வெங்காயம் கூட வேண்டாம் வெங்காயத்தோல் இருந்தால் போதுமே உங்க முடி காடு போல கருகருன்னு அடர்த்தியாக வளருமே! இது தெரிஞ்சா இனி வெங்காயத்தோலை குப்பையில் போடவேமாட்டீங்க!

onion-peel-hair-growth
- Advertisement -

நாம் தினமும் பயன்படுத்தும் சமையலில் கண்டிப்பாக வெங்காயம் இடம்பெறுகிறது. வெங்காயம் இல்லாத சமையல் குறைவாகத் தான் செய்வோம். அப்படி இருக்கையில் வெங்காயத்தின் உடைய தோலில் இருக்கக்கூடிய சத்துக்களை வீணாக குப்பையில் கொட்டுகிறோம் என்று தான் கூற வேண்டும். வெங்காயத்தில் ஏராளமான நன்மை செய்யக்கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கக்கூடிய சல்பர் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடியதாக இருக்கிறது. அதனால் தான் வெங்காய ஜூஸை தலைக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வெங்காயத்தில் இருக்கும் தோல் கூட சத்து மிக்கது. இதை வைத்து எப்படி தலைமுடியை அடர்த்தியாக வளர செய்வது? மேலும் இதை வைத்து பெறக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதை தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து நாம் காண இருக்கிறோம்.

வெங்காய தோலில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார் சத்து, விட்டமின் ஈ, சி, ஏ, ஆன்டி ஆக்சிடென்ட்கள் அனைத்தும் தலைமுடியின் வளர்ச்சிக்கு உந்துகோலாக இருக்கிறது. மேலும் சரும பிரச்சனைகளையும் நீக்க வல்லது இந்த சத்துக்கள் அனைத்தும். தினமும் உரித்து கிடைக்கக்கூடிய வெங்காய தோலை சேகரித்து வாருங்கள். முதலில் வெங்காயத் தோலில் இருக்கும் சத்துக்கள் மனிதனை விட தாவரங்களுக்கு அதிகமாக பயன்படுகிறது எனவே உங்கள் வீட்டில் செடி, கொடிகள் இருந்தால் அதற்கு உரமாக தினமும் கொஞ்சம் வெங்காயத்தோல் போட்டு வாருங்கள். நல்ல ஒரு செழிப்பான வளர்ச்சியை பார்க்கலாம்.

- Advertisement -

வெங்காய தோலை வெயிலில் நன்கு காய வைத்து பவுடர் போல செய்து வைத்துக் கொண்டால் இந்த பவுடரை தண்ணீரில் கலந்து செடி, கொடிகளுக்கு உரமாக தினமும் கொடுக்கலாம். குறிப்பாக ரோஜா செடி நன்கு செழித்து வளர இது போல வெங்காய தோலை போட்டு வரலாம். அது மட்டும் அல்லாமல் வெங்காயத்தோலை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் அந்த தண்ணீரை நன்கு ஆற வைத்து ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து நன்கு உலர விட்டு கழுவினால் சரும பிரச்சனைகள் அனைத்தும் எளிதாக மறையும். முக சுருக்கங்கள், கருவளையம், கரும்புள்ளிகள் நீங்கி முகம் வெள்ளை வெள்ளேர் என பளிச்சுன்னு இருக்கும்.

தலை முடிக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்? ஒரு கைப்பிடி நிறைய வெங்காயத்தை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். இதனுடன் அரை கைப்பிடி அளவிற்கு பச்சை கருவேப்பிலை இலைகளை போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பத்து நிமிடம் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீரை இப்பொழுது வடிகட்டி விட்டு ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் கூட நீங்கள் வடிகட்டி அடைத்து வைக்கலாம். தலைமுடியின் ஸ்கேல்ப் பகுதியில் இந்த தண்ணீரை நன்கு ஸ்ப்ரே செய்து ஒரு பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு தலைக்கு நீங்கள் எப்பொழுதும் போல ஷாம்பு போட்டு குளிக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
தோட்டத்தில், வீட்டில் எலி தொல்லையா? எலிகளை ஓட ஓட விரட்ட இதை செய்து வைத்தாலே போதும்! முற்றிலும் புதுமையான முறை.

ஷாம்பு போட்டு குளிப்பவர்கள் ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்துவது நல்லது. ஷாம்புவின் பிஹெச் அளவு ரொம்பவும் முக்கியம். ஷாம்புவை தண்ணீரில் நன்கு கரைத்து பின்னர் பயன்படுத்துங்கள். இதனால் அதன் ரசாயனங்கள் உங்களுடைய தலைமுடியை பாதிப்பதை தடுத்து நிறுத்தும். தொடர்ந்து இதுபோல வெங்காயத்தோலலில் கிடைக்கக்கூடிய தண்ணீரை தலைக்கு பயன்படுத்தி வருவதன் மூலம் முடி நன்கு அடர்த்தியாக வளரும்.

- Advertisement -