சப்பாத்தி என்றாலே அதற்கு தொட்டுக் கொள்ள ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு கொடுத்தால் சப்பாத்தியை விருப்பமாகவும் சாப்பிட மாட்டார்கள். ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை நாம் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும். அதற்காக இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மட்டும் என்று கிடையாது. பெரியவர்களும் சாப்பிடலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய அருமையான சுவை நிறைந்த எளிமையான ஸ்டஃப்டு சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இதை ஆளு பன்னீர் பரோட்டா என்றும் சொல்லலாம். இதை லஞ்ச் பாக்ஸில் கட்டி கொடுத்தால் நிச்சயமாக மீதம் திரும்ப வராது. லஞ்ச் பாக்ஸ் காலியாக தான் வரும்.
சப்பாத்தி மாவு பிசையும் முறை:
ஒரு அகலமான பவுலில் கோதுமை மாவு 2 கப், கடலை மாவு – 1/2 கப், உப்பு தேவையான அளவு, ஓமம் – 1/2 ஸ்பூன், சில்லி ஃபிளக்ஸ் அல்லது மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், போட்டு எல்லா பொருட்களையும் முதலில் நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து இதை சப்பாத்தி மாவு பதத்திற்கு சாப்ட் ஆக பிசைந்து, இதன் மேலே 2 ஸ்பூன் – எண்ணெயை தடவி, மூடி 30 நிமிடங்கள் இதை ஊற வைத்து விடுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.
சப்பாத்திக்கு ஸ்டஃபிங் தயார் செய்யும் முறை:
முதலில் 2 மீடியம் சைஸில் இருக்கும் உருளைக்கிழங்குகளை வேகவைத்து, தோல் உரித்து ஒரு கிரேட்டரில் துருவிக் கொள்ளுங்கள். அதேபோல பன்னீரையும் கிரேட்டரில் துருவி கொள்ள வேண்டும். ஒரு அகலமான பௌலில் துருவிய உருளைக்கிழங்கு, துருவிய பன்னீர் – 100 கிராம், சில்லி பிளக்ஸ் அல்லது மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, சாட் மசாலா – 1/2 ஸ்பூன், மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், ஸ்டஃபிங்க்கு தேவையான அளவு உப்பு, போட்டு இதை நன்றாக உங்கள் கையை கொண்டு பிசைய வேண்டும்.
சாட் மசாலா இல்லை என்றால் 1/2 ஸ்பூன் – எலுமிச்ச பழச்சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். (ஸ்டஃபிங் கொஞ்சம் கட்டியாக இருக்க வேண்டும். தண்ணீர் ஊற்றக்கூடாது.) ஸ்டஃபிங்கை பிசைந்து விட்டு, கையை கழுவி விட்டு, கையில் கொஞ்சமாக எண்ணெய் தடவி, இந்த ஸ்டஃபிங்கில் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். சப்பாத்திக்கு உள்ளே வைக்ககும் சைஸில்.
இப்போது ஸ்டஃபிங்கை சப்பாத்தியில் வைத்து திரட்டி, சப்பாத்தி சூட்டு எடுக்க வேண்டியது தான் வேலை. ஏற்கனவே சப்பாத்தி மாவு பிசைந்து வைத்திருக்கிறோம் அல்லவா அதை மீண்டும் ஒருமுறை உங்கள் கையை கொண்டு சாஃப்டாக பிசைந்து விட்டு, சிறிய சிறிய உருண்டுகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். வழக்கம்போல சப்பாத்தி மாவில், கோதுமை மாவு தொட்டு கொஞ்சம் தடிமனாக தேய்த்துக் கொள்ள வேண்டும். திரட்டிய சப்பாத்தி மாவுக்கு உள்ளே ஸ்டஃபிங்க்கை வைத்து, சப்பாத்தி மாவை மடித்து மீண்டும் அதன் மேலே கோதுமை பொடி தூவி மெதுவாக தேய்க்க வேண்டும். ரொம்பவும் மெல்லிசாக தேய்த்தால் சப்பாத்திக்கு உள்ளே இருக்கும் ஸ்டஃபிங் வெளியே வந்துவிடும். ஜாக்கிரதையாக கொஞ்சம் தடிமனாக இந்த மாவைத் திரட்டி வைத்துக் கொள்ளுங்கள். எல்லா சப்பாத்தி உருண்டைகளையும் இதே போல ஸ்டஃபிங் வைத்து தேய்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: தின்ன தின்ன திகட்டாத தித்திக்கும் லட்டு. இந்த லட்டுவை தினமும் 1 சாப்பிட்டால் திரும்பிப் பார்ப்பதற்குள் முடி, முட்டி கால் வரை வளர்ந்து விடும்.
அடுப்பில் தோசை கல்லை வைத்து நெய் அல்லது எண்ணெய் விட்டு, தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு மிதமான தீயில் வேகவைத்து இரண்டு பக்கமும் பொன்னிறம் வரும் வரை, சிவக்க விட்டு எடுத்தால் சூப்பரான ஸ்டஃப்பிங் சப்பாத்தி தயார். அருமையான சுவை இருக்குங்க. இதை குழந்தைகள் அவ்வளவு விருப்பமாக சாப்பிடுவார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உருளைக்கிழங்கும் பன்னீரும் இதில் சேர்ந்திருக்கிறது. வேறென்ன வேண்டும். இதை விட சுவையான ரெசிபியை நம்மால் செய்ய முடியுமா அதுவும் இவ்வளவு ஈசியா. அதனால மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.