சூரியனில் இருந்து வெளிவரும் ஓம் ஒலி – நாசாவே அதிர்ந்த வீடியோ

Om sound

ஓம் என்பது ஒரு மந்திர சொல்ல என்று தமிழர்கள் எப்போதோ கண்டறிந்துவிட்டனர். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை முருகன் சிவனுக்கு சொன்னார் என்ற புராண கதையும் உண்டு. இப்படி ஓம் குறித்த பல தகவல்கள் நம்மிடம் இருக்க சமீபத்தில் நாசா தனது ஆய்வின் முடிவில் ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளது. அதில் சூரியனில் இருந்து ஓம் என்னும் சத்தம் வருகிறது. இதோ அந்த வீடியோ.

பூமி உட்பட பல கிரகங்கள் சூரியனையே மையமாக கொண்டு சுற்றுகிறது. அதே போல நாமும் சூரிய பகவானுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பொங்கல் என்றொரு பொண்டிகையை கொண்டாடுகிறோம். நவீன ஆய்வின் படி சூரியனில் பெருமளவு ஹைட்ரஜனும் ஹீலியமும் உள்ளது. சூரியனின் மேல் இருக்கும் வெப்பநிலை சுமார் ஐயாயிரம் டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக உள்ளது. அதன் உட்பரப்பு வெப்ப நிலை பதினைந்து பில்லியன் டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக உள்ளது.

இப்படி வெப்பம் அதிகம் கொண்ட சூரியன். தன்னில் இருந்து வெளிப்படுத்தும் வெப்பத்தினாலேயே இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகை ஆகாது. சிறு தாவரம் முதல் மனிதர்கள் வரை சூரிய ஒளி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. சூரியனின் அருமைகளை புரிந்ததாலேயே நாம் சூரியனை தெய்வமாக வணங்குகிறோம். சூரியனுக்கு பகலவன், கதிரவன், ஞாயிறு, கனலி, எல்லி, அனலி, ஆதவன், பானு, தினகரன், உதயன் இப்படி இன்னும் பலர் பெயர்கள் தமிழில் உண்டு. நவகிரங்களில் முதல் கிரகமாக சூரியனை பாவித்து அவரை சிறப்பித்துள்ளனர் நம் முன்னோர்கள். இப்படி சூரியனின் புகழை சொல்லிக்கொண்டே போகலாம்.