பூஜை பாத்திரங்களை கை வலிக்க தேய்க்காம சிறிது நேரம் இதில் ஊற விட்டு எடுத்தா போதும் பளிச்சின்னு மின்னும். பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய இதை விட எளிமையான வழி இருக்க வாய்ப்பே இல்லை.

pooja vessels Cleaning tips
- Advertisement -

இந்த பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது எப்பவுமே ஒரு சவாலான வேலை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் எப்படி சுத்தம் செய்தாலும் சிறிது நேரத்திற்கெல்லாம் கறுத்துப் போய் விடும். அந்த கொஞ்ச நேரம் பளிச்சென்று  இருப்பதற்கு அதிகமாக மெனக்கிட வேண்டி இருக்கும். அதற்காக அதை தேய்க்காமலும் ஏற்ற முடியாது அல்லவா. நாம் செய்யும் பூஜை மனநிறைவோடு இருக்க வேண்டும் எனில் முதலில் பூஜை பாத்திரங்கள் பளிச்சென்று இருக்க வேண்டும்.

இப்படி நம் பூஜை பொருட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிக மிக அதிகம் தான். அப்படி ஒரு இறை நம்பிக்கையோடு தொடர்புடைய இந்த வேலையை நாம் மிகவும் சுலபமாகவும், அதே சமயம் மனநிறைவுடனும் செய்ய ஒரு எளிய வழிமுறையை தான் இந்த வீட்டுக் குறிப்பு குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பூஜை பாத்திரங்களை எளிமையாக சுத்தம் செய்ய
முதலில் பூஜை பாத்திரங்களில் இருக்கும் எண்ணெய் பிசுக்களை ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணி வைத்து துடைத்து எடுத்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் நாம் தண்ணீரில் மொத்தமாக ஊற வைக்கும் போது ஒரு பாத்திரத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு மற்ற பாத்திரத்தில் படியாமல் இருக்கும்.

அடுத்து நீங்கள் வைத்திருக்கும் பூஜை பாத்திரங்கள் முழுகும் அளவிற்கு ஒரு பாத்திரம் அதில் தண்ணீரும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு புளி கொஞ்சம் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் இவற்றுடன் ஒரு முழு எலுமிச்சை பழத்தின் சாறை கலந்து நன்றாக புளியை தண்ணீரில் கரையும் வரை கரைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் பூஜை பாத்திரத்தை இதில் போட்டு அரை மணி நேரம் வரை ஊற விடுங்கள்.

- Advertisement -

அரை மணி நேரம் கழித்து பூஜை பாத்திரங்களை எடுத்துப் பாருங்கள் அப்போதே பளிச்சென்று மாறி விடும். சில பாத்திரங்களின் மூளை முடுக்குகளில் ஒன்று இரண்டு பிசுக்குகள் தங்கி இருந்தால் அதை மட்டும் தேங்காய் நார் வைத்து தேய்த்து விடுங்கள். பூஜை பாத்திரங்கள் அனைத்தும் புதிதாக வாங்கியது போல பளிச் சென்று இருக்கும். இந்த முறையில் சுத்தம் செய்யும் போது நாம் கை வலிக்க பூஜை பாத்திரங்களை தேய்க்க வேண்டிய அவசியமே கிடையாது.

இப்படி பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்த பிறகு வேறு ஒரு சுத்தமான தண்ணீரில் அலசிய பின்பு ஈரம் இல்லாமல் துடைத்து விட்டு சிறிது நேரம் வெயிலில் காய வைத்து எடுத்து அதன் பிறகு நீங்கள் எண்ணெய் ஊற்றி திரி போட்டு பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். பூஜை பாத்திரங்கள் பளிச்சென்று பார்க்க மனநிறைவோடு இருக்கும் உங்கள் பூஜையும் முழுமை பெறும்.

இதையும் படிக்கலாமே: சோப்பு, தண்ணி எதையும் பயன்படுத்தாமல் உங்க வீட்ல இருக்க பழைய எவர்சில்வர் பாத்திரத்தெல்லாம் புதுசு போல மாத்த இத கொஞ்சம்பாத்திரங்கள் மேல தூவி விட்ருங்க போதும்.

இந்த வீட்டு குறிப்பு பதிவில் உள்ள பூஜை பாத்திரங்கள் சுத்தம் செய்யும் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் இனி நீங்களும் இதுபோல சுத்தம் செய்து கொள்ளலாம்.

- Advertisement -