வீடு முழுவதும் முடியாக இருக்கிறதா? முடியின் வேர்க்கால்கள் வலுவிழந்து கொட்டுகிறதா? அப்போ இந்த எண்ணெயை ட்ரை பண்ணி பாருங்க. 15 நாள்ல நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

hair growth
- Advertisement -

பெண்களின் தனி சிறப்பு மிகுந்த அழகாக கருதப்படுவது அவர்களின் தலைமுடிதான். இதில் ஆண்களும் எந்தவித விதிவிலக்கையும் பார்ப்பதில்லை. தலைமுடியை பராமரிப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தலைமுடியில் பல பிரச்சினைகளும் ஏற்படும். அந்த பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு நாம் தீர்வுகளை கண்டறிந்து அதை செயல்படுத்தினோம் என்றால் அந்த பிரச்சினைகளில் இருந்து நம்மால் வெளியில் வர முடியும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நம் தலைமுடி நன்றாக செழித்து வலுவுடன் வளர எந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

தலை முடி பிரச்சனைகளில் அனைத்து தரப்பினரும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை முடி உதிர்தல் ஆகும். முடி உதிர்வது பல காரணங்களால் ஏற்படுகிறது என்றாலும் குறிப்பாக முடியின் வேர்க்கால்கள் வலுவிழந்து இருப்பதே அதற்கு அதிகப்படியான காரணமாக திகழ்கிறது. மேலும் மன அழுத்தத்தினாலும் முடி உதிர்தல் ஏற்படுகிறது இவை இரண்டையும் சரி செய்வதற்கு மிகவும் எளிமையான குறிப்பை தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்பட்டால் நிம்மதி என்பது இருக்காது. நிம்மதி இல்லை என்றால் அதனால் தூக்கமின்மை ஏற்படும். இவை முதலில் நம் உடல் பாகங்களில் தலைமுடியை தான் பாதிக்கும். மன அழுத்தமும், தூக்கமும் இரண்டு கண்களாக கருதப்படுகிறது. ஒரு கண்ணில் நீர் வடிந்தால் தானாக இரண்டாவது கண்ணிலும் நீர் வடியும் என்பது போல் மன அழுத்தம் ஏற்பட்டால் தூக்கமின்மை ஏற்படும் தூக்கமின்மை ஏற்பட்டால் மன அழுத்தம் ஏற்படும் இவை இரண்டையும் சரி செய்வதற்கு நாம் நம் தலையில் எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது மன அழுத்தம் குறைந்து நல்ல தூக்கம் ஏற்படும்.

மேலும் முடி உதிர்வு ஸ்கால்ப்பில் இன்பெக்சன் ஏற்படும் பொழுதும் இன்ஃபர்லேஷன் ஏற்படும் பொழுதும் நிகழ்கிறது. இவை இரண்டையும் தடுப்பதற்கு சின்ன வெங்காயம் பெருந்துணை புரிகிறது. மேலும் நாம் சின்ன வெங்காயத்தை நம் தலையில் உபயோகப்படுத்தும் பொழுது நமக்கு ஏற்படக்கூடிய இளநரை மாறுவதோடு, முடி கொட்டுதல் நின்று முடி அடர்த்தியாகவும், வேகமாகவும் வளர ஆரம்பிக்கிறது. இந்த சின்ன வெங்காயம் எண்ணெயை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

கால் கப் சின்ன வெங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை தோல் உரித்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு இரும்பு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் ஒரு கப்பு நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும். பிறகு நாம் இடித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை அதில் சேர்க்க வேண்டும். சின்ன வெங்காயத்தில் இருக்கும் ஈரப்பதம் முற்றிலும் நீங்கும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும். அதாவது எண்ணெயில் சலசலப்பு சத்தம் நின்றவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். முக்கியமான குறிப்பு வெங்காயம் கருகக் கூடாது.

எண்ணெய் நன்றாக ஆறியதும் அதை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினமும் நாம் தொடர்ந்து தலையில் தேய்த்து வர நம் தலையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி, வேர்க்கால்கள் வலுப்பெற்று முடி உதிர்வு முற்றிலுமாக தடுக்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: முடி கொட்டிய இடத்தில், 30 நாட்களில் புது முடி வளர்வதை பார்க்க உங்களுக்கு ஆசையா இருக்குதா? புது புது முடிகளை சீக்கிரம் வளர வைக்கும் சூப்பரான பவர்ஃபுல்லான ஹேர் பேக் இதோ!

எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம் வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான இந்த பொருட்களை பயன்படுத்தி மிகவும் எளிய முறையில் வீட்டிலேயே வெங்காய எண்ணெய் தயார் செய்து உபயோகப்படுத்தி நம் தலை முடியின் பாதுகாப்பை மேம்படுத்துவோம்.

- Advertisement -