முகத்தில் லிட்டர் லிட்டராக எண்ணெய் வழியுதா? இந்த 3 பொருள் இருந்தால் நீங்களும் சினிமா ஸ்டார் போல ஜொலிக்கலாம்!

oily-skin
- Advertisement -

முகத்தின் அழகை கெடுப்பதற்கென்றே வரும் ஒரு பிரச்சனை தான் எண்ணெய் வழிவது என்பது. அப்போது தான் முகத்தை கழுவி வந்திருப்போம். ஆனால் அதற்குள் லிட்டர் லிட்டராக எண்ணெய் வழியும். போட்ட மேக்கப் எல்லாம் கலைந்து விடும். இந்த முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனை தீர ரொம்ப ரொம்ப சுலபமான ஒரு வழிமுறைகள் உள்ளது. சரியாக அவற்றை பின்பற்றினால் நீங்களும் சினிமா ஸ்டார் போல மேக்கப் போடாமலேயே ஜொலிக்கலாம். அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

oily-skin

எல்லோருக்குமே தான் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதனால் கண்ட கண்ட எண்ணெய்களையும், கிரீம்களையும் உபயோகித்து முகத்தை சரி செய்கிறேன் என்கிற பெயரில் மேலும் கெடுத்துக் கொள்வது உண்டு. முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சினைக்கு முதல் தீர்வு என்பது முகத்தில் கை வைக்காமல் இருப்பது ஆகும். அடிக்கடி கைகளை முகத்திற்கு கொண்டு போகக் கூடாது. கைகளில் இருக்கும் அழுக்குகள் எண்ணெய் பசையுடன் சேரும் பொழுது முகத்தில் தேவையற்ற பருக்கள் உண்டாகி முகத்தின் அழகு மேலும் சீர்குலையும்.

- Advertisement -

எனவே அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி வாருங்கள். எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள சருமம் கொண்டவர்கள் கட்டாயம் அடிக்கடி முகத்தை கழுவுவது நல்ல பலனைக் கொடுக்கும். சூடாக இருக்கும் தண்ணீர் அல்லது குளிர்ந்த தண்ணீர் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை உங்களுக்கு உகந்தது போல் தேர்ந்தெடுத்து அதில் அடிக்கடி முகத்தை கழுவி வாருங்கள்.

face10

முகத்தை கழுவிய பின் டவல் கொண்டு அழுத்தி முகத்தை துடைத்து கொள்ளக் கூடாது. லேசாக ஒற்றி எடுக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். முகத்தை கழுவிய பின்பு இந்த பேக் 10 நிமிடம் போட்டு பாருங்கள்! ஒரே வாரத்தில் முகம் பளிச்சென்று மின்ன ஆரம்பிக்கும். இதற்கு தேவையான பொருட்கள் தக்காளி, வெள்ளரிக்காய் மற்றும் கொஞ்சம் மோர் அவ்வளவே தான். தக்காளி சாறு ஒரு டீஸ்பூன், மோர் ஒரு டீஸ்பூன், வெள்ளிக்காய் துண்டு நான்கைந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதனை இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைப்பது போல உரலில் இடித்து நன்கு மைய கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற விட்டு விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தை துடைத்து எடுத்து கழுவிக் கொள்ளுங்கள். முகம் பளிச்சென பட்டுப் போல ஜொலிக்கும். சீக்கிரம் முகத்தில் எண்ணெய் வழியாது. தொடர்ந்து இது போல செய்து வந்தால் நாளடைவில் நல்ல மாற்றத்தை உணரலாம்.

face-pack0

அதே போல அடிக்கடி தக்காளி சாறு, மோர் போன்றவற்றை முகத்தில் தடவி வெள்ளரிக்காய் துண்டு ஒன்றை எடுத்து முன்னும் பின்னுமாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். இதனால் முகத்தில் இருக்கும் கிருமிகள் நீங்கி முகத்தில் எண்ணெய் வடிவது வெகுவாக குறையும். அதே போல சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள சருமம் கொண்டவர்கள் கடலை மாவு போட்டு முகத்தை மட்டும் ஆவது கழுவி வந்தால் முகப்பொலிவு அதிகரிக்கும். கடலை மாவு பேக் போடுவதும்‌ முகத்தின் எண்ணெய்ப் பிசுக்கை கட்டுபடுத்தும். எனவே இந்த வழிமுறைகளை சரியாக கையாண்டால் எண்ணெய் பிசுக்கு போயே போய்விடும்.

- Advertisement -