புதிதாக தொழில் தொடங்குவதில் இருந்து எந்த ஒரு சுபகாரியமாக இருந்தாலும் அதை ஓரை பார்த்து தொடங்குமாறு நமது வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் இந்த ஓரை என்பது மாறிக்கொண்டே இருக்கும். இதில் சந்திர ஓரை, புதன் ஓரை, குரு ஓரை, சுக்ர ஓரை ஆகியவை சுப ஓரை என்றும், சூரிய ஓரை, செவ்வாய் ஓரை, சனி ஓரை ஆகியவை அசுப ஓரை என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் எந்த நாளில் எந்த நேரத்தில் எந்த ஓரை நிகழும் என்பதை கீழே உள்ள அட்டவணையை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

நவகிரகங்களில் ராகுவும், கேதுவும் சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லை என்பதாலும் அவ்விரு கிரகங்களுக்கும் ஓரை கிடையாது. சூரியனை மையப்படுத்தி, அதற்க்கு அருகிலும் தொலைவிலும் உள்ள கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி மற்றும் அதன் அலைக்கதிர்கள் நாம் வாழும் இந்த பூமியை அடைவதற்கான நேரம் இப்படி பல விடையங்களை அடிப்படியாக கொண்டே ஓரை நேரத்தை நம் முன்னூர்கள் கணித்துள்ளனர். ஒவ்வொரு ஓரை பற்றியும், அதில் நாம் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றியும் இனி காண்போம்.
சூரிய ஓரை
சூரிய ஓரையில் எந்த ஒரு நல்ல செயலையும் தொடங்கக் கூடாது. இந்த சமயத்தில் பெரியோர்களை சந்தித்து ஆசி பெறலாம். உயில் சம்பந்தப்பட்ட பத்திரங்களை எழுதலாம். இந்த ஓரையில் ஏதாவது ஒரு பொருளை நீங்கள் தொலைத்து விட்டால் திரும்பவும் கிடைக்கும் என்பது நிச்சயம் இல்லை. நீங்கள் தொலைத்த பொருளை பற்றிய நினைவே உங்களுக்கு மறந்து போயிருக்கும் சமயத்தில் கிழக்கு பக்கமாக கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
சந்திர ஓரை
சுப காரியங்களுக்கு ஏற்றது சந்திர ஓரை. பெண்களுக்கான சுபகாரியங்களை இந்த ஓரையில் செய்யலாம். நல்ல காரியங்களை பற்றி உறவினர்களிடம் சந்தித்து பேச வேண்டுமேயானால் இந்த ஓரையில் பயணத்தை தொடரலாம். கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும் இந்த நேரத்தில் செல்வது நல்லதை தரும். இந்த ஓரையில் தொலைத்த பொருட்களை திரும்பவும் கண்டுபிடிக்க முடியாது.
செவ்வாய் ஓரை
எந்த ஒரு நல்ல காரியத்தையும் இந்த ஓரையில் தொடங்கக் கூடாது. இருப்பினும் கோயில் தொடர்பான விஷயங்களையோ, சண்டை சச்சரவு காண பஞ்சாயத்துகளையோ இந்த நேரத்தில் பேசலாம். இந்த நேரத்தில் ஏதேனும் பொருட்கள் தொலைந்து போனால் உடனே தேடும் பட்சத்தில் கிடைக்கலாம்.
புதன் ஓரை
நல்ல காரியங்களை செய்ய ஏற்ற நேரம் இது. கல்வி தொடர்பான ஆலோசனைகளை பற்றி பேசலாம். எழுத்து சம்பந்தப்பட்ட வேலை எதுவாக இருந்தாலும் இந்த சமயத்தில் தொடங்கலாம். நேர்மையாக செய்யும் எந்த ஒரு வேலையானாலும் இந்த ஓரையில் செய்யலாம். இந்த ஓரையில் தொலைத்த பொருட்களை சீக்கிரமாகவே கண்டுபிடித்துவிடலாம்.
குரு ஓரை
வியாபாரம், விவசாயம் எதுவாக இருந்தாலும் இந்த ஓரையில் தொடங்கலாம். எந்த ஒரு பொருளையும், வாங்கவோ விற்கவோ உகந்த நேரம் இது. அது ஆடை, அணிகலன்களாகவும் இருக்கலாம். வீடு, மனை, வாகனங்களாகவும் இருக்கலாம். எதுவானாலும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்ய வேண்டும். கப்பல் பயணம் செய்ய இது ஏற்ற நேரம் அல்ல. இந்த நேரத்தில் தொலைந்த பொருட்கள் உடனே கிடைத்துவிடும்.
சுக்கிர ஓரை
எல்லாவிதமான நல்ல விசேஷங்களையும் இந்த நேரத்தில் செய்யலாம். வீடு, நிலம், வாகனம், ஆடை, விலை உயர்ந்த பொருட்கள் எதுவாக இருந்தாலும் இந்த நேரத்தில் வாங்குவது நன்மை தரும். பெண்கள் தொடர்பான நல்ல முடிவுகளை எடுக்க சிறந்த நேரம் இது. இந்த நேரத்தில் தொலைந்து போன பொருட்கள் சில நாட்களில் கிடைத்துவிடும்.
சனி ஓரை
எந்த விதமான சுபகாரியங்களுக்கும் இந்த நேரம் ஏற்றது அல்ல. எந்த வேலையையும் புதியதாக தொடங்கக் கூடாது. சட்டம் சம்மந்தமான பிரச்சனைகளை பேசி ஆலோசித்து முடிவெடுக்கலாம். இந்த ஓரையில் தொலைந்த பொருட்கள் பல வருடங்கள் கழித்து தான் கிடைக்கும்.
இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.
English Overview:
Here we have Orai palangal in Tamil. Oorai table is also given here. Orai kalam complete details available above in Tamil.