இப்படி பக்குவமான முறையில் ஒரு முறை பருப்பு உருண்டை குழம்பு செய்து பாருங்கள். அளவான சுவையில் அசத்தலாக இருக்கும்

urundai
- Advertisement -

மதிய உணவிற்காக ஏதாவது குழம்பு வகையை செய்து அதற்கு தொட்டுக்கொள்ள காய்கறி பொரியல் அல்லது வற்றல் இவ்வாறு எதையாவது செய்யவேண்டும். ஒரு சில நேரங்களில் வீட்டில் காய்கறி இல்லாத சமயத்தில் உடனடியாக வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே குழும்பு மற்றும் பதார்த்தம் இவை இரண்டிற்கும் ஒன்று சேர்த்தார் போல் இந்த பருப்பு உருண்டை குழம்பை உடனடியாக செய்துவிடலாம். ஒரு சிலருக்கு குழம்பில் போடும் பருப்பு உருண்டை சரியான பக்குவத்தில் வராமல் குழம்புடன் சேர்ந்து கரைந்து விடும். எனவே இதனை பலரும் முயற்சி செய்வதில்லை. ஆனால் குழம்பில் சேர்க்கும் பருப்பு உருண்டை உடையாமல் சரியான பதத்தில் வருவதற்கு இங்கு கூறப்பட்டுள்ள குறிப்புகளை சரியாக பின்பற்றி செய்து பாருங்கள். வாங்க இந்த பருப்பு உருண்டை குழம்பை எப்படி சுவையாக செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

food

தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு – 200 கிராம், பெரிய வெங்காயம் – 4, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 4, புளி – எலுமிச்சை பழ அளவு, இஞ்சி, பூண்டு விழுது – அரை ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், பூண்டு – 5 பல், எண்ணெய் – 5 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி.

- Advertisement -

செய்முறை:
முதலில் கடலைப்பருப்பை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி கழுவி, அதனுடன் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊற வைக்கவேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி கடலை பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியை சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து புளிக்கரைசல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

kadalai-paruppu

பிறகு தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிறிதளவு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அதன்பின்னர் ஐந்து பல் பூண்டை சிறிய உரலில் வைத்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அரைத்து வைத்துள்ள கடலைப் பருப்பு மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொண்டு அதனுடன் பொடியாக நறுக்கிய 2 வெங்காயம், 2 பச்சை மிளகாய், கருவேப்பிலை கொத்தமல்லி மற்றும் இடித்து வைத்துள்ள பூண்டு, அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, அரை ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

urundai-kuzhambu1

அதன்பின் அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து அதனுடன் மூன்று ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

குழம்பில் மிளகாய்த்தூள் வாசனை போன பிறகு பிசைந்து வைத்துள்ள கடலை மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து குழம்பில் சேர்க்க வேண்டும். உருண்டைகள் போடும்பொழுது அடுப்பினை சிம்மில் வைத்து விடவேண்டும். மாவு அனைத்தையும் உருண்டைகளாக பிடித்துகுழம்பபில் சேர்த்தவுடன் கரண்டியை வைத்து கலந்துவிடாமல் சிறிது நேரம் தட்டை போட்டு மூடிவிட வேண்டும்.

urundai-kuzhambu2

7 நிமிடம் கழித்து தட்டை திறந்து உருண்டைகளை மெதுவாக திருப்பிவிட வேண்டும். பின்னர் மறுபடியும் ஒரு 7 நிமிடம் கழித்து நன்றாக கலந்துவிட்டு உருண்டைகள் வெந்து விட்டதா என்று லேசாக உடைத்து பார்த்து, இறுதியாக கொத்தமல்லி இழைகளை தூவி அடுப்பை அனைத்து விட வேண்டும். இவ்வாறு சரியான பக்குவத்தில் செய்தோம் என்றால் உருண்டைகள் உடையாமல் இருக்கும்.

- Advertisement -