நீங்களும் சமையல் கில்லாடியாக இந்த 10 சமையல் குறிப்பையும் தெரிஞ்சுக்க விட்டுடாதீங்க!

samayal-tips-10
- Advertisement -

நாம் சமைக்கும் பொழுது எப்பொழுதும் அதில் ஈடுபாட்டுடன் இருந்தால் தான் செய்யும் சமையலில் ருசி அதிகரிக்கும். மேலும் நம் குடும்பத்திற்காக சமைக்கும் பொழுது அன்பு, பாசம், அக்கறை எல்லாம் சேர்த்து சமைப்பதால் அது ருசிக்கிறது என்று கூற கேட்டிருப்போம். இப்படி சமையல் ருசியாக இருக்க கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான 10 குறிப்புகள் இதோ உங்களுக்காக இந்த சமையல் டிப்ஸ் பதிவில்!

குறிப்பு 1:
குக்கரில் சாதம் வடிப்பவர்கள் அதில் சரியான அளவு தண்ணீர் சேர்க்காமல் விதையாக இருந்தால் அரிசி மூழ்கும் அளவிற்கு மீண்டும் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் மட்டும் விட்டு எடுத்துப் பாருங்கள். சரியான பதத்தில் மிருதுவாக வெந்து வரும்.

- Advertisement -

குறிப்பு 2:
வீட்டிலேயே உரை மோர் ஊற்றி தயிர் தயாரிப்பவர்கள் நன்கு காய்ச்சின பாலில் சாதம் வடித்த கஞ்சியை சிறிதளவு ஊற்றி வையுங்கள், கெட்டியாக தயிர் கிடைக்கும்.

குறிப்பு 3:
சாம்பார், ரசம் போன்றவை மீந்து போய் விட்டால் அதனுடன் சிறிதளவு புளியை கரைத்து ஊற்றி சிறிதளவு எண்ணெயில் கடுகு போட்டு தாளித்துக் கொட்டுங்கள். மீண்டும் புதியதாக வைத்த சாம்பார், ரசம் ரொம்பவே ஃப்ரஷ் ஆன சுவையில் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
வாரம் ஒரு முறை பாகற்காயை கட்டாயம் சமையலில் சேர்த்து வந்தால் வயிறு சுத்தமாகும். பாகற்காய் வாங்கி சமைக்கும் பொழுது பிஞ்சு காயாக வாங்கினால் கசப்பு அவ்வளவாக தெரியாது. சிறிதளவு உப்பை தடவி பத்து நிமிடம் கழித்து நன்கு கழுவி பின்னர் சமைத்து பாருங்கள், அப்பொழுதும் கசப்பு உங்களுக்கு தட்டாது.

குறிப்பு 5:
பிரியாணி சமைக்கும் பொழுது மல்லி, புதினா, பச்சை மிளகாய் மற்றும் அதனுடன் சிறிதளவு சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து பிரியாணியில் சேர்த்து சமைத்து பாருங்கள், ருசி அபாரமாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
எந்த ஒரு ரெசிபி உங்களுக்கு நன்றாக வருகிறதோ, அதை நீங்கள் தொடர்ந்து சமைக்க சமைக்க தான் அது மேலும் சுவையாக சமைக்க கற்றுக் கொள்வீர்கள். அது போல ஒவ்வொரு சமையலையும் செய்யும் பொழுது எல்லா சமையலும் உங்களுக்கு அத்துபடி ஆகிவிடும். எனவே முதலில் தெரிந்த சமையலை அடிக்கடி சமைக்க பாருங்கள்.

குறிப்பு 7:
மீந்து போன பழைய சாதத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து பொட்டுக்கடலையை பொடித்து சேர்த்து உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பக்கோடா மாவு போல செய்து எண்ணெயில் சுட்டு எடுத்து பாருங்கள், சூப்பரான சுவையான பக்கோடா ரெடி!

குறிப்பு 8:
இட்லி மாவில் உளுந்து பத்தாமல் மாவு கெட்டியாகி விட்டால் சிறிதளவு தண்ணீரில் பொறிக்காத அப்பளங்களை போட்டு நனைத்து பின் மிக்ஸியில் நைசாக அரைத்து மாவுடன் சேர்த்து பாருங்கள். இட்லி சுடும் பொழுது பூ போல பஞ்சென்று உப்பி வரும்.

குறிப்பு 9:
அப்பளம் மீந்து போய் விட்டால் அதை நொறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் துருவிய தேங்காய் 2 டீஸ்பூன், கொஞ்சம் கருவேப்பிலை, புளி, காரத்திற்கு பச்சை மிளகாய், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். சுவையான அப்பள துவையல் தயாராகிவிடும்!

இதையும் படிக்கலாமே:
உருளைக்கிழங்கு கறி ஈசியாக காரசாரமாக இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க, எல்லா சாதத்துக்கும் தொட்டுக்க அட்டகாசமாக இருக்குமே!

குறிப்பு 10:
ஆம்லெட் போடும் பொழுது முட்டையுடன் கொஞ்சம் வெண்ணையை சேர்த்து கலக்கி செய்து பாருங்கள் நல்ல ஒரு வித்தியாசமான ருசி உங்களை கவரும்.

- Advertisement -