வேண்டிய அடுத்த நொடியே பலனை தரக்கூடிய ஊமத்தங்காய் தீபம். பண கஷ்டம் முதல் வீட்டில் உள்ள அனைத்து துன்பங்களையும் போகக்கூடிய அற்புத தீபம்.

umathangai deepam
- Advertisement -

பொருளாதார நெருக்கடி என்பது இன்று பலரது வீடுகளிலும் உண்டு. இறைவனுக்கு நிவேதியம் கூட செய்ய இயலாத அளவிற்கு பணக் கஷ்டம் உள்ள இல்லங்களும் உண்டு. அதே போல பணம் நிறைய இருக்கும் ஆனால் மன நிம்மதி என்பது துளியும் இல்லாமல் இருக்கும் இல்லங்களும் உண்டு. இப்படி பண கஷ்டம், மனக்கஷ்டம், திருஷ்டி என அனைத்திற்கும் தீர்வாக இருக்கிறது ஊமத்தங்காய் தீபம். இந்த தீபத்தை எந்த கிழமையில் எப்படி ஏற்றுவது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

பொதுவாக உமத்தங்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அதே போல ஆன்மீக ரீதியாகவும் இந்த ஊமத்தங்காய்க்கு பல சிறப்புக்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. இந்த ஊமத்தங்காய் தீபமானது பெரும்பாலும் சிவபெருமானை வேண்டி வீட்டில் ஏற்றப்படும் தீபமாகும்.

- Advertisement -

ஊமத்தங்காய் பெரும்பாலும் கிராமங்களில் கிடைக்கும். நகரத்தில் வசிப்பவர்கள் நாட்டு மருந்து கடைகளில் இதை பெற முடியும். ஊமத்தங்காய் தீபத்தை மாட்டு சாணத்தின் மீது ஏற்றுவதே சாலச்சிறந்தது. மாட்டு சாணம் கிடைக்காத நிலையில் இதை அகல் விளக்கில் ஏற்றலாம்.

ஊமத்தங்காய் தீபம் ஏற்றும் முறை:
முதலில் ஒரு உமத்தங்காயை எடுத்து அதன் காம்பை நீக்கிவிட்டு, அதற்குள் இருக்கும் விதையையும் நீக்கிவிட்டு, அதனுள் சிறிதளவு வெண்கடுகு போட்டு பின்னர் அதனுள் இலுப்பை எண்ணெய் ஊற்றி, ஒரு பஞ்சு திரி போட்டு, மாட்டு சாணத்தின் மீது உமத்தங்காயை வைத்து பூஜை அறையில் ஊமத்தங்காய் தீபம் ஏற்றவேண்டும்.

- Advertisement -

தீபம் ஏற்றியதும் சிவபெருமானை நினைத்து உங்கள் கோரிக்கைகள் முழுவதையும் அவரிடம் சொல்லி மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். பிறகு குலதெய்வத்தை நினைத்து வேண்டிக்கொள்ள வேண்டும். இந்த தீபத்தை சரியான முறையில் ஏற்றத்துவங்கிய உடனே மாற்றமானது நிகழத் துவங்கும்.

இந்த தீபத்தை தொடர்ச்சியாக 9 செவ்வாய் அல்லது 9 வெள்ளிக்கிழமைகளில் ஏற்ற வேண்டும். ஒருவேளை செவ்வாய், வெள்ளி கிழமைகளில் ஏற்ற இயலாதவர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை வேளையில் வரும் ராகு கால நேரமான 4.30 முதல் 6.00 மணிக்குள் இந்த தீபத்தை தொடர்ச்சியாக ஏற்றிவர வேண்டும்.

நீண்ட நாட்களாக வேண்டியும் இறைவன் நம் கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்கவில்லையே என்று எண்ணுபவர்கள் இந்த தீபம் ஏற்றுவதன் மூலம் இறைவனின் செவிகளுக்கு உங்கள் கோரிக்கைகளை எடுத்துச்செல்ல முடியும். உங்கள் கோரிக்கை ஞாயாமாக இருப்பின் நிச்சயம் அதை இறைவன் நிறைவேற்றி தருவார்.

- Advertisement -