தினமும் காலையில் இந்த நேரத்தில் பொங்க பொங்க பாலை காய்ச்சினால், உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷம் பொங்கும்.

pooja-room-milk
- Advertisement -

சந்தோஷம் என்பது நம்முடைய வாழ்க்கையில் நிரந்தரமாக எப்போதும் இருக்க வேண்டும். அதற்காக வாழ்க்கையில் கஷ்டம் வரவே கூடாது என்று நினைப்பது மிகவும் தவறு. கஷ்டம் விருந்தாளி போல அப்பப்ப வந்து போகத்தான் செய்யும். ஆனால், அதை நிரந்தரமாக நம்முடைய வீட்டில் தங்க வைத்துக் கொண்டால் பிரச்சனை நமக்குத்தான். தினம் தினம் நம்முடைய வீட்டிலும் நம்முடைய மனதிலும் சந்தோஷம் பொங்கி வழிய வேண்டும் என்றால் முதலில் நாம் செய்ய வேண்டியது இறை வழிபாடு. முழு நம்பிக்கையுடன் இறைவனின் பாதங்களை சரணடைந்து வழிபாடு செய்பவர்களுக்கு துன்பம் தூரச்செல்லும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

தினமும் செய்யக்கூடிய இறைவழிபாடோடு சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்து பாருங்கள். வாழ்வில் சந்தோஷம் பல மடங்காககும். தினமும் காலையில் எழுந்த உடனேயே டீ போடுவதற்காக, காபி போடுவதற்காக வீட்டில் இருக்கும் பெண்கள் பாலை காய்ச்சுவது வழக்கமாக இருக்கும். இந்த பாலை காய்ச்சுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒவ்வொரு நாள் தொடங்கும் போதும் அந்த நாளின் முதல் ஒரு மணி நேரம் அதாவது, காலை 6.00 மணியிலிருந்து 7.00 அந்த நாளுக்குரிய கிரகத்தின் ஹோரையாக தொடங்கும். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு உடைய நாள். அப்போது வெள்ளியன்று காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்கு சுக்கிர ஹோரை வரும். இதேபோல புதன்கிழமை, புதன் பகவானுக்கு உரிய நாள். புதன் அன்று காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் புதன் ஹோரை வரும். இப்படி அந்தந்த கிழமைக்கு உண்டான ஹோரை துவங்கக்கூடிய நேரம் இந்த ஒரு மணி நேரம் (காலை 6.00-7.00).

குறிப்பிட்ட இந்த நேரத்தில் தினமும் பாலை காய்ச்சினால் அது உங்களுக்கு நன்மையை தரும். தினமும் காலையில் 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் வீட்டில் பால் காய்ச்சி விடுங்கள். பாலை காய்ச்சிய பின்பு முதல் வேலையாக அந்த பாலில் இருந்து இரண்டு சொட்டு எடுத்து பூமாதேவிக்கு சமர்ப்பணம் செய்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு டீ போடுவது, காபி போடுவது போன்ற வேலைகளை வழக்கம்போல நீங்கள் செய்யலாம். குறிப்பாக சூரியன் உதயமாகும் நேரம் என்று ஒன்று இருக்கும் அல்லவா. அந்த 6.00 லிருந்து 6.15, அந்த நேரம் நம்முடைய வீட்டில் பால் பொங்கினால் நம்முடைய வீட்டிற்கு நிச்சயமாக அதிர்ஷ்டம் பெருகும். (பால் பொங்கி கீழே விழியக் கூடாது. பாத்திரத்தில் பொங்கும் போதே அடுப்பை அணைத்து விட வேண்டும்.) உதயமாகும் சூரியனுக்கு நீங்கள் பால் அபிஷேகம் செய்வதற்கு சமம் இது என்று கூட வைத்துக் கொள்ளலாம். தினம் தினம் இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். அன்றைய நாள் உங்களுக்கு புத்துணர்ச்சியோடு சந்தோஷத்தோடு செல்லும்.

தினம் தினம் ஒரு வீட்டில் பால் பொங்கி வழிய கூடாது. சில வீடுகளில் பெண்களின் அலட்சியப் போக்கினால் பால் பொங்கி வழியும். இப்படி பால் பொங்கி வருவதும் வீட்டிற்கு கண்ணுக்கு தெரியாத தோஷங்களை உண்டு பண்ணும். சில நேரங்களில் தவறி பாலை பொங்க விட்டு விட்டீர்கள். என்ன செய்வது. பொங்கிய பாலின் மேல் இரண்டு பச்சரிசியை போட்டு செய்த தவறுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். தோஷங்கள் விலகிவிடும். வாழ்வின் நன்மைக்கு, மேல் சொன்ன குறிப்புகளில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -