இது குலோப் ஜாமுன் இல்லைங்க. சின்ன வயசுல எல்லாம் பேக்கரியில் வாங்கி சாப்பிடுவோம் இல்லையா? பால்பன். அதை மிக மிக சுலபமாக நம் வீட்டிலேயே செய்யலாம் வாங்க.

pal-bun2
- Advertisement -

இதை பார்த்த உடனேயே சில பேருக்கு ஞாபகம் இருக்கும். இதை பேக்கரியில் வாங்கி சாப்பிட்டவர்களுக்கு நன்றாக தெரியும். பால்பன் என்று சொல்லுவார்கள்‌. இது ஒரு ஸ்வீட் ரெசிபி. பார்ப்பதற்கு குலோப் ஜாமுன் போல இருந்தாலும், இதை நாம் குலோப் ஜாமுன் மாவில் செய்யப்போவது கிடையாது. நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே நம் கையாலேயே சுவையாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.  பெரியவர்களுக்கும் இது விருப்பமான ஸ்னாக்ஸ் ஆக இருக்கும். அந்த மறந்து போன பால்பன் ரெசிபியை திரும்பவும் நினைவு கூற ஒரு அழகான ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

இந்த ரெசிபிக்கு நமக்கு 1 கப் மைதா(125 கிராம்), 1 கப் சர்க்கரை, ஏலக்காய் 2, தயிர் 1/4 கப், சோடா உப்பு 1/4 ஸ்பூன், உப்பு 1 சிட்டிகை, நெய் 1 டேபிள் ஸ்பூன், இந்த பன் பொறித்து எடுப்பதற்கு தேவையான எண்ணெய், இந்த பொருட்கள் எல்லாம் தேவை.

- Advertisement -

நாம் எடுத்து வைத்திருக்கும் 1 கப் சர்க்கரையிலிருந்து, 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும். இதோடு 3 ஏலக்காய்க்கு உள்ளே இருக்கும் விதையை போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த அரைத்த சர்க்கரை அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து மீதம் இருக்கும் சர்க்கரையை அந்த கடாயில் போட்டு 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, அந்த சர்க்கரை ஜீராவை காய்ச்சுங்கள். சர்க்கரை ஜீரா நன்றாக கொதித்து வந்து பிசுபிசுப்பு தன்மை வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, இதில் இரண்டு மூன்று சொட்டு எலுமிச்சம்பழச் சாறை விட்டு அப்படியே வைத்தால் ஜீரா கட்டிப் போகாமல் அப்படியே இருக்கும். ஜீரா ஆறிய பிறகு ரொம்பவும் திக்காகி விட்டால் கவலை வேண்டாம் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதை சூடு செய்து கொள்ளவும்.

- Advertisement -

அடுத்து ஒரு அகலமான பவுலில் மைதா மாவு, சோடா உப்பு, ஒரு சிட்டிகை உப்பு, ஏற்கனவே மிக்ஸி ஜாரில் பொடித்து வைத்திருக்கும் சர்க்கரைத்தூள், தயிர், இந்த பொருட்களை எல்லாம் ஊற்றி நன்றாக கலந்து விடவும். இன்னும் கொஞ்சம் தண்ணீர் தேவைப்படும். தண்ணீரை தெளித்து இந்த மாவை, போண்டா மாவு போல கொஞ்சம் தல தலவென பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். மாவு ரொம்பவும் நீர்க்கவும் இருக்கக்கூடாது. ரொம்பவும் கட்டியாகவும் இருக்கக் கூடாது. இந்த மாவை அப்படியே கிள்ளி எடுத்து எண்ணெயில் விட்டு பொரித்தெடுக்கும் பதம் இருக்க வேண்டும். பார்த்து பிசைந்து கொள்ளுங்கள்.

நாம் பிசைந்து வைத்த மாவு 1/2 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மாவு ஊறிய பின்பு, அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெயை ஊற்றி இந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உங்கள் கையாலேயே எடுத்து எண்ணெயில் விட்டு போண்டா போல பொரித்து எடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நைட்டு டின்னருக்கு என்ன செய்றதுன்னு இனி டென்ஷனே ஆக வேண்டாம். ஒரு கப் கோதுமை மாவு இருந்தா பத்து நிமிஷத்துல சிம்பிள்லா இப்படி செஞ்சி கொடுத்துடுங்க

மாவை கையில் தொடும் போது பிசுபிசுப்பாக இருக்கும். உங்களுடைய கையில் எண்ணெய் அல்லது நெய் தொட்டு மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்க. எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது தான் மாவை பொறித்து எடுக்க வேண்டும். இல்லை என்றால் மேலே சிவந்து விடும். உள்ளே மைதா மாவு வேகாதது போல இருக்கும். சூடாக பொரித்த இந்த மைதா மாவு போண்டாக்களை எடுத்து சர்க்கரை ஜீராவில் போட்டு பிரட்டி விட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து சுவைத்து சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவைக்கு குலோப் ஜாமின் சுவை தோற்றுப் போகும். அந்த அளவுக்கு ருசியாக இருக்கும்.

- Advertisement -