வெங்காய சாதத்துடன் இந்த பாகற்காய் வறுவலையும் சேர்த்து செய்து பாருங்கள், இதன் காம்பினேஷன் மிகவும் அருமையாக இருக்கும்

onion-rice
- Advertisement -

தினமும் சாதம், குழம்பு, பொரியல் என்று தனித்தனியாக செய்வதை தவிர்த்துவிட்டு, இவ்வாறு ஒரு முறை வெங்காய சாதம் செய்து பாருங்கள். இதனை செய்வது மிகவும் சுலபமான விஷயம்தான். தக்காளி, வெங்காயம் இருந்தால் போதும் உடனே இதனை செய்து விடலாம். அவ்வாறு இதனுடன் தொட்டுக் கொள்ள இந்த பாகற்காய் வறுவலும் மிகவும் அருமையாக இருக்கும். வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட இதனை ஒரு முறை சுவைத்து விட்டால் மறுபடியும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த சுவையான உணவினை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சாதம் – 1 கப், வெங்காயம் _ 1,தக்காளி – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 – ஸ்பூன், எண்ணெய் – 3.ஸ்பூன், முட்டை – 4, கறிவேப்பிலை – ஒரு குத்து, மிளகாய்த்தூள் – 1ஸ்பூன், தனியா தூள் – 1ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், கொத்தமல்லி இலை – ஒரு கொத்து, காய்ந்த மிளகாய் – 2, கடுகு _ 1ஸ்பூன், நெய் – 1ஸ்பூன், மிளகுத்தூள் – 1 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அத்துடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அது வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். எல்லாம் வதங்கியதும் அதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாகக் கொதித்ததும் நன்றாக கலந்து வைத்துள்ள முட்டையை அதனுடன் சேர்த்து வதக்கவும். முட்டை நன்றாகக் கலந்து தண்ணீர் வற்றியதும், அதனுடன் சாதத்தையும் சேர்த்து கலந்து விடவும். அதனுடன் மிளகுத்தூளும், நெய்யும், கொத்தமல்லி தழையும் சேர்த்து மூடி 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும்.

பாகற்காய் வறுவல்: 
பாகற்காய் வறுவல் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை, இதனை நீங்கள் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ளலாம் தவிர பிசிபேளாபாத், வாங்கிபாத் மற்றும் தக்காளி சாதத்துடனும் சுவையாக இருக்கும்.  பாகற்காய் வறுவல் செய்முறை விளக்க புகைப்படங்களுடன் கண்டு செய்து சுவைத்து மகிழுங்கள்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 3, மிளகாய் தூள் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்,
மல்லித்தூள் – 1/2 ஸ்பூன், அரிசி மாவு _ 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு – 1ஸ்பூன், எண்ணெய் – 280 கிராம், புளித்த மோர் – 1/4 கப், உப்பு – 1ஸ்பூன்.

செய்முறை:
பாகற்காயை கழுவி வட்ட வடிவில் நறுக்கி விதைகளை நீக்கி விடவும். நறுக்கிய பாகற்காய் புளித்த மோரில் 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின்னர் பாகற்காய் துண்டுகளை பிழிந்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் மற்றும் அரிசி மாவு சேர்த்து கலக்கவும் பின் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். கலவையை 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின்னர், சிறிதளவு எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சுவையான பாகற்காய் வறுவல் தயாராகிவிடும்.

- Advertisement -