வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் பூச்சிக்கொல்லி மருந்து எப்படி தயாரிப்பது? இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் ஒரு பூச்சி கூட உங்கள் செடியை தொந்தரவு செய்யாது!

garlic-juice-garden
- Advertisement -

வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள் அல்லது செடி, கொடிகள் வளர்ப்பவர்கள் பூச்சிகள் இடமிருந்து அதனை பாதுகாப்பது என்பது ரொம்ப சிரமமான ஒரு விஷயமாக இருக்கும். இதற்காக கண்ட கண்ட ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்கி தெளித்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல! அப்பூச்செடிகளின் வளர்ச்சியும் பெருமளவு படிப்படியாக பாதிக்கப்பட்டு விடுகிறது எனவே ஆர்கானிக் முறையில் எப்படி வீட்டிலேயே ரொம்ப சுலபமாக பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

ஆர்கானிக் முறையில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரித்தால் பக்க விளைவுகள் எதுவும் இல்லாமல் ஒரு பூச்சி கூட உங்கள் செடியை தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளலாம். இதை வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி ரொம்ப சுலபமாக செய்து கொள்ளலாம். காசு செலவு பண்ணி எந்த ஒரு விஷயத்தையும் நாம் செய்வதை விட ஆரோக்கியமான முறையில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி உரமாகவும், பூச்சிக்கொல்லி மருந்தாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் நம் வீட்டு செடிகளுக்கு கொடுத்து வந்தால் செடியின் ஆரோக்கியமும், அதை பயன்படுத்தும் மனித ஆரோக்கியமும் பேணி பாதுகாக்கப்படுகிறது. எனவே ஆர்கானிக் பூச்சி கொல்லி மருந்து எப்படி தயாரிக்கலாம்?

- Advertisement -

பொதுவாக பூச்சி கொல்லி மருந்து தயாரிக்க வேப்ப எண்ணெய் பயன்படுத்தப்படுவது வழக்கம். வேப்ப எண்ணெய் வீட்டிலேயே உங்களுக்கு செய்ய தெரிந்தால் செய்து கொள்ளுங்கள். அல்லது கடையில் மலிவு விலையில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். 50ml 30 ரூபாயிலிருந்து கிடைக்கப் பெறுகிறது. நாட்டு மருந்து கடை அல்லது உரக்கடைகளில் கிடைக்கும் இந்த வேப்ப எண்ணையுடன் ஒரு சில பொருட்களை கலந்து வைத்துக் கொண்டால் நல்லதொரு பூச்சிக்கொல்லி மருந்தாக செயல்படும்.

பூச்செடிகளை அதிகம் தாக்கும் வண்டுகள், பூச்சிகள், மாவு பூச்சிகள் மட்டுமல்லாமல் காய்கறி செடிகளை தாக்கக்கூடிய மற்ற சில வகை பூச்சிகளும் இதன் மூலம் அழியும். இதனால் செடியின் வளர்ச்சி சமசீராக இருக்கும். முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு வேப்ப இலையை எடுத்து சுத்தம் செய்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். பாதி அளவுக்கு நன்கு கொதித்ததும் வடிகட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு பத்து பூண்டு பற்களை தோலுடன் இடித்து அரை டம்ளர் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். பின்னர் இந்த தண்ணீரையும் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு சாறு கலந்த தண்ணீர் மற்றும் வேப்ப இலை தண்ணீர் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் வேப்ப எண்ணெய் தேவையான அளவிற்கு சேர்த்து ஒரு ஸ்பூன் வாஷிங் லிக்விட் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எந்த வாஷிங் லிக்விட் பயன்படுத்தினாலும் சரி தான். பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்க கண்டிப்பாக ஏதாவது ஒரு வாஷிங் லிக்விட் சேர்த்து தான் ஆக வேண்டும். பின்னர் இதை நன்கு குலுக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இது எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது, எனவே உங்களுடைய செடிகளில் பூச்சி தொந்தரவு இருக்கும் சமயங்களில் மட்டும் நீங்கள் லேசாக ஸ்பிரே செய்து விட்டால் போதும், ஒரு இலையிலும் பூச்சி தாக்குதல் இல்லாமல் செடி அசுர வேகத்தில் நன்கு வளரும்.

- Advertisement -