10 நிமிடத்தில் பளபளன்னு பளிச்சிடும் சருமத்தைப் பெற 1 சிட்டிகை பச்சை கற்பூரம் இருந்தால் போதுமே.

face13
- Advertisement -

கொஞ்சம் வித்தியாசமான ஒரு அழகு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய முகத்தில் கருந்திட்டுக்கள், முகப்பருக்கள், கொப்பளங்கள் இருந்தால் இந்த பச்சை கற்பூர குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம். முகத்தில் இருக்கக்கூடிய சரும பிரச்சனைகளை சரி செய்ய பச்சை கற்பூரம் நன்றாக வேலை செய்யும். சாதாரணமாக இறைவனுக்கு ஏற்றக்கூடிய சூடம் அழகு குறிப்புக்கு பயன்படுத்தக் கூடாது. பச்சை கற்பூரம் என்று கடைகளில் தனியாக விற்கின்றது. அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பச்சை கற்பூரத்தை லட்டு செய்யும்போது கூட அதில் கொஞ்சம் மனத்திற்காக சேர்பாங்க. அந்த பச்சை கற்பூரம் தான் இந்த அழகு குறிப்பில் பயன்படுத்த வேண்டும். சாதாரண சூடத்தை தவறியும் பயன்படுத்தாதீங்க. சருமத்தில் பிரச்சனை வந்துவிடும்.

முதலில் ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை எடுத்து கையாலேயே நுணுக்கி நன்றாக தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று சிட்டிகை பச்சை கற்பூரத்தை மட்டும் தான் நாம் பயன்படுத்த போகின்றோம். அந்த அளவிற்கு பச்சை கற்பூரம் எடுத்தால் போதும். நிறைய பச்சை கற்பூரத்தை சேர்க்கக்கூடாது.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, பச்சை கற்பூரத்தூள் 2 சிட்டிகை, தேன் 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் தேவையான அளவு ஊற்றி இதை ஃபேஸ் பேக்காக கலந்து அப்படியே முகத்தில் போட்டுக் கொள்ளலாம். 10 நிமிடங்கள் கழித்து பேக் நன்றாக காய்ந்த பின்பு லேசாக தண்ணீரைத் தொட்டு மசாஜ் செய்து முகத்தை கழுவினால் உடனடியாக முகம் பளிச்சென்று மாறியிருக்கும்.

முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை ஒரு சில நாட்களில் படிப்படியாக குறையும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்துங்கள். முகத்தில் இருக்கக்கூடிய தழும்புகள் முகப்பருக்கள் நன்றாக குறைந்த பின்பு பேக்கை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம். அதாவது வாரத்தில் இரண்டு நாள் என்ற கணக்கில், ஒரு மாதம் வரை பேக்கை பயன்படுத்திவிட்டு நிறுத்தி விடுங்கள். அதன் பின்பு தேவைப்படும்போது இந்த பேக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

பச்சைக் கற்பூரம் சருமத்தின் அழகு குறிப்புக்கு பயன்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து அதை சருமத்தில் அதிகப்படியாக போடும்போது, ஒரு சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு ரொம்ப ரொம்ப சென்சிடிவ் ஸ்கின்னாக இருந்தால் இரண்டு சிட்டிகைக்கும் குறைவாக, ஒரு சிட்டிகை பச்சை கற்பூர பொடியை குறிப்பில் பயன்படுத்தி பாருங்கள். உங்களுடைய ஸ்கின் சென்சிடிவ் ஸ்கின் எனும் பட்சத்தில் இதை பேட்ச் டெஸ்ட் செய்து விட்டு முகத்தில் அப்ளை செய்வது மிகவும் சிறப்பானது. உங்களுடைய முகத்தில் ஓபன் போஸ் இருந்தால் இந்த குறிப்பை நீங்கள் பயன்படுத்தாதீர்கள்.

உங்களுக்கு ரொம்பவும் ஆயில் ஸ்கின்னாக இருந்தால் கடலை மாவுக்கு பதிலாக முல்தானி மெட்டியை சேர்த்து இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ரோஸ் வாட்டர் உங்கள் வீட்டில் இல்லை என்றால், அரிசி கலைந்த தண்ணீர் அல்லது அரிசி வடித்த கஞ்சியை கொண்டும் இந்த பேக்கை கலந்து கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. தீர்க்க முடியாத சரும பிரச்சனைகளை கூட இந்த ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் தீர்த்து வைக்கும்.

- Advertisement -