உங்க வீட்டு படுக்கை அறையில், இந்த தவறை நீங்கள் செய்கிறீர்களா? நிச்சயமா தீராத கடன் சுமையும், தீராத வியாதிகளும் உங்களை துரத்திக் கொண்டே தான் இருக்கும்.

bedroom
- Advertisement -

நமக்கு கடன் பிரச்சனை வருவதற்கும், உடல்நிலை சரியில்லாமல் போவதற்கும் ஜாதக ரீதியாக, நம்முடைய தலையெழுத்து ஒரு காரணமாக இருந்தாலும் அன்றாடம் நம் வீட்டில் செய்யக்கூடிய தவறுகளின் மூலமாகவும் கடன் பிரச்சினையும் உடல் உபாதைகளும் நோய்களும் நம்மை பின்தொடர வாய்ப்புகள் உள்ளது. நம்முடைய முன்னோர்கள் சொல்லிக் கொடுத்தபடி சில விஷயங்களை நாம் பின்பற்றி வந்தாலே வாழ்க்கையில் நன்றாக இருக்கலாம். ஆனால் நாகரீகம் என்ற பெயரில் இன்று நாம் செய்யக்கூடிய இந்த ஒரு சிறிய தவறு நம் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்கின்றது. அந்த சிறிய தவறு என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bedroom-light

தலைப்பை படித்த உடனேயே எல்லோருக்கும் புரிந்திருக்கும் படுக்கை அறையில் நாம் செய்யக்கூடிய தவறு, நம்முடைய வாழ்க்கையில் பண கஷ்டத்தையும், கடன் சுமையையும் தீராத நோய்களையும், கொடுக்கின்றது என்று, அந்த ஒரு தவறு என்ன தெரியுமா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாம் செய்யக்கூடிய தவறு படுக்கை அறையில் சாப்பாட்டை கொண்டு வந்து சாப்பிடுவது. கட்டிலின் மேல் அமர்ந்து சாப்பிடுவது.

- Advertisement -

பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில் நிறைய பேர் வீடுகளில் இந்த தவறு நடந்து கொண்டுதான் இருக்கின்றது. படுக்கையறையில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வைத்துவிட்டு, குளிர்சாதனம் போட்டுக்கொண்டு, கட்டிலுக்கு மேலே ஏறி சாப்பாட்டை வைத்து,  சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி சில பேருக்கு கிடைக்கிறது. இந்த ஒரு தவறு வீட்டில் உள்ளவர்களுக்கு நிச்சயமாக தீராத உடல் நலக் கோளாறுகளை உண்டாக்கிவிடும். தீர்க்கமுடியாத உடல் உபாதைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்து மருத்துவ செலவு ஆகிக்கொண்டே இருக்கும். வாழ்நாள் முழுவதும் வீண்விரயமாகும். இந்தப் பிரச்சினை நமக்கு தேவையா.

eating

இதற்கும் ஜோதிட ரீதியாக ஒரு காரணம் சொல்லப்பட்டுள்ளது. கடனை உருவாக்கக்கூடிய காரகத்துவம் செவ்வாய் பகவான். வீட்டில் செவ்வாய் பகவானுக்கு உரிய இடம் என்றால் அது படுக்கை அறை. சமையலறை என்பது சனி பகவானுக்கு உரிய இடமாக சொல்லப்பட்டுள்ளது. சனி பகவானும், செவ்வாய் பகவான் இணையும்போது உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். உடல் உபாதைகளை சரி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வாங்கிய கடனை அடைப்பதற்கு சொத்துக்களை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதுதான் நிலைமை.

- Advertisement -

குழந்தைகள், பெரியவர்களாக யாராக இருக்கட்டும் படுக்கை அறை அல்லது கட்டிலில் அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை விட்டு விடுங்கள். உங்கள் வீட்டு வரவேற்பறையில் கயிறு கட்டில், ஒயர் கட்டில் எது போட்டு இருந்தாலும் சரி, அதன் மீது அமர்ந்து சாப்பிடக்கூடாது. இது ஒரு பக்கம் இருக்க, நிறைய பேர் படுக்கை அறையில் பரணை மேலே நிறைய பழைய பொருட்களை ஏற்றி வைத்திருப்பார்கள். கட்டிலுக்கு அடியில் தேவையற்ற பொருட்களை போட்டு வைத்திருப்பார்கள். இப்படி தேவையற்ற பொருட்களை படுக்கை அறையில் அதிகளவில் சேர்த்து வைப்பதன் மூலமாகவும் வீட்டில் கஷ்டம் வரும். ஏனென்றால் தேவையற்ற பொருட்களும் சனிபகவானின் காரகத்துவம் ஆகத்தான் சொல்லப்பட்டுள்ளது.

sani-baghavan

வீட்டு படுக்கை அறை எப்படி இருக்குன்னு பாருங்க. வீட்டு படுக்கை அறை எப்போதும் வாசமாக அலங்கார பொருட்கள் நிறைந்த அழகான இடமாக தான் இருக்க வேண்டும். படுக்கை அறையில் குப்பைகளை போட்டு வைத்திருந்தால் வீட்டில் கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. தவறுகளை திருப்பிக் கொள்ளுங்கள் நிச்சயமாக வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்படும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -