளிசரினை பயன்படுத்தி எப்படி வீட்டிலேயே முகத்தை பொலிவுடன் மாற்ற முடியும், என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

குறிப்பு: 1
முதலில் ஒரு சிறிய பவுலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் கிளிசரின், ஒரு டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து மூன்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் சிறிய துண்டு காட்டனை எடுத்து கொண்டு, அதனை இந்த கலவையில் டிப் செய்து கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். அதன் பிறகு சிறிது நேரம் உலர வைத்து, முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முக வறட்சி நீங்கி, முகம் அழகாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு: 2
ஒரு ஸ்பூன் கிளிசரின், ஒரு ஸ்பூன் பன்னீர் மற்றும் ஒரு ஸ்பூன் தண்ணீர் இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு ஸ்பிரே பாட்டிலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தில் ஸ்பிரே செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகம் மிகவும் பொலிவாக இருக்கும்.

குறிப்பு: 3
முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் கிளிசரின், ஒரு ஸ்பூன் ஐஸ் வாட்டர் மற்றும் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடத்திற்கு உலர வைக்கவேண்டும். அதன் பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

- Advertisement -

குறிப்பு: 4
ஒரு ஸ்பூன் காபி பவுடர், ஒரு ஸ்பூன் கிளிசரின், ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் பன்னீர் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொண்டு, முகத்தில் அப்ளை செய்து, லேசாக மசாஜ் செய்த பின்னர், பத்து நிமிடத்திற்கு அதனை உலர விட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ முகம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.

குறிப்பு: 5
ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழத் தோலின் பவுடர், ஒரு ஸ்பூன் கிளிசரின், ஒரு ஸ்பூன் பால் மற்றும் ஒரு ஸ்பூன் பன்னீர் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு பேக் போன்று தயார் செய்ய வேண்டும். பிறகு இதனை முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு உலர வைத்து, முகத்தை கழுவ வேண்டும்.

- Advertisement -