கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தை நெறிக்கும் கடனுக்கு ஒரே தீர்வு கிடைக்க வேண்டுமா? பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த 4 வரி மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் கூட போதுமே.

kadan-loan-compressed

மனிதர்களுக்கு கஷ்டம் என்று வரும்போது, இறைவனால் நேரே வந்து உதவி செய்ய முடியாது. இந்த காரணத்தினால் தான், அந்த இறைவன் சில மகான்களை நமக்காக மனித ரூபத்தில் படைத்திருக்கிறார். நம்முடைய இந்து சாஸ்திரத்தில், இறைவழிபாட்டிற்க்கு நிகராக, மகான்களின் வழிபாடும் சொல்லப்பட்டிருக்கின்றது. அந்த வரிசையில் இன்று நமக்கு இருக்கக்கூடிய தீராத கடன் சுமை தீர, கடன் வாங்குவதற்கான சூழ்நிலையை நமக்கு அமையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பாம்பன் சுவாமிகள் அருளிய, சஸ்திர பந்தத்தைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பாம்பன் ஸ்வாமிகளுடைய இயற்பெயர் குமரகுருதாச சுவாமிகள் ஆகும். ராமேஸ்வரத்தில் பாம்பன் என்ற இடத்தில் இவர் பிறந்ததால் இவருக்கு பாம்பன் சுவாமிகள் என்ற பெயர் வந்தது. இவருக்கு முருகப்பெருமானின் அருள் முழுமையாக இருப்பதாக சாஸ்திர குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. பலமுறை முருகப் பெருமானையே நேரில் கண்ட பாக்கியமும் இவருக்கு உண்டு என்பதாகவும் சில குறிப்புகளில் உள்ளன. அந்த அளவிற்கு முருகனின் மேல் பக்தி கொண்டு தன்னுடைய 12 வயதில் இருந்தே முருகரை பற்றிய பாடல்களை இவர் இயற்றி வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் நம் துயரை துடைக்க கூடிய, நம்மை கஷ்டத்தில் இருந்து காக்கும் கவசமாக இருக்கக்கூடிய, ஒரு பாடலை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்தப் பாடலை உச்சரிப்பதற்கு முன்பாக பூஜை அறையில் முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு பூமாலை சூட்டி விட்டு, நெய்தீபம் ஏற்றி வைத்துவிட்டு, நம்பிக்கையோடு உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ளலாம்.

kadan

குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு பெரிய பிரச்சனை, பணப்பிரச்சனை, கடன் பிரச்சனை. இந்த கடன் பிரச்சனை தீர வேண்டும். கடன் வாங்கும் எண்ணமே உங்களுக்கு வரக்கூடாது. கடனை அடைப்பதற்கு முயற்சிகளை மேலும் மேலும் எடுப்பதற்கு, உங்களது உடலிலும் மனதிலும் ஆரோக்கியமும் தெம்பும் தேவை என்று, வேண்டிக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். உங்களை கவசம் போல காக்கப் போகும் பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம் இதோ!

- Advertisement -

வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால்வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேல வா.

கடன் பிரச்சினை இருப்பவர்களுக்கு மட்டும் தானா இந்த மந்திரம்? இல்லை. தொழிலில் முன்னேற்றம் அடைய, வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் சுலபமாக காணாமல் போவதற்கும், இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். முருகனுக்கு உகந்த இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு, பாம்பன் ஸ்வாமிகளையும் ஒருமுறை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு மந்திரத்தை உச்சரிக்க தொடங்கலாம்.

Lord Murugan Vel

தினம்தோறும் இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள், வாரத்தில் ஒரு முறை செவ்வாய்க்கிழமையில் மட்டுமாவது 27 முறை உச்சரிக்க வேண்டும். வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத மாற்றங்கள் எதிர்பாராத திருப்பங்கள் அமைவதை சில நாட்களில் உணர முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அதிர்ஷ்டம் அடித்துக்கொண்டே இருக்க உங்களோட பர்ஸ்ல இத மட்டும் வச்சு பாருங்க, சொன்னா நம்பமாட்டீங்க! பணம் சுரந்து கொண்டே இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.