கமகமக்கும் பச்சை பயறு கிரேவி

pachai payaru gravy
- Advertisement -

பயறு வகைகளை நாம் அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக முளைக்கட்டி வைத்து சாப்பிடும் பொழுது அதன் சத்துக்கள் நமக்கு மிகவும் அதிகமாகவே கிடைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் முளைகட்டிய பயறை சாப்பிடுவது என்பது யாருக்கும் அவ்வளவு எளிதில் பிடித்தமான செயலாக இருக்காது. அதனால் முளைகட்டிய பயறை அப்படியே தராமல் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் எப்படி கிரேவி செய்து தருவது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

பச்சைப் பயரில் விட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் உள்ளன. இதோடு மட்டுமல்லாமல் மெக்னீசியம், தாமிரம், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற முக்கியமான சத்துக்களும் நிறைந்து இருக்கிறது. இந்த பச்சை பயறை நாம் சாப்பிடும் பொழுது நமக்கு நம் உடலில் புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுக்கிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சனை குறைகிறது. கொலஸ்ட்ரால் அளவு குறையும். கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகள் தீர்வதற்கு உதவி புரிகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • முளைகட்டிய பச்சைப் பயிறு – 1 1/2 கப்
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் – 2 ,
  • உப்பு – தேவையான அளவு
  • இஞ்சி – 2 துண்டு
  • பூண்டு பல் – ஒரு கைப்பிடி அளவு
  • தக்காளி – 2
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • பிரியாணி இலை – 1
  • மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை

முதல் நாள் காலையில் பச்சை பயறை சுத்தம் செய்து ஊறவைத்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் இரவில் பச்சைப் பயறை தண்ணீர் வடித்து விட்டு ஒரு காட்டன் துணியில் போட்டு காற்றோடு மிகுந்த இடத்தில் கட்டி வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் எடுத்து பார்க்கும் பொழுது பச்சை பயிறு முளைகட்டி இருக்கும்.

இப்பொழுது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் வதங்குவதற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் நிறம் மாறிய பிறகு அடுப்பை அணைத்துவிட்டு வெங்காயத்தை ஆற வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இஞ்சி, பூண்டு, தக்காளி இவற்றையும் சேர்த்து சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அடுப்பில் மறுபடியும் குக்கரை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சீரகம் மற்றும் சோம்பை சேர்க்க வேண்டும். சோம்பு சிவந்த பிறகு அதனுடன் பிரியாணி இலையை சேர்த்து முளைகட்டிய பயறையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதை அதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை மிக்ஸி ஜாரில் ஊற்றி மிக்ஸி ஜாரை கழுவி பயறில் ஊற்றி விட வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக இதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் இந்த கிரேவிக்கு தேவையான அளவு உப்பு என்று அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து குக்கரை மூடி விட வேண்டும். மிதமான தீயில் மூன்று விசில் விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். விசில் முழுமையாக நீங்கிய பிறகு குக்கரை திறந்து நன்றாக கிரேவியை கலந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி பரிமாற வேண்டும்.

கமகமக்கும் அருமையான முளைக்கட்டிய பச்சை பயறு கிரேவி தயாராகிவிட்டது இந்த கிரேவியை சப்பாத்தி இட்லி, தோசை, பூரி, சாதம் என்று அனைத்திற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கொத்தமல்லி பொடி தோசை செய்முறை

சத்துக்கள் அதிகம் மிகுந்த முளைகட்டிய பச்சைப் பயறை இப்படி ஒரு முறை சாப்பிட்டு பார்ப்போம்.

- Advertisement -