ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான் நினைத்ததை இப்போது செய்கிறேன்- இந்திய வீரர் சூளுரை

pujara

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் கடந்த 26ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய முன்றாம் நாள் ஆட்டம் முடிந்த நிலையில் இந்திய அணி 54 ரன்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 346 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

pujara

இந்நிலையில் முதல் இன்னிங்சில் சதமடித்த புஜாரா பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் கடந்த 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்து விளையாடும் போது என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. ஏனென்றால் அது எனது முதல் ஆஸ்திரேலிய பயணம் அதனால் இந்தமுறை நன்றாக விளையாட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

நான் எனது அணிக்காக தொடர்ந்து ரன்களை சேகரிக்கவே விரும்புகிறேன். முதலாவது டெஸ்டில் நான் சதமடித்தேன் அந்த சதம் எங்கள் அணியின் வெற்றிக்கு உதவியதால் அந்த சதம் எனக்கு சிறப்பான ஒரு சதம் என்று நான் கருதுகிறேன். மேலும் இந்த போட்டியிலும் சதமடித்துள்ளேன். இது போன்று தொடர்ந்து ஆடுவதையே நான் விரும்புகிறேன்.

pujara-1

மேலும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெரும் பட்சத்தில் இந்த சதம் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியினை அளிக்கும். அதேபோன்று இந்திய மைதானம் மற்றும் வெளிநாட்டு மைதானம் என எந்த மைதானமாக இருந்தாலும் நிலைத்து நின்று ரன்களை சேர்க்கவே நான் விளையாடுவேன். இருந்தாலும் எதிரணியின் 20 விக்கட்டுகளையும் நாம் வீழ்த்தியாக வேண்டும். அப்போது தான் நாம் வெற்றியினை முழுவதுமாக கொண்டாட முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

வெளிநாட்டு மைதானங்களில் இந்தியா வெற்றி பெற இதுவே வழி – ரிச்சர்ட்ஸ் கணிப்பு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்