- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவை அதிகரிக்க ஆலமர பரிகாரம்

பண வரவை அதிகரிக்க ஆலமர பரிகாரம்

- Advertisement -

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

என்ற இந்த திருக்குறளின் வரிகளை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. இவ்வுலகில் வாழ்வதற்கு பொருள் எத்தனை அவசியமானது என்பதை எளிதாக விளக்கக் கூடிய ஒரு தான் குரல் இது. பொருளின் அருளின் தேவையை அன்றே உணர்ந்து நம் சான்றோர்கள் எழுதிய அற்புதமான வரிகள் என்றும் இதை சொல்லலாம்.

அத்தகைய பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றதே அன்றி ஒரு சதவீதம் கூட குறைவில்லை. அப்படியானால் அந்த பணத்தை நாம் சம்பாதிக்க அதிக அளவு உழைப்பு முயற்சி அனைத்தையும் செலுத்த வேண்டும். இவையெல்லாம் செய்து நம்மிடம் வரும் பணம் வீண்விரயம் ஆகாமல் தங்கி பெருக வேண்டும். நம்மில் பலரும் இரவு பகல் பாராமல் அயராது உழைத்துக் கொண்டு தான் இருப்போம்.

- Advertisement -

வருமானமும் ஓரளவிற்காவது வரத் தான் செய்யும். ஆனால் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட நம்மால் சேர்க்க முடியாது. பணம் சேர்க்க முடியாததே பெரும் துன்பம் என்றால் இருக்கும் பணமும் விரையம் ஆனால் இது அதை விட துயரம். வருடம் முழுவதும் நம்மிடம் பணம் வந்து கோனே இருக்கவும் வந்த பணம் வீண் விரையம் ஆகாமல் பெருகுவதற்கான எளிய பரிகார முறையை பற்றி தான் ஆன்மீகம்குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பணம் வீண் விரயம் ஆகாமல் பெருக பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஆலமரம் கட்டாயம் ஆக தேவை. ஆகையால் உங்கள் வீட்டில் அருகில் ஆலமரம் எங்கு உள்ளது என்று பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். ஆலயத்தில் இருக்கக் கூடிய ஆலமரமாக இருந்தாலும் பரவாயில்லை.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வருடத்தின் முதல் நாளான இன்றே செய்வது மிகவும் நல்லது. அப்படி செய்ய முடியாதவர்கள் உங்களுடைய ராசியில் சந்திராஷ்டமம் இல்லாத நாளில் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்யக் கூடிய நேரம் ராகு காலம் எமகண்டம் இல்லாத இருந்தாலே போதும் வேறு எதையும் பார்க்க வேண்டியதில்லை.

முதலில் நீங்கள் இந்த ஆலமரம் இருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். கையில் எதையும் கொண்டு செல்ல வேண்டாம். அங்கு ஆலமரத்தின் அடியில் ஏதேனும் செடிகள் முளைத்துள்ளதா என்று பாருங்கள். ஏனெனில் ஆலமரத்தின் நிழலில் செடிகள் ஏதும் வளராது என்று சொல்வார்கள். அதையும் மீறி ஏதேனும் ஒரு செடி வளர்ந்து இருந்தால் அதை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்.

- Advertisement -

இந்த மரம் கோவில் இருக்கும் இடத்தில் இருந்தால் மிகவும் நல்லது. இந்தச் செடியை கொண்டு வரும் போது அதை சுற்றியுள்ள மண் வேருடன் கொண்டு வர வேண்டும். ஏனெனில் நாம் இந்த செடியை கொண்டு வந்து வீட்டில் தொட்டியில் வைத்து வளர்க்க வேண்டும். ஆகையால் செடியை தோண்டி எடுக்கும் போது கவனமாக செய்யுங்கள்.

இந்தச் செடியை வீட்டில் நட்டு வளர்த்து வரும் பொழுது இந்த செடி எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறதோ, அந்த அளவிற்கு வருமான உயரும். வீண் விரயங்கள் குறையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பணம் வீண் விரையம் ஆகாமல் இருந்தாலே அதுவே பெரிய சேமிப்புக்கு சமம். ஏனெனில் பல இடங்களில் தேவையில்லாத வீண் செலவலே அவர்கள் முன்னேற்றம் தடைப்பட்டு கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஜனவரி முதல் நாள், முதலில் பார்க்க வேண்டிய பொருள்

அத்தகைய தன்மை மாறி பணம் நம்மிடம் தங்கி பல மடங்கு பெருக இது ஒரு அற்புதமான பரிகாரமாக சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்