குப்பையில் தூக்கிப் போடும் தேய்ந்த துடைப்பத்துக்கு பின்னால் இவ்வளவு பெரிய விஷயம் இருக்குதா? அல்டிமேட் ஐடியா இது. மிஸ் பண்ணிடாதீங்க. ரூம் போட்டு யோசிச்சாலும் இப்படி ஒரு ஐடியாவை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது.

broom
- Advertisement -

நம்முடைய வீட்டில் கூட்டும் துடைப்பம் தேய்ந்து போய்விட்டால், பெரும்பாலும் அதை தூக்கி குப்பையில் தான் போடுவோம். ஆனால் அந்த தேய்ந்து போன குப்பையில் தூக்கிப் போடும் துடப்பத்தை வைத்து நாம் பயனுள்ள வீட்டு வேலைகள் சிலவற்றை செய்யலாம். சரி, குப்பையில் தூக்கிப் போடும் துடைப்பம் தானே. அதில் அப்படி என்ன ஐடியா இருக்கும். சும்மா இந்த டிப்ஸை படித்து தான் பார்ப்போமே, என்று ஐந்து நிமிடம் இந்த பதிவை படிக்க ஒதுக்குங்கள். உங்கள் வீட்டின் சுத்தத்திற்கு இந்த டிப்ஸ் கேரன்டி. வாங்க அந்த பயனுள்ள வீட்டுக்குறிப்பை நாமும் தெரிந்து கொள்வோம்.

பழைய துடைப்பத்தை மீண்டும் பயன்படுத்துவது எப்படி?
பெரும்பாலும் இப்போதெல்லாம் வீடு கூட்ட இப்படி பிளாஸ்டிக் கைப்பிடி வைத்த துடைப்பத்தை தான் நாம் பயன்படுத்துகின்றோம். இது தேய்ந்து போய் குப்பையில் தூக்கி போடும் நிலைமைக்கு வந்து விட்டது. இதனுடைய முனையை ஒரே சைஸாக கத்திரிக்கோலை வைத்து வெட்டி விடுங்கள். பிறகு இந்த துடைப்பத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து ரப்பர் பேண்ட் மாட்டி விடுங்கள். அவ்வளவுதான்.

- Advertisement -

இரண்டு பிரிவுகளாக ஒரு பிரஷ் நமக்கு தயார். நீளமான கைப்பிடியோடு. உங்கள் வீட்டு ஜன்னல் கம்பிகள், பால்கனி ஜன்னல் கம்பிகள், படிக்கட்டு கம்பிகளில் என்று தூசி படிந்த இடத்தை எல்லாம் இந்த துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்து விடலாம். இந்த துடைப்பத்தை அப்படியே வைத்து, கம்பிகளை துடைத்து தூசி தட்டினால், தூசு பறக்கும் என்று உங்களுக்கு கஷ்டமா இருக்குதா. உங்களுக்கு டஸ்ட் அலர்ஜி இருக்குதா.

இந்த துடைப்பத்தை ஒரு வாஷிங் லிக்விடில் முக்கி துடையுங்கள். வேலை முடிந்தது. ஒரு சின்ன பாத்திரத்தில் லைசால் சிறிதளவு, தண்ணீர் சிறிதளவு, ஆப்ப சோடா சிறிதளவு போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த லிக்விடில் துடைப்பத்தை முக்கி ஈர துடைப்பத்தில் ஜன்னலை துடைத்தால், தூசி மேலே பறக்காது. எல்லா தூசியும் இந்த துடைப்பத்தில் ஒட்டிக் கொள்ளும். வேலை முடிந்தது. ஸ்டூல் மேலே ஏறி தான் இனி ஜன்னலை சுத்தம் செய்ய வேண்டும் என்று அவசியமே இனி கிடையாது.

- Advertisement -

இந்த மாதிரி கட்டையாக தேய்ந்து போன துடைப்பயித்தை வைத்து பாத்ரூம் கூட சுத்தம் செய்யலாம். பாத்ரூம் முழுவதும் ஹேர்பிக் அல்லது பாத்ரூம் கழுவ பயன்படுத்தும் லிக்விடை ஊற்றி இந்த துடைப்பத்தைக் கொண்டு எல்லா இடங்களிலும் பரப்பி விட்டுவிடுங்கள். அதன் பின்பு பத்து நிமிடம் கழித்து கட்டையாக இருக்கும் இந்த துடைப்பத்தை வைத்து தேய்த்துக் கொடுத்தால் மூளை முடுக்குகளில் பிரஷ் போகாத இடங்களில் கூட இந்த துடைப்பம் போய் சுலபமாக சுத்தம் செய்து விடும். (இந்த பாத்ரூம் சுத்தம் செய்யும் குறிப்புக்கு, தேய்ந்து போன துடைப்பத்தின் நுணியை வெட்டக்கூடாது. அப்படியே தான் பயன்படுத்த வேண்டும்.)

பெரும்பாலும் பாத்ரூமை கழுவ நாம் பிரஷ் தான் பயன்படுத்துவோம். ஒரு முறை இந்த தேய்ந்து போன துடைப்பத்தை, பிரஷருக்கு பதில் பயன்படுத்திப்பாருங்கள். வித்தியாசம் உங்களுக்கே தெரியும். உடல்நிலை சரியில்லாதவர்கள், குனிந்தால் இடுப்பு வலி வரும் என்பவர்கள் இப்படி நீளமாக இருக்கும் துடைப்பத்தை பயன்படுத்தலாம். தேய்ந்து போன துடைப்பத்தை பயன்படுத்தினால் தான் அழுக்கு போகும்‌.

இதையும் படிக்கலாமே: கம்ப்யூட்டர் சாம்பிராணி பயன்பாடு முடிந்த பின் கிடைக்கும் சாம்பலை இனி தூக்கி போடாதீர்கள்! இதற்கு பயன்படுத்துங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

கீழே நிறைய பூ இருக்கும் துடைபத்தை பயன்படுத்தினால் அதில் அழுத்தம் கிடைக்காது. அழுக்கும் போகாது. அதனால் தான் பழைய துடைப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு பயனுள்ள இந்த இரண்டு வீட்டு குறிப்பு பிடித்திருந்தால் சும்மா ட்ரை பண்ணி பாருங்க. ஒர்க் அவுட் ஆச்சுன்னா ஜன்னலை துடைத்து துடைத்து, கழுத்து வலி வருவது மிச்சமாகும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -