இப்படிப்பட்ட சொரசொரப்பான டயல்சை கூட ஒரு நொடிப் பொழுதில் சுத்தம் செய்ய 1 ஸ்பூன் இந்த லிக்விட் இருந்தா போதும். கைப்படாமல் இந்த டயல்சில் ஒட்டி இருக்கும் விடாப்பிடியான அழுக்கு எல்லாம் தானாக வெளியே வந்து விடும்.

tiles
- Advertisement -

நிறைய பேர் வீடுகளில் வாசலில் இருக்கும் படிக்கட்டுகள், பால்கனியில் இருக்கும் காலியான இடம், வீட்டை சுற்றி இருக்கும் இடம், சிட் அவுட், கார் பார்க்கிங் என்று வெளிப்புற இடங்களில் இப்படிப்பட்ட சொரசொரப்புரப்பான டயல்சை ஒட்டி இருப்பார்கள். காரணம் அந்த டைல்ஸ் வழுக்காமல் இருக்கும் என்பதற்காக. சில பேர் வீட்டு பாத்ரூமில் கூட இப்படிப்பட்ட டயல்ஸ் இருக்கும். ஆனால் இதில் அழுக்கு படிந்து விட்டால் அதை அவ்வளவு எளிதில் நம்மால் சுலபமாக சுத்தம் செய்யவே முடியாது. இதனுடைய இடுக்குகளில் எல்லாம் அழுக்கு போய் ஒட்டி கொள்ளும். இப்படிப்பட்ட டயல்சை மிக மிக எளிமையான முறையில் சுத்தம் செய்வது எப்படி என்பதை பற்றிய பயனுள்ள ஒரு வீட்டு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

உங்கள் வீட்டு குளியல் அறையில் முதலில் இப்படிப்பட்ட டயல்ஸ் ஒட்டி இருக்குதா. அதை நீங்கள் தினமும் சுத்தம் செய்து தான் ஆக வேண்டும். சில பேர் வீடுகளில் வாஷிங் மெஷின் துவைத்துவிட்டு, தண்ணீரை வெளியேற்றும். அந்த தண்ணீர் குளியல் அறைக்குள் சென்று தான் சாக்கடைக்குள் செல்லும். அப்படி இருக்கும்போது, வாஷிங் மெஷின் துணி துவைத்து முடித்தவுடன், அழுக்கு நிறைந்த சோப்பு தண்ணீர் போன அந்த டயல்சை, உடனடியாக நீங்கள் தேய்த்து கழுவி விட வேண்டும். அப்படி இல்லை என்றால் துணி துவைத்து வெளிவரக்கூடிய அந்த அழுக்கு தண்ணீர், அப்படியே டயல்சில் ஒட்டி பிடிக்கும். அது காய்ந்து போய்விட்டால், எளிதில் சுத்தம் செய்யவே முடியாது. கையில் துணிகளை துவைத்தாலும் வாஷிங் மெஷினில் துணிகளை துவைத்தாலும் உடனடியாக குளியலறையை சுத்தம் செய்து விட வேண்டும்.

- Advertisement -

சொரசொரப்பாக இருக்கும் டயல்ஸை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி?
ரொம்பவும் சொரசொரப்பாக இருக்கக்கூடிய டயல்ஸை ரின் ஆலா லிக்விட்(rin ala bleach) ஊற்றி சுத்தம் செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். (உங்களுக்கு விருப்பம் என்றால் வேறு ஏதாவது பிராண்டில் ஆலா இருந்தாலும் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.) உங்கள் வீட்டு குளியலறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த லிக்விடை பரவலாக ஊற்றி, துடைப்பத்தாலோ அல்லது வேறு ஏதாவது பிரஷ் கொண்டு நன்றாக தேய்த்து விட்டு பத்து நிமிடம் ஊற வைத்துவிட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி தரையை சுத்தமாக கழுவி விடுங்கள். வாரத்தில் இரண்டு நாள் இந்த ரின் ஆலாவைக் கொண்டு பாத்ரூமில் சுத்தம் செய்து வர உங்களுடைய பாத்ரூம் எப்போதுமே பளிச்சென்று இருக்கும். இடுக்குகளில் ஒட்டி இருக்கும் அழுக்கை கூட இது சுலபமாக நீக்கிவிடும்.

இதே போல உங்கள் வீட்டை சுற்றி இருக்கக்கூடிய இப்படிப்பட்ட சொரசொரப்பான டயல்ஸை கூட மாதத்தில் ஒரு நாள் கழுவி விட வேண்டும். மாதத்தில் ஒரு நாளுக்கு மட்டும் இந்த ரின் ஆலாவை பரவலாக டயல்ஸ் மேல் ஊற்றி பிரஷை போட்டு தேய்த்து விட்டு, பத்து நிமிடம் ஊறவிட்டு அதன் பின்பு ஹோல்ஸ் பைப்பை வைத்து தண்ணீரை ஃபோர்ஸாக அடித்தால் கூட, எவ்வளவு பெரிய காலி இடமாக இருந்தாலும் அதில் ஒட்டி இருக்கும் டயல்ஸ் அனைத்தும் பத்தே நிமிடத்தில் பளிச்சு பளிச்சென மாறிவிடும். இனி கஷ்டப்பட்டு அதை சுத்தம் வேண்டும் என்று அவசியமே இருக்காது.

- Advertisement -

இப்போதெல்லாம் நின்று கொண்டே தரையை தேய்க்க கூடிய, கொஞ்சம் ஹார்ஷான பிரஷ் கடையில் விற்கின்றது. அதை வாங்கி இப்படி சுத்தம் செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேலை சுலபமாக முடிந்துவிடும். கொஞ்சம் சொரசொரப்பாக இருக்கக்கூடிய பிரஷ் ஆக வாங்கி இப்படிப்பட்ட டயல்சை தேய்கும் போது அந்த கோடுகளில் இருக்கக்கூடிய அழுக்குகள் எல்லாமும் முழுமையாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: நீங்களும் சமையல் கில்லாடியாக இந்த 10 சமையல் குறிப்பையும் தெரிஞ்சுக்க விட்டுடாதீங்க!

பெரும்பாலும் இந்த ஆலாவை வெள்ளைத் துணிகள் பளிச்சிடுவதற்கு தான் நாம் பயன்படுத்துவோம். ஆனால் இப்படிப்பட்ட சொரசொரப்பு தரையில் இருக்கும் அழுக்கை நீக்கவும் இது ரொம்ப ரொம்ப உதவியாக இருக்கும். பாத்ரூமை சுத்தம் செய்யக்கூடிய லிக்விட் வாங்குவதை விட, இது நமக்கு மலிவாகவே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க வீட்ல ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -