ஒருமுறை ஒட்டடை அடித்து விட்டால் போதும். அடுத்த 1 வருடத்திற்கு உங்க வீட்ல ஒட்டடையும் சேராது. சிலந்தி பூச்சியும் வராது. இந்த ஒரு குறிப்பு மட்டும் உங்களுக்கு தெரிந்தால்.

ottadai
- Advertisement -

நம்முடைய வீட்டிற்கு தேவையான பயனுள்ள சின்ன சின்ன குறிப்புகளைத்தான் இன்று பார்க்கப் போகின்றோம். இந்த குறிப்புகள் முழுவதற்கும் நாம் பயன்படுத்த போகும் பொருள் கற்பூரம். அதிலும் மெழுகு கற்பூரம் பயன்படுத்தாமல், கட்டி கற்பூரம் நாட்டு மருந்து கடைகளில் விற்கும் அல்லவா. அந்த கற்பூரத்தை வாங்கி குறிப்புக்கு பயன்படுத்தினால் நல்ல பலன் இருக்கும். குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் வீட்டிற்கு பயனுள்ள குறிப்புகளாகத்தான் இருக்கும்.

முதலில் வீட்டில் அடிக்கடி அதிகமாக ஓட்டடை சேராமல் இருக்க, அடிக்கடி சிலந்து பூச்சி கூடு கட்டாமல் இருக்க, ஒரு சுலபமான குறிப்பு பார்த்து விடுவோம். ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு கட்டி கற்பூரத்தை நசுக்கி போட்டுக் கொள்ளுங்கள். அதில் தண்ணீரை ஊற்றி அந்த கற்பூரத்தை தண்ணீரில் நன்றாக கரைத்து விடுங்கள். இந்த கற்பூரம் வாசம் நிறைந்த தண்ணீரில் ஒரு காட்டன் கைகுட்டை அல்லது பழைய காட்டன் துண்டை நனைத்து நன்றாக பிழிந்து ஒட்டடை அடிக்கும் குச்சிக்கு பின்பக்கம் கூட நன்றாக இந்த துணியை கட்டிவிடலாம்.

- Advertisement -

இந்த ஈரத் துணியை மேலே சுவற்றின் மூளை முடுக்குகளில் அப்படியே தடவி வர வேண்டும். அப்போது இந்த கற்பூர தண்ணீர் அந்த இடத்தில் எல்லாம் ஒட்டிக் கொள்ளும். இந்த வாசத்திற்கு சிலந்திப் பூச்சி நிறைய வராது. அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் நிறைய ஓட்டடையும் சேராது.

இந்த ஐடியாவை இப்படி முயற்சி செய்ய கஷ்டமாக இருந்தால், ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கற்பூர கரைத்த தண்ணீரை ஊற்றிக் கொண்டு, அந்த ஸ்பிரேவை வீட்டின் சீலிங்கில் மூளை முடுக்குகளில் எல்லாம் ஆங்காங்கே ஸ்பிரே செய்து விடுங்கள். குறிப்பாக சமையல் அறையில் சிங்குக்கு அடியில், மேடைக்கு அடியில் எல்லாம் இந்த ஸ்பிரேவை அடித்து விட்டால் சின்ன சின்ன பூச்சி போட்டு தொல்லை இருக்காது. சிலந்தி தொல்லையும் இருக்காது. டியூப்லைட்டுக்கு கீழே அடித்துவிட்டால் பொழுது சாய்ந்த நேரத்தில் அந்த இடத்தில் நிறைய பூச்சி பொட்டுகள் கொசுக்கள் வந்து தாங்காது. இந்த குறிப்பை ஒரே ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு மெல்லிசான டிஷ்யூ பேப்பரில் நசுக்கிய கற்பூரத்தூள், இரண்டு மிளகு சேர்த்து மடித்துக் கொள்ளுங்கள். இதை உங்களுடைய பீரோவில் ஆங்காங்கே வைத்து விடுங்கள். பீரோவுக்குள் மழைக்காலத்தில் ஒரு துர்நாற்றம் வீசும் அல்லவா அது வீசாமல் இருக்கும். உங்களுடைய துணிகளும் நறுமணத்தோடு இருக்கும். இதேபோல புத்தகம் அடிக்க வைத்திருக்கக்கூடிய இடத்திலும் இந்த கற்பூரத்தை வைத்தால் சின்ன சின்ன பூச்சிகள் வராமல் இருக்கும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு சின்ன கட்டி கற்பூரத்தை நசுக்கி போட்டுக் கொள்ளுங்கள். இதில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி நன்றாக உங்கள் கையை வைத்து கலந்தால் இது ஒரு பேஸ்ட் பக்குவத்திற்கு நமக்கு கிடைத்துவிடும். இந்த பேஸ்ட்டை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்தால் மூன்று மாதத்திற்கு கெட்டுப் போகாது. திடீரென தலைவலி வந்தால் இதை எடுத்து கொஞ்சம் நெற்றியில் லேசாக தடவினால் தலைபாரம் குறையும்.

குழந்தைகளுக்கு தீராத இருமல் தீராத சளி தொல்லை இருக்கிறது என்றால் இதிலிருந்து மிக சிறிய அளவு எடுத்து குழந்தைகளின் நெஞ்சில், அதாவது மார்பு பகுதியில் தடவி விட்டால் நெஞ்சு சளி கரையும். இந்த குளிர்காலத்திற்கு இது அடிக்கடி தேவைப்படும். இருமல் குறையும். இது அந்த காலத்தில் நம்முடைய பாட்டிகள் செய்து வந்த கை வைத்தியம் தான். மேலே சொன்ன கற்பூர குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -