இந்த பொருட்களை எல்லாம் உங்கள் வீட்டு பீரோவில் எக்காரணத்தைக் கொண்டும் ஒன்றாக சேர்த்து வைக்காதீர்கள். வருமானம் வந்து கொண்டே இருந்தாலும், கையில் பணம் தங்காமல் போக இதுவும் ஒரு காரணம்.

cash-images

நம் வீட்டு பீரோ தான், மகா லட்சுமி வாசம் செய்யும் இடம். அந்த பீரோவில் தான் நாம் பயன்படுத்தக்கூடிய புதிய துணிகள், அணிந்துகொள்ளும் தங்க நகைகள், பணம், இப்படிப்பட்ட பொருட்களை வைத்து பாதுகாப்போம். இதுதவிர சொத்து பத்திரங்கள் மற்ற முக்கியமான விஷயங்களையும் அந்த பீரோவில் தான் வைக்கின்றோம். நம்முடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் இந்த பீரோவில் நாம் எந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து வைக்க கூடாது. அப்படி வைத்தால் எப்படிப்பட்ட பிரச்சினைகள் நமக்கு ஏற்படும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Today Gold rate

நேரடியாக பதவிக்கே சென்றுவிடலாம். முதலில், உங்கள் வீட்டு பீரோவில் தங்க நகைகளையும் வெள்ளி நகைகளையும் ஒரே நகை பெட்டியில் போட்டு வைக்கக்கூடாது. அப்படி ஒரே பட்டியல் போட்டு வைத்தாலும், இரண்டு தனித்தனி மஞ்சள் பைகளிலோ அல்லது தனித்தனி டப்பாவில் போட்டு வையுங்கள். தங்க நகை வியாபாரம் செய்பவர்கள் கூட, தங்கத்தையும் வெள்ளியையும் ஒருசேர வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

சில பேரது வீட்டில் மரத்தினால் செய்யப்பட்ட நகை பெட்டியில், நகையை வைப்பார்கள். ஜூவல் பாக்ஸ் என்று சொல்வார்கள் அல்லவா? குறிப்பாக ஜூவல் பாக்ஸில் கண்ணாடி வைத்தால் நல்லது. கண்ணாடி வைத்த அந்த நகை பெட்டியில், நகை மேலும் மேலும் சேரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

silver-ring

உடைந்த நகைகளையும், பழுதான உபயோகப்படுத்தாத நகைகளையும், நீங்கள் அணிந்து கொள்ளும் உபயோகப்படுத்தக்கூடிய நல்ல நகைகளையும், ஒன்றாக வைக்கக்கூடாது. உடைந்தத நகையாக இருந்தாலும், அதனுடைய பிரதிபிம்பம் கண்ணாடியில் படும் போது, நமக்கு சில கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

சரி, சனி பகவானுக்கு உரியது இரும்பு. வேறு வழி கிடையாது. இப்போது நிறைய பேர் வீட்டில் இரும்பு பெட்டியில் தான் பீரோ இருக்கின்றது. கட்டாயம், நகை வைப்பதற்காகவும், பணம் வைப்பதற்காகவும் ஒரு மரத்தினால் செய்யப்பட்ட பெட்டியை, பீரோவுக்குள் நீங்கள் வாங்கி வைத்துக் கொள்வது தான் நல்லது.

kalla-petti

அந்த காலத்தில் கல்லாப் பெட்டிகள், கஜானா பெட்டிகள் மரத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. தேக்கு மரம், சந்தன மரம் போன்ற விலை உயர்ந்த மரங்களில் பணப் பெட்டிகள் செய்யப்பட்டு வந்தன. குறிப்பாக, விஷயம் தெரிந்தவர்கள் கல்லாப்பெட்டி செய்யும் போதும், கஜானா பெட்டி செய்யும் போதும், அதற்கான வேலைப்பாடுகளுக்கு இரும்பு ஆணியை கூட பயன்படுத்த மாட்டார்கள். முடிந்தால் பித்தளை ஆணியை பயன்படுத்துவார்கள். இல்லை என்றால் கட்டையால் செய்யப்பட்ட ஆப்பு என்று சொல்வார்கள் அல்லவா? அதை பயன்படுத்தி தான் பணப்பெட்டியை தயார் செய்வார்களாம். எத்தனை சூட்சமம் ஒளிந்திருக்கிறது என்று பாருங்கள். உங்கள் வீட்டில் பணமாக இருந்தாலும், நகையாக இருந்தாலும் அதை இரும்பின் மேல் படாமல், மரத்தில் சின்ன டப்பா வாங்கி வைத்தாவது அதன் உள்ளே போட்டு வையுங்கள் அதுதான் நல்லது.

bero

முடிந்தவரை, நீங்கள் அணிந்த அழுக்குத் துணிகளை கொண்டுபோய் துவைக்காமல் பீரோவில் வைக்க வேண்டாம். என்னதான் நாகரீக மோகத்தில் நாம் நம்முடைய வாழ்க்கையை மாற்றி வந்தாலும், அழுக்குத் துணிகளை பணம் வைக்கும் பீரோவில் வைப்பது என்பது கொஞ்சம் சங்கடம் தரக்கூடிய விஷயம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

cash-box-mirror

நமக்கு வரக்கூடிய பல கஷ்டங்களுக்கு எல்லாம் நாம் செய்யும் இந்த தவறுகள் மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாது. இதையும் தாண்டி நமக்கு என்று ஒரு தலையெழுத்து இருக்கத்தான் செய்கின்றது. கஷ்ட காலங்களில் மேலும் கஷ்டம் வராமல் இருக்க, நல்ல நேரத்தில் அதிர்ஷ்ட காத்து நம்மை நோக்கி வேகமாக வீச, இப்படிப்பட்ட சின்ன சின்ன தவறுகளை நாம் திருத்திக் கொள்வது நமக்கு பெரிய பெரிய பலன்களை அள்ளித் தரும் என்பதற்காகவே சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் தான் இவை. நம்பிக்கையோடு, சின்ன சின்ன மாற்றங்களை கொண்டு வந்து, பெரிய அளவிலான நன்மைகளை எல்லோரும் பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பூர்வ ஜென்மத்தில் நாம் செய்த பாவ கணக்குகள் கூட, இந்த ஜென்மத்தில் புண்ணியமாக மாறும். பறவைகளுக்கு இப்படி உணவு வைத்தால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.