கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காத மொறுமொறு உளுந்து வடை மிக்ஸிலேயே அரைத்து புஸ்ஸுன்னு வருவதற்கு சூப்பரான 4 டிப்ஸ்! இப்படி சுட்டா முதல் தடவை சுட்டாலும் யாரும் நம்ப மாட்டாங்க!

methu-vadai_tamil
- Advertisement -

கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காத மொறுமொறு உளுந்த வடை மிக்ஸியிலேயே அரைப்பது எப்படி? முதலில் உளுந்த வடை செய்வதில் பல்வேறு குழப்பங்கள் இருக்கக்கூடும். உளுந்த வடை மிக்ஸியில் அரைக்கும் பொழுது தண்ணீரை இவ்வளவுதான் ஊற்ற வேண்டும் என்று ஒரு அளவு உண்டு. அதை தாண்டி ஊற்றக்கூடாது, மேலும் இந்த இரண்டு பொருளை சேர்த்து நீங்கள் உளுந்த வடை செய்யும் பொழுது மொறு மொறுன்னு புஷ் என்று உப்பி வரும். அப்படியான ஒரு ரகசிய சமையல் குறிப்பு தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

மொறு மொறு உளுந்து வடை செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை முழு உளுந்து – 150 கிராம், பெரிய வெங்காயம் – ஒன்று, துருவிய இஞ்சி – ஒரு ஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று, நறுக்கிய கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – நறுக்கியது சிறிதளவு, பொடித்த மிளகு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, வேக வைத்த உருளைக்கிழங்கு – ஒன்று, பச்சரிசி மாவு – 2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை.

- Advertisement -

மொறு மொறு உளுந்து வடை செய்முறை விளக்கம்:
உளுந்த வடை செய்வதற்கு முதலில் 150 கிராம் முழு வெள்ளை உளுந்தை எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு ஓரிரு முறை கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் சுத்தமான தண்ணீர் சேர்த்து இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை நன்கு ஊற விட்டு விட வேண்டும். கிரைண்டரில் அரைப்பவர்கள் ரெண்டு மணி நேரம் ஊற விட்டால் போதும். மிக்ஸியில் அரைப்பவர்கள் மூன்று மணி நேரம் குறைந்தது ஊற விடுவது நல்லது.

ஊற வைத்த உளுந்த மாவை நன்கு தண்ணீர் எதுவும் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வடிகட்டிய இந்த உளுந்தம் பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடம் நீங்கள் தண்ணீர் விடாமல் சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு மட்டும் தண்ணீர் விடுங்கள். இதற்கு உளுந்து ஊற வைத்த தண்ணீரையே பயன்படுத்துங்கள். பிறகு ஒரு சுற்று சுற்றி இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மீண்டும் சுற்றுங்கள்.

- Advertisement -

மூன்றாவது தடவையாக ஒரு டேபிள் ஸ்பூன் மட்டும் தண்ணீர் ஊற்றி இதனுடன் நன்கு வேக வைத்த உருளைக்கிழங்கு ஒன்றை துண்டுகளாக வெட்டி சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு மேல் தண்ணீர் சேர்க்கக்கூடாது. பின்னர் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கருவேப்பிலை, மல்லித்தழை, பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் மிளகை ஒன்றிரண்டாக தட்டி சேர்க்க வேண்டும். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். கடைசியாக 2 ஸ்பூன் அளவிற்கு மட்டும் பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். இது வடையை நன்கு மொறு மொறுவென்று வருவதற்கு உதவி செய்யும். அதிகம் எண்ணெய் குடிக்காமலும் இருக்க உதவும்.

இதையும் படிக்கலாமே:
அட, லஞ்ச் பாக்ஸ்க்கு இதை விட ஈஸியான ஒரு சப்பாத்தியை யாராலும் செய்து கொடுக்க முடியாது. இதற்கு தொட்டுக்கொள்ள கிரேவியும் வேண்டாம். இனி மிச்சமாகி வரும் லஞ்ச் பாக்ஸ் சாப்பாட்டை குப்பையில் கொட்டவும் வேண்டாம்.

பின்னர் மாவை சரிசமமாக பதப்படுத்தி அப்படியே வைத்து விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் கழித்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வைத்து கைகளை நன்கு ஈர பதம் ஆக்கிக் கொள்ளுங்கள். ஈர கையுடன் மாவை அப்படியே பந்து போல உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள். நடுவில் ஒரு ஓட்டை போட்டு அப்படியே சுடச்சுட எண்ணெயில் பொரித்து எடுத்தால் சூப்பரான எண்ணெய் குடிக்காத மொறு மொறு உளுந்த வடை புஸ்ன்னு ரெடியாகிவிடும். உங்களுக்கு கையில் வரவில்லை என்றால் ஏதாவது ஒரு பால் கவர், எண்ணெய் தடவிய பாலித்தீன் கவர் அல்லது டீ வடிக்கட்டியின் பின்னால் தண்ணீரை தடவி இதே போல பந்து போல உருட்டி செய்யுங்கள், சூப்பராக வரும்.

- Advertisement -