இப்படி ஒரு பச்சை மிளகாய் சட்னி ரெசிபி நம்ம கொள்ளு பாட்டிக்கு கூட தெரிஞ்சி இருக்காது. சுட சுட இட்லிக்கு மேல ஊத்தி சாப்பிட இது வேற லெவல் டேஸ்ட் கொடுக்கும்.

chutney
- Advertisement -

முற்றிலும் வித்தியாசமான ஒரு பச்சை மிளகாய் சட்னி ரெசிபியை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். நம்முடைய வீட்டில் நம்முடைய அம்மா பாட்டி கூட இப்படி ஒரு சட்னியை அரைத்து இருக்க மாட்டாங்க. அவ்வளவு ருசி தரக்கூடிய சட்னி இது. இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். காரம் கொஞ்சம் தூக்கலான சட்னி தான். வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து இதை சுலபமாக செய்துவிடலாம். வாங்க அந்த ரெசிபி என்ன என்று பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

செய்முறை

இதற்கு முதலில் நாம் பச்சை மிளகாயை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். நாட்டு பச்சை மிளகாயில் இந்த சட்னியை செய்தால் ருசியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். காரமான சட்னி என்பதால் நல்லெண்ணெய் தான் பயன்படுத்த வேண்டும். கொஞ்சம் கூடுதலாக எண்ணெய் சேர்க்கலாம் தவறு கிடையாது.

- Advertisement -

அந்த எண்ணெய் காய்ந்ததும் பச்சை மிளகாய் 10 லிருந்து 12, போட்டு வதக்க வேண்டும். கொஞ்சம் கீரி பச்சை மிளகாயை எண்ணெயில் போட்டு வதக்கவும். இல்லை என்றால் மிளகாய் வெடிக்கும். மூன்று நிமிடங்கள் அந்த பச்சை மிளகாய் எண்ணெயில் வதங்கியவுடன், நறுக்கிய பெரிய வெங்காயம் 1 போட்டு வதக்குங்கள்.

வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி விட்டு, பெரிய தக்காளியில் 1/2 அளவு எடுத்து நறுக்கி இதில் போட்டுக் கொள்ளவும். தோல் உரித்த பூண்டு 15 பல், பெரிய நெல்லிக்காய் அளவு புளியை, இதோட சேர்த்து 5 லிருந்து 7 நிமிடங்கள் எல்லா பொருட்களையும் நன்றாக வதக்கி விட்டு அடுப்பை அணைத்துவிட்டு, ஆற வையுங்கள். இது ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்தால் உப்பு புளிப்பு காரம் சேர்த்த சூப்பரான சட்னி தயார். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து மிக்ஸி ஜாரில் இருந்து ஒரு கிண்ணத்துக்கு சட்னியை மாற்றிக் கொள்ளவும்.

- Advertisement -

இதற்கு ஒரு தாளிப்பு. ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம், போட்டு தாளித்து சட்னியில் கொட்டி கலந்து டேஸ்ட் பண்ணி பாருங்க, பச்சை மிளகாய் வாசத்தோடு இந்த சட்டியின் சுவை அத்தனை சுவையாக இருக்கும். ரெசிபி பிடிச்சவங்க மிஸ் பண்ணாம இந்த ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: அட இந்த பாயாசம் செய்றது இவ்வளவு ஈஸியா? ஆமாங்க பாசுமதி அரிசி இருந்தா ஆடி வெள்ளி ஸ்பெஷலா இன்னைக்கே இந்த பாயாசம் செய்ங்க. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

பின்குறிப்பு:
நாட்டு மிளகாய் கிடைக்கவில்லை என்றால் சாதாரண பச்சை மிளகாயை உங்கள் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும். ரொம்பவும் மிளகாய் காரம் அதிகமாக இருக்கிறது என்றால் கவனமாக மிளகாயை வைத்து அரையுங்கள்.

- Advertisement -