தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பச்சைப் பயறு

lenthy hair
- Advertisement -

தலைமுடி என்பது ஒருவரை மேலும் அழகாக காட்டக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. நம் உடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் ஒரு காரணியாகவும் தலைமுடி திகழ்கிறது. அப்படிப்பட்ட தலைமுடியை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பல ஹேர் மாஸ்குகளை பயன்படுத்தினாலும் மிகவும் எளிமையான முறையில் பச்சை பயிரை வைத்து எப்படி நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நம் வீட்டில் இருக்கக்கூடிய சமையலுக்கு உபயோகப்படுத்தக்கூடிய பொருட்கள் மிகவும் உறுதுணையாக விளங்குகின்றன. அதிலும் சில பொருட்களை குறிப்பாக எடுத்துக் கொள்ளும் பொழுது அது தலைமுடிக்கு மட்டுமல்லாமல் நம்முடைய உடல் முழுவதும் சருமத்திற்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான பொருளாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றுதான் பச்சைப்பயிறு.

- Advertisement -

பொதுவாக பச்சை பயிரை நாம் முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் அனைத்தும் நீங்கும். முகம் மிருதுவாக இருக்கும். பச்சை பயறுடன் சில பொருட்களை சேர்த்து நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் இன்னும் பல அற்புதமான பலன்களை நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட பச்சைப் பயிரை நம்முடைய தலைக்கு நாம் தேய்ப்பதன் மூலம் நம்முடைய தலைமுடி ஆரோக்கியம் என்பது அதிகரிக்கும்.

அதனால்தான் அன்றைய காலத்தில் சீகைக்காய் தேய்த்து குளிப்பவர்கள் சீகைக்காயுடன் பச்சைப்பயிரையும் சேர்த்து அரைத்து குளித்து வந்தார்கள். அப்படி குளிக்கும் காலத்தில் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த காலகட்டத்தில் வருவது போல் இல்லாமல் குறைவாகவே இருந்தது. இந்த பச்சை பயிரை எப்படி பயன்படுத்தினால் நம்முடைய தலைமுடி ஆரோக்கியம் ஏற்படும் என்று இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

நம்முடைய முடியின் அளவிற்கு தேவையான பச்சைப் பயிரை முதல் நாள் இரவே ஊறவைத்து விட வேண்டும். இந்த பச்சைப்பயிறு ஹேர் பேக்கை போடுவதற்கு முந்தைய நாள் நாம் தலைக்கு குளித்து இருக்க வேண்டும். அதாவது தலை முடியில் எண்ணெய் பசை இல்லாமல் இருக்கும் அளவிற்கு இருக்க வேண்டும். மறுநாள் தான் இந்த ஹேர் பேக்கை நாம் உபயோகப்படுத்த வேண்டும்.

தலைமுடித்து தேவையான அளவு பச்சை பயிரை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் காலையில் அதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை தலை முடியின் வேர் கால்களிலும் தலை முடியிலும் நுனிவரை தேய்த்து கொண்டையாக போட்டு கொண்டு அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண வெறும் தண்ணீரை ஊற்றி தலைக்கு குளித்து விட வேண்டும். அவ்வளவுதான் வேறு எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்வதன் மூலம் நம்முடைய தலைமுடி உதிர்தல் என்பது முற்றிலும் நின்றுவிடும். ஒரு தலை முடியின் கனமானது அதிகரிக்கும். தலைமுடி அடர்த்தியாக அழகாக வளரும். மாதத்திற்கு ஒருமுறை சாதாரணமாக வளரும் அளவைவிட இரண்டு மடங்கு தலை முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். பொடுகு பிரச்சனை நீங்கும்.

இதையும் படிக்கலாமே: முடி வளர வெற்றிலை ஹேர் மாஸ்க்

எந்தவித சிரமமும் படாமல் வெறும் பச்சைப்பயிரை மட்டுமே நாம் இப்படி ஹேர்பேக்காக செய்து போடுவதன் மூலம் நம் தலைமுடியின் ஆரோக்கியத்தை கண்டிப்பான முறையில் அதிகரித்துக் கொள்ள முடியும்.

- Advertisement -