சூப்பர் வெங்காய சட்னி! ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க! 4 ஸ்டெப்ஸ் சரியா ஃபாலோ பண்ணா போதும்!

இட்லி, தோசை இவை இரண்டுக்கும் தொட்டுக்க என்ன செய்வது, என்ற குழப்பம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. வெங்காயத்தை வைத்து சுலபமான முறையில், சூப்பரான காரசாரமான வெங்காய சட்னியை எப்படி செய்வது என்றுதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதில் தேங்காய் சேர்க்கப் போவதில்லை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. செய்யும் போதே நாக்கில் எச்சில் ஊறும் அளவிற்கு வாசம் வீசும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஃப்ரிட்ஜில் வைத்து 2 நாட்களுக்கு கூட இந்த சட்னியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

onion-chutney

Step 1:
சட்னி செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக பெரிய எலுமிச்சை அளவு புளியை எடுத்து, சுடுதண்ணீரில் போட்டு நன்றாக ஊறவைத்து, புளி கரைசல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

Step 2:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, 10 வரமிளகாய் போட்டு, 1 ஸ்பூன் வெந்தயம், 1/2 ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் தனியா, சேர்த்து ஒரு நிமிடம் வரை வறுத்து, ஆற வைத்த பின், மிக்ஸியில் போட்டு சிறிய ரவை அளவிற்கு கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். 2 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றி அரைத்தால் போதுமானது. ரொம்பவும் நறநறவென்று விழுதை அரைக்கக்கூடாது. ரொம்பவும் மொழுமொழுவென்றும், விழுதை அரைந்து விடக்கூடாது. கவனித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு காரம் அதிகமாக வேண்டுமென்றால் வரமிளகாயை கொஞ்சம் சேர்த்து கூட வைத்துக் கொள்ளலாம்.

onion-cutting

Step 3:
அடுத்ததாக ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, போட்டு, அதன்பின், 5 பல் பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கி போட்டு, ஒரு சிட்டிகை அளவு உப்பு போட்டு, இவை அனைத்தையும் 2 நிமிடம் வதக்கிய பின்பு, கால் ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து, 2 நிமிடம் நன்றாக வதக்கி, அதன் பின்பு, தயார் செய்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதை சேர்த்து, நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

- Advertisement -

புளி தண்ணீர் சுண்டி, வெங்காயம் தொங்காக மாற 5 நிமிடம் ஆகும். அந்த விழுதை நன்றாக ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

onion-fry

Step 4:
இப்போது கடாயில், 2 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், இவை நான்கையும் சேர்த்து தாளித்து, அதில் மிக்ஸி ஜாரில், அரைத்து வைத்திருக்கும் வெங்காய சட்னியை ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

onion-chutni

சட்னியின் சிடசிடப்பு அடங்கி, எண்ணெய் தனியாக பிரிந்து வரும் சமயத்தில், அடுப்பை அணைத்து விட்டு, தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி விட்டீர்கள் என்றால், காரசாரமான, சுவையான வெங்காய சட்னி தயார். சொல்லும்போது நாக்கில் எச்சில் ஊறுகிறதா? உங்களுக்கு பிடித்து இருந்தால், உங்கள் வீட்டில், நீங்கள் இந்த குறிப்பை முயற்சி செய்து, வெங்காய சட்னியை அரைத்துப் பாருங்கள். கட்டாயம் எல்லோருக்கும் பிடிக்கும்.

இதையும் படிக்கலாமே
ஜவ்வரிசி வத்தலா? ‘கூழ் காய்ச்ச வேண்டுமே’! என்ற பயம் இனி வேண்டாம். சுலபமான முறையில் ஜவ்வரிசி வத்தல் எப்படி செய்வது?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Onion Chutney in Tamil. Big Onion Chutney in Tamil. Big Onion Chutney Without Tomato. Big Onion Chutney