குழந்தை பராமரிப்பாளராக என் வீட்டிற்கு வா- இந்திய வீரரை வம்பிழுத்த ஆஸி கேப்டன் வீடியோ

paine

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் மற்றும் இந்திய கேப்டன் கோலிக்கும் இடையே வார்த்தை போர் கேப்டன் தற்போது மீண்டும் 3வது டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியை சீண்டிய வண்ணம் உள்ளனர் . ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் போது ஸ்டம்ப்க்கு பின் இருந்து தொடர்ந்து வசைபாடி வந்தார் ஆஸி கேப்டன் பெயின்.

rohit-2

இந்நிலையில் 3ஆம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்க்ஸை 151 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி கம்மின்ஸ் வேகத்தில் விரைவில் 5 விக்கட்டுகளை இழந்தது. இதனால் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது பவுலிங் செய்ய லயன் வந்தார். ஸ்டம்பிற்கு பின்னால் இருந்த பெயின் அவரை வசை பாடியது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது.

அந்த பதிவில் உள்ளவை : உனக்கு ஒன்று தெரியுமா ms தோனி ஒருநாள் அணியில் விளையாடுவதால் நீ அணியில் இடம்பெறமாட்டாய் ஆகவே என் பரிந்துரையின் பேரில் பிக்பேஷ் போட்டியில் ஆடு ஹபர்ட் நகரம் நன்றாக இருக்கும். மேலும், எனது வீட்டிற்கு வா என் குழந்தைகளை பார்த்துக்கொள்ள பராமரிப்பாளர் வேண்டும். ஒரு நாள் இரவு நீ குழந்தைகளை பார்த்துக்கொள் நான் என் மனைவியுடன் சினிமாவிற்கு சென்று வருகிறேன் என்று அந்த உரையாடல் பதிவாகியுள்ளது.

இந்த உரையாடலை கேட்டு வர்ணனையார்கள் மற்றும் களத்தில் அவர் அருகில் இருந்த வீரர்கள் சிரித்தனர். ஆனால், இளம் வீரர் என்பதால் பண்ட் குறித்த இந்த உரையாடல் கிரிக்கெட் விமர்சகர்களிடையே பெரும் கோவத்தினை உருவாகியுள்ளது. வெற்றிக்காக தொடர்ந்து வீரர்களை வசை பாடுவதை விடுத்து ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள் என்று இந்திய ரசிகர்கள் வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான் நினைத்ததை இப்போது செய்கிறேன்- இந்திய வீரர் சூளுரை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்