பாவங்கள் நீங்கி புத்தாண்டு முதல் அதிஷ்டத்தை அல்ல இதை எல்லாம் செய்யுங்கள்

murugan

பொதுவாகவே நாம் செய்த பாவங்கள் நீங்க வேண்டுமானால் அதற்கேற்ப தர்மங்களை செய்வதே சாலச்சிறந்தது. அந்த வகையில் நீங்கள் செய்த பாவங்கள் விலகி அடுத்த ஆண்டில் இருந்து உங்கள் வாழ்வில் வசந்தம் பொங்க நீங்கள் எதை எல்லாம் தானம் செய்யலாம் என்று பார்ப்போம்.

thanam

ஆதரவற்ற மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அன்னதானம் செய்வதன் மூலம் மனக்கவலை அனைத்தும் விலகி ஒரு புது வித சந்தோஷம் பெருகும் என்பது நியதி. அந்த வகையில் உங்கள் வீட்டருகில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு ஒரு வாரம் உணவளியுங்கள். வசதி குறைவாக உள்ளவர்கள் ஒரு வாரம் நாய் குட்டிகளுக்கு பால் ஊற்றலாம். அதுவும் முடியாதவர்கள் பறவைகளுக்கு நீரையும் தானியங்களையும் உணவாக வைக்கலாம்.

நாம் வணங்கும் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும் போற்றும் வகையில் மூன்று பிடி அரிசியை தானமாக வழங்குவதன் பயனாக நாம் மும்மூர்த்திகளின் பரிபூரண அருளை பெறலாம்.

Sivan God

சுமங்கலி பெண்கள் மூவருக்கு வளையல் மற்றும் சிகப்பு நிற புடவையை தானமாக கொடுப்பதன் பலனாக கணவன் மனைவிக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு அகலும். தானமாக பெரும் சுமங்கலி பெண்கள் நம்மை மனதார வாழ்த்தும் அளவிற்கு நாம் அவர்களுக்கு கொடுக்கும் பொருட்கள் இருக்க வேண்டும். சாங்கியதிற்கு செய்வதால் பயன் இல்லை.

- Advertisement -

valaiyal

மனதறிந்து யாருக்கேனும் தீங்கு செய்ந்திருந்தால் அவர்களுக்கு துளசி செடியை தானமாக கொடுங்கள். இதன் மூலம் நீங்கள் அவர்களுக்கு செய்த பாவமானது விலக வாய்ப்புள்ளது.

thulasi chedi

உங்களது பெற்றோரை எப்பொழுதும் கஷ்டப்படாமல் பார்த்துக்கொள்வது உங்களுடைய தலையாய கடமை. இந்த கடமையில் இருந்து தவறினால் நீங்கள் எதை செய்தும் பயன் இல்லை. ஆகையால் உங்கள் பெற்றோர் மகிழ்ச்சியடையும் வகையில் அவ்வப்போது எதையாவது செய்யுங்கள். உங்கள் வாழ்வில் தானாக மகிழ்ச்சி வரும்.

Parents

இதையும் படிக்கலாமே:
சிவ லிங்கத்தில் இருந்து பீறிட்டு வந்த நீர்- ஆச்சர்யத்தில் உறைந்த மக்கள்

உங்கள் வசதிக்கு ஏற்ப உங்களால் முடிந்ததை இல்லாதவர்களுக்கு எப்போதும் தானம் செய்தால் இந்த புத்தாண்டு மட்டும் அல்ல எல்லா புத்தாண்டும் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும்.