ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி – சாய் பாபா பாடல்

Sai baba

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி சீரடி வாசனே என் சாயி என தொடங்கும் சாயி பாபா பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த பாடலுக்குரிய வரிகளும் கீழே உள்ளது. சாய் பாவின் மகிமைகளை பற்றி சொல்லும் இந்த பாடலை கேட்கையில் மனம் லைத்துப்போகும். ஆனந்த கடலான சாய் நாதனை போற்றி பாடுவோம் அவன் அருள் மழையில் அனுதினமும் நனைவோம்.

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி
சீரடி வாசனே என் சாயி
ஜகத்குரு சாயி பாபா
ஜெய ஜெய சாயி பாபா
சச்சிதானந்த சாயி
சத்யரூபனே சாய் பாபா

தூய பரம்பொருள் துவாரக மாயையில்
அழைப்பான் சீரடிக்கு.. சுவாமி அழைப்பான் சீரடிக்கு
அழைத்ததும் வருவான் பாபா
அருள் கரம் தருவான் பாபா
அன்னையாய் அணைத்திடுவான்
மாத்ருரூபனே சாய் பாபா

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி…

நீரும் நெருப்பாய் சுடரே வைத்தாயே
நிர்மலனே சாயி.. எங்கள் நிர்மலனே சாயி
ஆத்ம ஜோதியே பாபா
ஆனந்த கடலே பாபா
சீரடியில் கண்டோம்
சிவ ரூபன் சாய் பாபா

- Advertisement -

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி…

திருவுதியால் பிணி தீர்த்திடும் பாபா
உன் மகிமைக்கு அளவில்லையே
உன் மகிமைக்கு அளவில்லையே
துணியில் கனிந்த பாபா
யோக மலரே பாபா
புண்முக தரிசனமே
ராம ரூபனே சாய் பாபா

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி….

குருவாய் வந்தாய் அருளை பொழிந்தாய்
தரணியில் தவமானாய்.. நீ தரணியில் தவமானாய்
எத்தனை தவங்கள் பாபா
உன்னை காண பாபா
இக்கணம் உனை தொழுதோம்
தத்த ரூபனே சாய் பாபா

ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி….

தனமும் கல்வியும் தளர்வில்லா மனமும்
நல்லவை நாளும் தரும்.. தினம் நல்லவை நாளும் தரும்
வஞ்சனை இல்லா பாபா
நெஞ்சங்கள் எல்லாம் பாபா
சாயி வாழும் இடம்
பரப்ரம்மனே சாய் பாபா

இது போன்று மேலும் பல சாய் பாபா பாடல்கள் மற்றும் சாய் பாபா பாடல் வரிகள் பலவும் தெய்வீகம் பக்கத்தில் உள்ளது.