உங்க வீட்டுக்குள்ள ஜன்னல் வழியாக கூட, இனி பல்லியோ கரப்பான் பூச்சியோ நுழையாது. இந்த ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிந்திருந்தால்.

palli
- Advertisement -

பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் இந்த பல்லி கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து தப்பிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். பல்லி தொல்லையிலிருந்து விடுபடவும், கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து விடுபடவும் கடையில் நமக்கு ஏகப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றது. ஆனால் அதை எல்லாம் சில பேர் வாங்கி பயன்படுத்துவார்கள். சில பேருக்கு அது கெமிக்கல் கலந்த பொருட்கள் என்ற பயம் இருக்கும். வாங்க மாட்டாங்க. உங்களுடைய வீட்டில் பல்லி கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு இயற்கையான முறையில் ஒரு ஐடியா தேவை என்று நினைக்கிறீர்களா, இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்காக. இதை செய்தால் நிச்சயமாக உங்களுடைய வீட்டில் பல்லி கரப்பான் பூச்சி தொல்லை குறையும்.

பல்லி கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து விடுபட வீட்டு குறிப்பு:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. அதில் தோல் உரித்த சின்ன வெங்காயம் 5 பல், பூண்டு 2 பல், 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா, வினிகர் 1 சின்ன மூடி, டெட்டால் 1 சின்ன மூடி, இந்த பொருட்களை எல்லாம் போட்டுவிட்டு 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி இதை விழுதாக அரைக்கவும். அரைத்த இந்த விழுதை வடிகட்டிக்கோங்க. நமக்கு தேவையான லிக்விட் கிடைத்திருக்கும். தேவைப்பட்டால், இதில் இன்னும் கொஞ்சம் 1/2 டம்ளர் அளவு தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். ரொம்பவும் தண்ணீர் ஊற்றி விட்டால் இதில் இருக்கும் வாசம் நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த ஸ்ப்ரேவை ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இதை சிங்குக்கு அடியில் ஸ்பிரே செய்யலாம். சமையலறை ஸ்டவுக்கு மேலே ஸ்பிரே செய்யலாம். சமையலறை கபோர்டுக்கு உள்ளேவும் ஸ்பிரே செய்யலாம். இந்த வாடைக்கு அந்த இடத்தில் கரப்பான் பூச்சி பல்லி தொல்லை இருக்காது. அதேபோல ஜன்னல் ஓரங்களில் இதை ஸ்பிரே செய்து விடுங்கள். ஜன்னல் பக்கமாக கூட உங்களுக்கு பல்லி, சின்ன சின்ன பூச்சிகள் தொல்லை வீட்டிற்குள் வராமல் இருக்கும்.

2 நாட்களுக்கு ஒரு முறை இந்த ஸ்பிரேவை தொடர்ந்து பயன்படுத்தி வர, நிரந்தரமாக வீட்டில் பூச்சி தொல்லையில் இருந்து தப்பிக்க முடியும். இது ஒரு எளிமையான குறிப்பு தான். இதில் நாம் எந்த ஒரு செயற்கையான பொருட்களையும் கலக்கவில்லை. ஆகவே பயப்படாமல் இதை நீங்கள் குழந்தைகள் இருக்கும் வீட்டில் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

குறிப்பாக சமையலறையில் இப்படிப்பட்ட ஸ்பிரேவை அடிப்பதன் மூலம் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ராத்திரி தூங்கும்போது சிங்க் ஓட்டைக்கு உள்ளே கொஞ்சமாக இந்த லிக்விடை ஊத்திடுங்க. அதன் வழியாக கரப்பான் பூச்சி வீட்டிற்குள் நுழையாமல் இருக்கும். (இந்த லிக்விடை சின்ன பஞ்சில் நனைத்து, அந்த பஞ்சை சிங் ஓட்டைக்கு மேலே வைத்து விடலாம்.)

இதே போல இன்னொரு ஐடியாவும் இருக்கு. நீங்கள் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், முட்டை ஓடு உங்களுடைய வீட்டில் இருக்கும் அல்லவா. அந்த முட்டை ஓட்டை சுத்தமாக தண்ணீரில் கழுவி விடுங்கள். அதாவது வேக வைக்காமல் பச்சையாக ஆம்லெட் போட பயன்படுத்தும் முட்டை ஓட்டை, உள்ளே அந்த முட்டை வாடை போக கழுவி வெயிலில் காய வைத்து விடவும்.

இதையும் படிக்கலாமே: முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க இயற்கையான இந்த அழகு குறிப்பு போதும். தேவையற்ற முடிகள் எல்லாம் தானாக நிரந்தரமாக உதிர்ந்து போகும்.

இந்த முட்டை ஓடுகளை சமையலறை கபோர்டுக்கு உள்ளே வைத்தால் பல்லி சுத்தமாக வராது. ஆனால் பத்து நாட்களுக்கு ஒரு முறை இந்த முட்டை ஓட்டை புதுசாக மாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலே சொன்ன இந்த ஐடியா பிடித்தவர்கள் முயற்சி செய்து பலன் பெறலாம்.

- Advertisement -