ஒரே வாரத்தில் வேற லெவல் ரிசல்ட் கிடைக்கும். குப்பையில் தூக்கி போடும் இந்த 1 பொருள் இருந்தால், கொட்டிப்போன இடத்தில் எல்லாம் முடி முட்டி மோதிக் கொண்டு வளரும்.

hair11
- Advertisement -

முடி கொட்டுதல் என்பது முக்கால்வாசி பேருக்கு இப்போது இருக்கக்கூடிய ஒரு பெரிய பிரச்சனை. இதை சரி செய்வதற்கு எவ்வளவு முயற்சிகளை நாம் மேற்கொள்கின்றோம். ஆனால் பலன் என்பது நாம் எதிர்பார்த்த அளவுக்கு கிடைப்பது கிடையாது. தலைமுடிக்கு மேலே ஹேர் பேக், சீரம், எண்ணெய் என்று எது போட்டாலும், அதே அளவுக்கு நாம் உள்ளுக்கு சாப்பிடக்கூடிய உணவு பழக்க வழக்க முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

எப்படி? ஒரு நாள் அல்லது ஒரு வாரம், ஒரு மாதம் ஆரோக்கியம் தரும் பொருட்களை சாப்பிட்டு விட்டு நிறுத்திவிட்டால் முடி வளராது. வருட கணக்கில் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போதுதான் முடி வளர்ச்சியில் சீரான நல்ல வித்தியாசம் தெரியும். குறைவாக சாப்பிடாலும், ஆரோக்கியமாக சாப்பிடனும். கூடவே பின் சொல்லக்கூடிய இந்த ஹேர் சீரம் குறிப்பையும் பின்பற்றி பாருங்கள். இந்த அழகு குறிப்பு உங்களை மேலும் அழகாகும்.

- Advertisement -

முடி உதிர்வை கட்டுப்படுத்தும் ஹேர் சீரம்:
இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் குப்பையில் தூக்கி போடும் வெங்காயத்தோல். இரண்டு பெரிய வெங்காயத்தின் தோலை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளை வெங்காயத்தோல் பயன்படுத்த வேண்டாம். சிவப்பு வெங்காய தோலை குறிப்புக்கு பயன்படுத்துங்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, அதில் 1 ஸ்பூன் டீ தூள், எடுத்து வைத்திருக்கும் வெங்காயத்தோல், இந்த இரண்டு பொருட்களையும் போட்டு 10 நிமிடங்கள் மிதமாக கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீரில் டீ தூளின் சத்தும், வெங்காய தோலில் இருக்கும் சத்தும் நன்றாக இறங்கிவிடும். அடுப்பை அணைத்துவிட்டு, இதை நன்றாக ஆற வைத்து வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் 7 நாட்கள் கெட்டுப் போகாது. இந்த சீரமை எப்படி பயன்படுத்துவது? தினமும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, இந்த சீரமை தலைமுடியில் வேர்க்கால்களில் படும்படி ஸ்பிரே செய்து விட வேண்டும்.

- Advertisement -

பத்து நிமிடங்கள் கழித்து உங்களுடைய தலையை நன்றாக காய வைத்து விட்டு, எப்போதும் போல தலை சீவிக் கொள்ளலாம். இந்த ஸ்பிரேவை அடித்துவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பெரியதாக கெட்டவாடை ஒன்றும் வீசாது. இல்லை நீங்கள் வேலைக்கு செல்பவர்கள், வெளியில் செல்பவர்கள் இந்த வாடை தலைமுடியில் வீசும் என்றால் தலைக்கு குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த ஸ்க்ரேவை நன்றாக வேர்க்கால்களில் படும்படி ஸ்பிரே செய்துவிட்டு தலைக்கு குளித்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இனி நீங்க வெளிய போகணும்னா சட்ன்னு ரெடி ஆகிடலாம். என்னன்னா ரெண்டு நிமிஷத்திலேயே முகத்தை பளிச்சுன்னு மாத்திடலாம். கேக்கவே ஆச்சரியமா இருக்கா வாங்க அது எப்படின்னு பாக்கலாம்.

முடி உதிர்வுக்கு நல்ல ரிசல்டை ஏழே நாட்களில் கொடுக்கும் ரெமிடி இது. தினமும் இதை தலைக்கு ஸ்பிரே செய்யலாம். ஆனால் தினமும் தலைக்கு குளிக்க முடியாது என்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த ஸ்ப்ரேவை பயன்படுத்துங்கள். தொடர்ந்து இந்த ஸ்பிரேவை தலைக்கு போட்டுவிட்டு அப்படியே காய விடுபவர்களுக்கு, 7 நாட்களில் கண்கூடாக முடி உதிர்வதில் வித்தியாசம் தெரியும். மூன்று மாதத்தில் தலைமுடி அடர்த்தியாக வளர்ப்பதை உணர முடியும். உங்களுக்கு இந்த பியூட்டி டிப்ஸ் பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -