வளரவே வளராத முடி கூட வளமாக வளர வெங்காயத்தை இப்படி பயன்படுத்தணும். 30 நாட்களில் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு முடி வளர்ச்சி இருக்கும்.

hair12
- Advertisement -

அடுத்தவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய முடி வளர்ச்சியில் வித்தியாசம் தெரியும். அதற்கு நீங்கள் பின் சொல்ல கூடிய இந்த எளிமையான செலவு இல்லாத குறிப்புகளை பின்பற்றினாலே போதும். வீட்டில் இருக்கும் 2 பொருட்களை வைத்து தான் இந்த குறிப்பு சொல்லப்பட்டுள்ளது. தலையில் வளராத இடத்திலும் முடி வளரும். முடி உதிர்வு குறையும். முடியின் அடர்த்தி ஒரு சில நாட்களில் அதிகரிக்க தொடங்கும். 30 நாள் இந்த குறிப்பை பயன்படுத்தி பார்த்துவிட்டு ரிசல்ட்டை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய வெங்காயம். சமையலறையில் இருக்கும் வெந்தயம். பெரும்பாலும் இந்த இரண்டு பொருட்களும் முடி வளர்ச்சிக்கு எவ்வளவு அவசியம் என்பதை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். முந்தைய நாள் இரவே 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குறிப்பு 1:
இந்த குறிப்புக்கு நாம் முதலில் எடுக்க வேண்டியது வெங்காயச்சாறு. 2 பெரிய வெங்காயங்களை தோல் நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக வெட்டி, மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அரைத்து ஒரு துணியில் வடிகட்டினால் சுத்தமான வெங்காயச்சாறு நமக்கு கிடைத்துவிடும். தண்ணீர் ஊற்றப்படாமல் தான் வெங்காயத்திலிருந்து சாறை எடுக்க வேண்டும். தயார் செய்த இந்த வெங்காயச்சாறு அப்படியே ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து நமக்கு தேவை வெந்தைய தண்ணீர். முந்தைய நாள் இரவே 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலை வெந்தயத்தை வடிகட்டி எடுத்துவிட்டு, அந்த தண்ணீரை மட்டும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். வெந்தயத்தை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். (ஊற வைத்த வெந்தயத்தை குப்பையில் போடாதீங்க. அது ஓரமா அப்படியே இருக்கட்டும்.)

- Advertisement -

இப்போது ஒரு சிறிய ஸ்ப்ரே பாட்டிலில் 1/2 பாகம் வெங்காயச்சாறு, 1/2 பாகம் வெந்தய தண்ணீர் இது இரண்டையும் ஒன்றாக ஊற்றி, நன்றாக குலுக்கி விட்டால் நமக்கு தேவையான ஹேர் குரோத் ஸ்ப்ரே தயார். இதை ஃப்ரிட்ஜில் வைத்தால் ஏழு நாட்கள் கெட்டுப் போகாது. இந்த ஸ்ப்ரேவை தினம்தோறும் தலையில் ஸ்பிரே செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஸ்ப்ரே செய்யலாம். தலையில் மயிர் கால்களில் இந்த ஸ்ப்ரே படும்படி போட்டுக் கொண்டு உங்களுடைய விரல்களை வைத்து லேசாக 5 நிமிடம் மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் தலையை அலசினால் கூட போதும். உங்களுடைய முடி வளர்ச்சியை தூண்ட இந்த ஒரு ஸ்ப்ரேவே நன்றாக வேலை செய்யும். 30 நாட்கள் இதை விடாமல் பின்பற்றுங்கள்.

குறிப்பு 2:
இது ஒரு பேக். ஊறவைத்த வெந்தயம் இருக்கிறது அல்லவா. அந்த வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக விழுது போல நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை ஒரு பவுலுக்கு மாற்றிக்கொள்ளுங்கள். இந்த விழுதோடு மீதம் இருக்கும் வெங்காயச் சாறை ஊற்றி, நன்றாக கலந்து ஹேர் பேக் போட வேண்டும். இந்த ஹேர் பேக்கை வாரத்தில் 1 நாள் போட்டாலே போதும். பேக் 20 நிமிடங்கள் தலையில் இருக்கணும். அதன் பின்பு தலைக்கு ஷாம்பு போட்டு அலசிக்கொள்ள வேண்டும். வாரத்தில் ஒரு நாள் இந்த வெந்தைய ஹேர் பேக் ட்ரை பண்ணுங்க. கூடவே சேர்த்து முதலில் சொன்ன ஹேர் குரோத் ஸ்ப்ரேவையும் ட்ரை பண்ணி பாருங்க. இந்த இரண்டு குறிப்புகளையும் பின்பற்றி வந்தாலே போதும். உங்களுடைய முடி உதிர்வு குறைந்து அடர்த்தியாக செழிப்பாக வளர தொடங்கிவிடும்.

- Advertisement -