அட இந்த பாயாசம் செய்றது இவ்வளவு ஈஸியா? ஆமாங்க பாசுமதி அரிசி இருந்தா ஆடி வெள்ளி ஸ்பெஷலா இன்னைக்கே இந்த பாயாசம் செய்ங்க. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை என்றாலே ஸ்பெஷல் தான். அதிலும் ஆடி வெள்ளி என்றால் கேட்கவே வேண்டாம். இந்த ஆடி வெள்ளி நாளில் வீட்டில் ஒவ்வொருவரும் தெய்வ வழிபாடு செய்வது வழக்கம். அந்த நேரத்தில் தெய்வத்திற்கு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு வகைகளை செய்வார்கள். அந்த வகையில் இன்று இந்த அரிசி பாயாசத்தை செய்து வைத்து வழிபடுங்கள். ஒரு ருசியான பாயாசம் செய்து வைத்ததோடு பூஜையும் நிறைவாக செய்த திருப்தி கிடைக்கும். வாங்க அந்த பாயாசத்தை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1/2 கப், காய்ச்சாத பால் – 4 கப், குங்குமப்பூ – 1 பின்ச், சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன், பால் பவுடர் -1/4 கப் , முந்திரி பாதாம் பிஸ்தா இவை எல்லாம் சேர்த்து கால் கப் ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த பாயாசம் செய்ய முதலில் ஒரு பவுலில் அரை கப் அரிசியை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி அலசிய பிறகு அரை மணி நேரம் ஊற வைத்துக் விடுங்கள். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும். அரை மணி நேரம் கழித்து குக்கரில் 1 கப் பாலை ஊற்றி சுத்தம் செய்து வைத்து அரிசியை சேர்த்து குங்குமப்பூவையும் சேர்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு பால் பவுடரையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து மூன்று விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு பாலில் அரிசி நன்றாக வெந்திருக்கும். அதை ஒரு மத்து அல்லது மேஷர் வைத்து நன்றாக மசித்து கொள்ளுங்கள். இதை மிக்ஸியில் போட்டு அரைக்க கூடாது. அதன் பிறகு மேலும் இரண்டு கப் பால் ஊற்றிய பிறகு அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து பாயாசத்தை கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

பாயாசம் நன்றாக கொதிக்கும் பொழுது சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒரு முறை கொதித்த பிறகு நட்ஸ், ஏலக்காய் பவுடரை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். சுவையான அரிசி பாயாசம் ரொம்பவே சிம்பிளாக தயாராகி விட்டது. இந்தப் பாயாசத்தை செய்ய அதிக நேரம் எடுக்காது. அதிகபட்சம் 15 நிமிடத்திற்குள்ளாகவே சூப்பராக செய்து விடலாம். ஒரு முறை இதை செய்தால் மறுபடியும் மறுபடியும் செய்யத் தூண்டும்.

இதையும் படிக்கலாமே: இறால் வாங்கினால் ஒரு முறை மறக்காம இப்படி மசாலா அரைச்சு தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சும்மா டேஸ்ட் அப்படி இருக்கும். ஒரு மாசம் ஆனா கூட இதோட டேஸ்ட் மறக்க மாட்டீங்க.

எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் அதிக சுவையுடன் கூடிய இந்த பாயாசத்தை கண்டிப்பா நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -