வீட்டின் மூலை முடுக்குகளில் தேங்கிக் கிடக்கும் கெட்ட சக்திகளால் இத்தனை பிரச்சனைகள் வருமா? இதனை நிரந்தரமாக சரிசெய்ய, வீடு துடைக்கும் தண்ணீரில் இந்த 1 பொருளைப் போட்டால் போதும்.

mob
- Advertisement -

நம்முடைய வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கு முதல் காரணம் நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் தான். கண்ணுக்கு தெரியாத இந்த எதிர்மறை ஆற்றல் என்றால் என்ன? நிறைய பேருக்கு இதிலேயே குழப்பம் உள்ளது. எதிர்மறை ஆற்றலை வீட்டிலிருந்து விரட்டுவதற்கு ஒருமுறை வீட்டில் தூபம் போடுவது, ஒருமுறை கல் உப்பை போட்டு வீடு துடைப்பது என்ற பழக்கம் இருந்தால், போதாது. எதிர்மறை ஆற்றலுக்கு அழிவே கிடையாது. அதாவது நாம் வெளியே செல்கின்றோம், நம் வீட்டிற்கு நம் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், என்றவாறு பல பேர் வீட்டிற்குள் வந்து செல்கிறார்கள்.

kettasathi-1

இப்படியாக நம் உடம்பில் தொற்றிக்கொள்ளும் எதிர்மறை ஆற்றலோ, நம் வீட்டிற்குள் வருபவர்களுடைய எதிர்மறை ஆற்றல்லோ, கெட்ட எண்ணங்கள், கண்திருஷ்டி, பெருமூச்சை பொறாமை, இவை அனைத்தும் தான் கெட்ட சக்தி, எதிர்மறை ஆற்றல் என்று சொல்லப்படுகிறது. ஆக, இவை அனைத்தும் நம் வாழ்நாளில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கும். ஒரு முறை பரிகாரத்தை செய்து விட்டோமேயானால், அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு நம் வீட்டில் பிரச்சினைகள் குறையும். ஒரு வாரத்திற்கு பின்பு, மீண்டும் எதிர்மறை ஆற்றல்கள் நம் வீட்டில் கட்டாயம் குடிகொள்ள தான் செய்யும். அதை விரட்ட மீண்டும் மீண்டும் நாம் முயற்சி செய்து கொண்டே தான் இருக்க வேண்டும். வேறு வழியே இல்லை.

- Advertisement -

வீட்டில் சண்டை சச்சரவு ஏற்படாமலிருக்க, குடும்பம் ஒற்றுமையாக இருக்க, வாரம்தோறும் செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமை இந்த இரண்டு தினங்களில் ஏதாவது ஒரு தினத்தில் திருஷ்டி கழிக்க வேண்டும். அந்த காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் இப்படித்தான் செய்வார்கள் குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில். இதைப்போல் கட்டாயம் தொடர்ந்து வீட்டில் தூபம் போட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டும். ஒரு முறை திருஷ்டி கழித்து விட்டு, ஒரு முறை தூபம் போட்டுவிட்டு, வாழ்நாள் முழுவதும் பிரச்சனை வரக்கூடாது என்று நினைப்பது தவறு.

padikaram1

சரி, நம்முடைய வீட்டில் மூலைமுடுக்குகளில் தேங்கும் எதிர்மறை ஆற்றலை, நீக்குவதற்கு என்ன செய்யலாம்? சிலபேர் கல்உப்பு போட்டு துடைக்கலாம் என்று சொல்வார்கள். அதிலும் எந்த ஒரு தவறும் கிடையாது. முடிந்தவரை ஞாயிற்றுக்கிழமை அன்று கல் உப்பு போட்டு வீட்டை துடைக்காதீர்கள். வியாழக்கிழமை அன்று கல் உப்பு போட்டு வீட்டை துடைக்கலாம்.

- Advertisement -

நீங்கள் வீடு துடைக்கும் தண்ணீரில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த வாசனை திரவியங்களை ஊற்றினாலும் சரி, எந்த பொருளை போட்டாலும் சரி, ஒரு சிறியதுண்டு படிகாரத்தை எடுத்து, தூள் செய்து போட வேண்டும். பரிகாரம் தூள் செய்தாலும் தண்ணீரில் அவ்வளவு சீக்கிரம் கரையாது. கொஞ்சம் சுடுதண்ணீர் வைத்து, அதில் படிகார தூளை சேர்த்து போட்டு கரைத்து விட்டு, அந்த தண்ணீரை வீடு துடைக்கும் தண்ணீரோடு கலந்து விடுங்கள். படிகாரம் கலந்த தண்ணீரை வைத்து வீட்டை துடையுங்கள்.

clean

நிச்சயம் உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டத்திற்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்துவிட்டு பலனை எதிர்பார்க்க வேண்டாம். வாரம்தோறும் ஒருமுறையாவது வீடு துடைக்கும் தண்ணீரில் படிகாரத்தை தொடர்ந்து போட்டுக் கொண்டே வாருங்கள். வரும் காலங்களில் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் வித்தியாசத்தை உணர முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த ஒரே 1 பொருளை மட்டும் வைத்துக் கொண்டு வீட்டில் இவ்வளவு விஷயங்கள் செய்ய முடியுமா? ஆச்சரியமா இருக்கே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -