நாக பாம்பின் சாபத்தால் நடந்த விபரீதம் – வீடியோ

Pambu

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்குமே உணர்வுகள் உண்டு. அதிலும் குரங்கு, பசு, பாம்பு போன்ற சில உரியினல்களை கடவுளாக பார்ப்பதே இந்து தர்மமாக கருதப்படுகிறது. இப்படி இருக்கையில் ஒருவர் தன்னுடைய விவசாய நிலத்தில் ஒரு நல்ல பாம்பை அடித்து கொன்றுள்ளனர். இதனால் அவருக்கு அந்த பாம்பு சாபம் விட்டுட்டள்ளது. இதோ அது குறித்த வீடியோ.

செஞ்சிக்கு அருகில் உள்ள கீழ்வயலாமூர் என்ற ஊரில் வாழ்ந்து வருபவர் செல்வராஜ். இவர் தன்னுடைய சிறுவயதில் செய்த ஒரு தவறால் பாம்பின் சாபத்தை பெற்று இன்று வரை அதனால் தவித்து வருகிறார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தன் தந்தையோடு நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். அப்போது நிலத்தில் கலைகளை எடுக்கும் சமயத்தில் ஒரு நல்ல பாம்பு அங்கு வந்துள்ளது. உடனே அவர் தன் கையில் இருந்த மண் வெட்டி மூலம் அந்த பாம்பை அடித்து கொன்றுள்ளார்.

இந்த சம்பவம் ஒரு வெள்ளிக்கிழமை அன்று நிகழ்ந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த பாம்பை அடக்கம் செய்து பால் ஊற்றும்படி கூறியுள்ளனர். அவரும் பாம்பை அடக்கம் செய்து பால் ஊற்றியுள்ளார். ஆனால் அதன் பிறகு சுமார் 25 ஆண்டுகளாக அவர் பாம்பை அடித்த நிலத்தில் பயிர் விளையவில்லை. இதனால் அவரின் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றி உள்ள நிலங்கள் அனைத்திலும் பயிர்கள் நன்கு விளைந்தாலும் இவர் நிலத்தில் மட்டும் பயிர் விளையாதது ஆச்சர்யம் தான். இதற்க்கு காரணம் அந்த பாம்பு கொடுத்த சாபம் தான் என்று அவர் முழுவதுமாக நம்புகிறார்.