பண்டிகைக்கு பலகாரங்கள் செய்யப் போகிறீர்களா? வீட்டில் பலகாரங்கள் செய்யும் பொழுது செய்யும் தவறுகளும், அட்டகாசமான 8 குறிப்புகளும் இதோ உங்களுக்காக!

payasam-laddu
- Advertisement -

பண்டிகை காலம் வந்து விட்டாலே வீட்டில் எதையாவது புத்தம் புதிதாக செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதுமட்டுமல்லாமல் பலகாரங்கள் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அன்றைய நாளை குதூகலமாக கொண்டாடுவது வழக்கம். அப்படி பண்டிகை காலங்களில் பலகாரங்கள் செய்யும் பொழுது நாம் செய்யும் தவறுகளும், அட்டகாசமான 8 குறிப்புகளை பற்றிய தகவல்களையும் தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

குறிப்பு 1:
பலகாரங்கள் செய்யும் பொழுது தயாரிக்க பயன்படும் பாகில் ஃபுட் கலர் அதிகம் தெரியாமல் கொட்டிவிட்டால், அதில் பெரிய அளவில் இருக்கும் பிரெட் துண்டு ஒன்றை போட்டு முக்கி எடுங்கள். நிறமியை பிரட் ஓரளவுக்கு உரிந்து கொள்ளும். இதனால் பாகு கலர் சரியாக அமையும்.

- Advertisement -

குறிப்பு 2:
பொரியல் செய்யும் பொழுது வேக வைக்க தண்ணீரை தெளிக்கும் பொழுது தெரியாமல் நிறைய தண்ணீர் சேர்த்து விட்டால், உடனே பதட்டப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களிடம் இருக்கும் பருப்புப் பொடியை கொஞ்சம் எடுத்து தூவி விடுங்கள். அதிகப்படியான தண்ணீரை இந்த பொடி உரிந்து, பொரியல் உதிரியாக கொடுக்கும்.

குறிப்பு 3:
மைசூர் பாகு கெட்டியாக இல்லாமல் நன்கு மிருதுவாக வருவதற்கு ஒரு கப் கடலை மாவுடன், 3 கப் அதே அளவில் சர்க்கரை மற்றும் 3 கப் அதே அளவில் நெய் சேர்த்து செய்து பாருங்கள் அட்டகாசமாக வரும்.

- Advertisement -

குறிப்பு 4:
பண்டிகை பலகாரங்கள் செய்யும் வேளையில் தெரியாமல் தீக்காயம் ஏற்பட்டால் உடனே அதில் தேனை தடவ வேண்டும். அதன் பிறகு வாழை மட்டையின் சாற்றை விட்டு, வாழை இலை கொண்டு கட்டு போட்டால் விரைவாக ஆறும். பலகாரங்கள் செய்ய எப்பொழுதும் பெரிய கரண்டிகளை பயன்படுத்த வேண்டும். கைத்தறி உடைகளை அணிந்து கொண்டு செய்ய வேண்டும்.

குறிப்பு 5:
வீட்டில் லட்டு செய்பவர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இது தான்! அதிக நாட்கள் லட்டு பிசுபிசுப்புத் தன்மையோடு, ஈரப்பதத்துடன் இருக்க அதில் டைமண்ட் கல்கண்டு சேர்க்க வேண்டும். டைமண்ட் கல்கண்டு காற்றில் கரையும் எனவே அதிக நாட்கள் உலர்ந்து போகாமல் இருக்க இது உதவுகிறது. மேலும் முக்கால் பதம் வெந்ததும் பூந்தியை பாகில் போட்டு விட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

குறிப்பு 6:
பண்டிகை காலங்களில் ஏற்படும் வயிற்று உப்புசத்தை தடுப்பதற்கு அன்றைய நாளில் தனியா விதை, மிளகு, சீரகம் ஆகியவற்றை தலா 3 டீஸ்பூன் வெறும் வாணலியில் வறுத்து, 3 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க இஞ்சி தட்டி போட்டு பாதியாக சுண்டியதும் இறக்கி அதில் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு, அரை மூடி எலுமிச்சை சாறும் கலந்து குடித்தால் பித்தம் தணிந்து, வாயு தொல்லை நீங்கி, ஜீரணம் ஆகிவிடும்.

குறிப்பு 7:
பண்டிகை காலங்களில் பஜ்ஜி மாவு அதிகம் செய்ய வேண்டும் என்றால் கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம், பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பஜ்ஜி மாவு கரைத்து, வாழைக்காய் பஜ்ஜி சுட்டு பாருங்கள், கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காத பஜ்ஜி ரெடி!

குறிப்பு 8:
பண்டிகை காலங்களில் பாயாசம் வைக்கப் போகிறீர்கள் என்றால் இப்படி வைத்து பாருங்கள். சேமியா, ஜவ்வரிசி போட்டு செய்யும் பாயாசங்களுக்கு காய்ச்சிய பசும்பாலை சேர்த்து பாயாசம் வைக்கலாம். அதே போல அரிசி பாயாசம், பயத்தம் பருப்பு பாயாசம் செய்யும் பொழுது வெல்லத்துடன் தேங்காய் பால் சேர்த்து செய்து பாருங்கள், சூப்பராக இருக்கும். கேரட், சுரைக்காய், பூசணி ஆகியவற்றை மில்க் மெய்டு சேர்த்து கீர் போல செய்து பாருங்கள், பாசத்தை விட சுவையாக இருக்கும்.

- Advertisement -