பச்சை மிளகாய் ஒரு காய் கூட உங்கள் செடியில் காய்க்கவில்லையா? பூச்செடியில் பூச்சி தொந்தரவா? இதற்கு பழைய சாதம் தண்ணீரை எப்படி பயன்படுத்துவது?

chilli-rose-rice-water
- Advertisement -

ஆசை ஆசையாக வளர்க்கும் செடிகளில் ஒரு காய் கூட காய்க்கவில்லை என்றால் நமக்கு மிகவும் வேதனையாக இருக்கும். அது மட்டுமல்லாமல் பூத்துக்குலுங்கும் பூச்செடிகள் திடீரென பூச்சி தொந்தரவுக்கு உள்ளானால் நாம் பதட்டப்பட்டு போவோம். இதற்கு பத்து பைசா செலவில்லாமல் வீட்டில் இருக்கும் பழைய சாதம் தண்ணீரை வைத்தே சுலபமாக வளர்ச்சி ஊக்கியாக உரம் கொடுக்கலாம். அதை எப்படி தயாரிப்பது? என்ன செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கொத்துக் கொத்தாக பூத்து கொண்டிருந்த ரோஜா செடியில் சரியான வளர்ச்சி ஊக்கி கொடுக்காத பட்சத்தில் அதன் இலைகள் காய்ந்து போக வாய்ப்புகள் உண்டு. மேலும் பூச்சி அரிப்பு ஏற்பட்டு இலைகள் எல்லாம் சுருண்டு போய் விடும் அபாயமும் உண்டு. பச்சையாக இருக்க வேண்டிய இலைகள், மஞ்சள் நிறத்தில் மாறும் பொழுதே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே போல பச்சை மிளகாய் செடியை விதை போட்டு வளர்த்து வருபவர்களுக்கு அதில் பச்சை மிளகாய் காய்க்கவில்லை என்றால் என்ன செய்வது? என்பது தெரியாது!

- Advertisement -

ரொம்பவே சுலபமாக பக்க கிளைகள் அதிகமாக முளைத்து, பச்சை நிற காய்கள் கொத்துக் கொத்தாக பெரிய பெரியதாக காய்க்க செய்யக்கூடிய இந்த உரத்தை இப்படி பயன்படுத்துங்கள். பழைய சோறு தண்ணீர் என்பது முந்தைய நாள் வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் தண்ணீர் தான். பழைய சாதம் தண்ணீர்! இந்த நீரில் இருக்கும் சத்துக்கள் மனிதனின் உடம்பு மட்டும் அல்லாமல் செடி, கொடிகளுக்கும் நல்ல ஒரு உயிரோட்டத்தை கொடுக்கக் கூடிய அற்புதமான உரமாக இருந்து வருகிறது.

உங்கள் வீட்டில் பழைய சாதம் மீந்தால் அதை இனி குப்பையில் கொட்டி விடாதீர்கள். முந்தைய நாள் இரவே ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை மட்டும் தனியாக வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். சாதத்தை வடாம் காய வைக்கவும், இந்த தண்ணீரை செடி, கொடிகளை வளமாக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நீரை உப்பு போட்டு குடித்தால் உடலில் இருக்கும் உஷ்ணம் தணிந்து, உடல் நல்ல குளிர்ச்சி பெறும். இந்த வெயில் காலத்தில் இதை தினமும் ஒரு டம்ளர் குடித்து வருபவர்களுக்கு வெயிலினால் வரக்கூடிய நோய் தாக்குதல்கள் உண்டாகாமல் இருக்கும்.

- Advertisement -

இந்த பழைய சாத நீர் 1 லிட்டர் எடுத்துக் கொண்டால், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து கொள்ளுங்கள். மஞ்சள் தூள் கிருமி நாசினியாக செயல்படும் என்பதால் இந்த பழைய சாதத்துடன் சேரும் பொழுது நிறையவே நல்ல ஆற்றல்களை பெருக்கி தரும். ரோஜா செடிகளில் இருக்கும் பிரச்சனைகளை, பூச்சி அரிப்புகளை சரி செய்வதற்கு இந்த தண்ணீரை நன்கு கொஞ்சம் கூட கெட்டியாக இல்லாமல் துணியால் வடிகட்டி நீராக எடுத்துக் கொள்ள வேண்டும்.

வடிகட்டிய இந்த சுத்தமான நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து கொள்ளலாம். பின்னர் உங்களுக்கு காலை, மாலை என்று எந்த நேரத்தில் தேவையோ, அந்த நேரத்தில் இந்த தண்ணீரை செடிகளின் மீது ஸ்ப்ரே செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடியது. வேர்கால்களில் ஊற்றினாலும் சிறப்பான பலன்கள் உண்டு. அதே போல பச்சை மிளகாய் செடிகளுக்கும் காலை, மாலை என இரு வேளை இந்த தண்ணீரை ஊற்றி வந்தால் இரண்டு வாரத்தில் மிளகாய் செடி நன்கு காய்க்கத் துவங்கிவிடும். அதன் பிறகு என்ன அமோகமான விளைச்சல் தான்!

- Advertisement -