ஊமையாய் மாறிய நான் – காதல் கவிதை

Love kavithai

ஓயாமல் உன்னிடம் மட்டுமே
காதல் வார்த்தைகளை
பேசியதால் தானோ என்னவோ
இன்று நான் பிறரோடு ஊமை போல
வாழ்கிறேன்..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
முத்த மழை – காதல் கவிதை

காதலர்கள் என்றாலே எப்போதும் ஓயாமல் ஏதாவது ஒன்றை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேசி முடித்த பிறகு எதை பற்றி பேசினீர்கள் என்று கேட்டால் அவர்களுக்கே அது தெரியாது. ஆனால் இரவு முழுவதும் கூட எதையாவது ஒன்றை பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். அல்லது ஏதாவது ஒரு சின்ன சண்டை காரணமாக நாள் முழுவதும் பேசாமல் இருப்பார்கள். இதுவே பல காதலர்களின் தினசரி நிலை.

இந்த நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த காதலர்கள் பிரிந்து வேறோருவரை மணக்க நேரிடுகையில் அவர்களின் வாழ்வு சில வலிகளை அனுபவிக்க துவங்குகிறது. தன்னுடைய கணவனோ அல்லது மனைவியோ தன்னை நன்கு புரிந்து அவர்களோடு சேர்ந்து வாழ அவர்களுக்கு சில காலம் தேவை படுகிறது. அது வரை அவர்களின் வாழ்வு ஒரு மௌன போராட்டமாகவே மாறுகிறது.

Love Kavithai image
Love Kavithai

அன்னை பற்றிய கவிதைகள், அண்ணன் தம்பி கவிதை, காதல் கவிதைகள் என பல அழகிய தமிழ் கவிதைகளை நீங்கள் இங்கு படிக்கலாம்.